Tuesday, April 16, 2019

வேலூர் தேர்தல் ரத்து அப்போது ராதாகிருஷ்ணன் தொகுதி ரத்தாகாதது ஏன்? கவிஞர் தணிகை.

வேலூர் தேர்தல் ரத்து அப்போது ராதாகிருஷ்ணன் தொகுதி ரத்தாகாதது ஏன்? கவிஞர் தணிகை.

Next one is Thoothukudi?

Image result for election 2019



வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் இரத்து என்பது இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு மக்களவைக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. ஏன் சென்னை ஆர் கே நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு பின் நடத்தப்பட்டபோது இதே பிரச்சனை எழுந்ததே அப்போதும் தேர்தல் ஆணையம் அந்த தேர்தலை நடத்தி முடித்ததே ஏன்?

இப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு இருக்கிறது... அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக...ஸ்டாலின் கேள்வியில் பொருள் உள்ளது  கனிமொழி வீட்டில் சோதனை நடப்பது சரிதான் ஆனால் ஏன் தமிழிசை வீட்டில் நடக்கவில்லை, ஏன் ஓபிஎஸ் மகன் வீட்டில் நடக்கவில்லை என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அது சரிதான் எந்த வித பாரபட்சமுமின்றி எல்லாக் கட்சி வேட்பாளரையும் அணுக வேண்டும். அது ஆளும் கட்சிக்கு ஒர் மாதிரியாக ஆதரவும் எதிர்க்கட்சிகள் மேல் ஆளும் கட்சியின் தூண்டுதல் பேரில் நடப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இதனடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தேர்தல் இப்படி காபந்து சர்க்கார் அல்லது ஆளும் கட்சியின் தலைமையின் கீழ் நடைபெறுவதே சரி இல்லை. இங்கே தமிழகத்தில் அவரவர்களின் ஊடகத்தில்  அவர்களுக்கு எதிரானவர்கள் பால் நடந்து வரும் நடவடிக்கையை எடுத்து கொம்பூதுகிறார்கள்.

இவை ஒரு புறமிருக்க சென்னை துறைமுக அலுவலம் தேர்தல் நாளன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்படி அரசு அலுவலகமே நடைபெற்றால் எப்படி 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்கும் என்ற கேள்விகளையும் வீசியிருக்கிறார்கள்...

அரசு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வாக்குப்பதிவு நாளன்று கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கும் நிலையில்...


கூலி வேலைக்காரர்கள், அன்றாடம் காய்ச்சிகள், கொத்து வேலை, மரவேலை கம்பி கட்டுதல் கட்ட பணி சார்ந்த வேலைகள், வண்னம் பூசும் வேலை  இப்படி தனியார் சிறு குறு முதலாளிகளிடம் பணி புரியும் பொருத்துனர்கள், பற்ற வைப்பாளர்கள், இயந்திர வேலை செய்வார் அனைவர்க்கும் எப்போதுமே தினமும் பணி வாய்ப்பு என்பது இருக்கும் என்று சொல்வதற்கில்லை

அவர்கள் ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் மிகக் குறைந்த பட்சம் 200ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு இழப்பு.

அரசுப் பணி புரிவோர்க்கும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவார்க்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வாக்களிக்கத் தரும்போது எங்களுக்கு என்ன கிடைக்கிறது \

எனவே கட்சிக்காரர் தரும் தேர்தல் திருவிழா காசை நோம்பி காசை  நாங்கள் பெற்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அப்படித்தான் ஆரம்பித்ததோ அல்லது கட்சிக்காரர்கள் கொடுத்ததால் ஆரம்பித்ததோ இந்த தேர்தலுக்கு வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருகிறது...இப்போதுதான் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது...

அதற்காக அப்படி வாக்குக்காக பணம் பெறும் ஏழையரை நாய் என்றெல்லாம் முன்னால் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பேசியதும் தவறுதான்.

இது போன்ற கூலி வேலை செய்து கொண்டு அன்றாடம் காய்ச்சிகளாய் இருந்து வாழ்ந்து வரும் மக்களிடம் சுத்தம் இருக்காதுதான், அவர்கள் வாழ்நிலையோ கீழ் தரமானதுதான்...என்றாலும் இவர்கள் தாம் வாக்குச் சாவடிக்கு நேரடியாகச் சென்று தமது வாக்கை தவறாக   தவறாமல் வாங்கிய காசுக்கு ஏமாற்றாமல்
 அளிப்பவர்கள் எனவே கட்சிகள் இவர்களை நம்பி களத்தில் பணத்தை இறைக்கின்றன. இதற்கெல்லாம் மாற்று வேண்டும் என்ற கருத்தில் மாறுபாடு இல்லை. அது எங்கிருந்து எப்படி என அனைவரும் சிந்தித்து முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் அனைவர்க்கும் நியாயமாக.



ஆனால் இந்த மக்களுக்கு பீடி, மது, பான் பராக், குத்கா, தீய ஒழுக்கம் யாவும் சேர்ந்திருக்கிறது ஆனால் நல்லவை சென்று சேரவில்லை நல்லவற்றின் பால் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எனவே இவர்களை எல்லாம் எப்படி மீட்டு எடுக்கிறோம் என்பதில் தாம் ஒரு நாட்டின் அரசியலே அடங்கி இருக்கிறது. அவர்களின் வாழ்நிலைகளை நாம் உயர்த்தியே ஆக வேண்டும். இப்போது கூட குடிக்க நீர் கேட்டு போராட்டஙகள் எழும் கோடைக்காலம்.

முதலில் விகிதாசார வாக்குமுறைகளும் அதன் பிரதிநிதித்துவமும் அடுத்து  வென்ற வேட்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமையும் அடுத்துஅனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகளும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் நிவர்த்தி உத்தரவாதம், கல்வி, மருத்துவம் போன்றவை அரசிடம் இருந்து தங்கு தடையின்றி பாரபட்சமின்றி கிடைப்பதும்... இவை யாவும் இன்றைய ஜனநாயகத் தேவைகள்..

இவற்றை எல்லாம் நாங்கள் பல பத்தாண்டுகளுக்கும் முன்பிருந்தே எழுதியும் பேசியும் சுவாசித்தும் வருகிறோம்...நேற்று எவரோ எழுதிவிட்டார்கள் அதுவும் தேர்தல் காலத்தில் என ஒரு சில ஊடகங்கள் பீற்றிக் கொள்கின்றன...ஒவ்வொரு கட்சியும்  ஒரு ஊடகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் இயங்கி படி இருக்கையில் இவர்களை எல்லாம் நாம் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


லிங்கனைப்பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ, அறிஞர் அண்ணா, பெரியார் பற்றி எல்லாம் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டெலா பற்றி எல்லாம் தெரியாது எம்.ஜி.ஆர், சிவாஜி, டீக்கடை பெஞ்ச் எல்லாம் தெரியும் சாதி மதம் சண்டை சச்சரவு, வரப்பு சண்டை, காவல் நிலையம் அடி தடி தகராறு இவை மட்டுமே தெரியும் இவர்களிடம் எப்படி காந்தியம் மார்க்ஸீயம், லெனினிசம் எல்லாம் கொண்டு செலுத்தப்போகிறீர்
 வாக்கின் முக்கியத்துவம் பற்றியோ இவர்களுக்கு இன்றும் புரியாது என்றாலும் தேர்தல் ஆணையம் ஓரளவு ஒவ்வொரு தேர்தலிலும் சில படிகள் ஏறிய படிதான் இருக்கிறது. இப்போது கொஞ்சம் பிரச்சாரம் அடங்கி இருக்கிறது. சுவரில் எழுதுவதும் ப்ளக்ஸ் கூட குறைந்துவிட்டது. இனி வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் முறையும் நடைமுறைக்கு வரவேண்டும்....




Image result for election 2019

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை





No comments:

Post a Comment