Friday, September 2, 2016

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை
Image result for Education to enlighten and lead the nation to bright


அண்மைக் காலத்தில் எனக்கு நிறைய கல்லூரி மாணவ மாணவர்களுடன் நாட்களை செலுத்தும் வாய்ப்பு.ரயிலில் பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு.நிறைய கலப்படமான சிந்தனையை உருவாக்கி உள்ளது? நேர்மறையிலும் எதிர்மறையிலும்.

கல்வி நம்மை மனிதரை உருவாக்குவது என்றார் மகாத்மா. முதலில் கல்வி கற்பவரை உருவாக்க வேண்டும். அதன் பின் சமுதாய அமைப்புக்கு அதன் மேம்பாட்டுக்கு பிற உயிர்களுக்கு ஏதாவது பங்களிப்பாற்ற வேண்டும். அப்படி இல்லாத கல்வி என்ன கல்வி? அப்படிப்பட்ட கல்விக்கும் ஒரு மரியாதை வேண்டும். ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவி முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் அதற்கு பல கோடிகள் பல கேடிகள் முயற்சி செய்வதாக பேச்சு வழி செய்திகள், மேலும் அரசு பி.‍ஹெச்.டி ஆசிரியர் தேர்வு செய்யவிருப்பதாகவும் அதற்கும் பல இலகர கையூட்டுகள் கைமாறல்கள் தேவை ஏன் எனில் அந்த அரசுக் கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு இலட்சம் வரை வருவாய் மற்றும் வாய்ப்புகள் சலுகைகள்....

ஆனால் பி.‍ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கும், பாடம் கல்லூரியில் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அரசு எந்த பொருளாதார உதவியும் செய்யாமல் அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் கல்லூரியில் பிடுங்கிக் கொண்டு சுரண்டிக் கொண்டிருப்பது வகுப்பு எடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் வேறு.அதைப் பற்றி நான் இப்போது இந்த எழுத்துப் பதிவில் கவலைப் படவில்லை.

மாறாக: கல்வி இந்த மாணவர்களுக்கு ஒரு பெரும் அழுத்தமாக சுமையாக மாறி இருக்கும் சூழல் அவர்கள் எதிர்காலத்தை அச்சுறுத்துவதாக உள்ளது. அதுவும் தேர்வுக்காலம் என்று வந்து விட்டால் அவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.

Image result for Education to enlighten and lead the nation to bright

இதன் வடிகாலாக மாணவர்கள் புகைப்பது, மது அருந்துவது, போன்ற உடல் நலம், சமூக நலம் பற்றி அக்கறை இல்லாமல் போவது நாம் சமுதாயத்தின் மற்ற மனிதர்கள் எல்லாருமே இப்படித்தானே இருக்கிறார்கள் இவர்கள் மட்டும் என்ன எனக் கேட்கலாம்.ஆனால் மாணவ சமுதாயத்தை இப்படி நாம் விட்டு விட முடியாது, விட்டு விடவும் கூடாது அது பேராபத்து.

கலாம் அழகாக சொல்வார், ஒரு சமுதாய மேம்பாடு என்றால் அது நல்ல ஆசிரியர், நல்ல பெற்றோர், நல்ல மாணவர்கள் அதன் முக்கோண இணைப்பு கொண்டு ஏற்படுத்தப்படும் தங்க முக்கோணம். இப்படி இருக்கும் நிலையில் பெற்றோர் ,ஆசிரியர், நல்ல வழிகாட்டிகளாக இருந்தால் மாணவர்கள் அனுமதி சீட்டு இல்லாமல் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய வர முடியுமா?

ஒரு மாணவரை மற்ற சில மாணவர்கள் அவமானப்படுத்த முடியுமா? அவள் கறுப்பாக இருப்பது அவள் குற்றமா? அவள் அழகாக இல்லாதிருப்பது அவள் தேர்வா? அவர் அவருடைய வாய்ப்புகளை இந்த முறையில் செய்யத் தவறியது மற்றவர்களை பாதிப்பதாக இருந்தால் அவருக்கு நம்மால் ஆன முயற்சியை உதவியை செய்து ஈடுகட்ட வேண்டுமே தவிர அவரை காயப்படுத்துவது எந்தக் கல்வியில் சேர்ந்தது?

பெற்றோர் இப்போதெல்லாம் ஒரிரு குழந்தைகளை உருவாக்கவே தாவு தீர்ந்து விடுகிறது என ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டு கடனை உடனை வாங்கி, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி படிக்க வைக்க அனுப்பினால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் ‍ கேலி வதை வேறு செய்து அவை தற்கொலையில் முடிந்து போகும் அளவு கல்வியின் தரம் இருக்கிறது...

இப்படிப் பட்ட கேலிவதைகளைத் தடுக்க அரசும், கல்லூரியும்,எவ்வளவோ முயன்றாலும் இவை அழுகிய மனம் படைத்த மாணவர்களால் தொடர்ந்து கொண்டு வருவது கவலை அளிப்பது வருத்தத்திற்குரியது. இவை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் எப்பாடு பட்டாவது எப்படிப்பட்ட நீதி செய்தாவது அல்லது கடுமையான குற்ற நடவடிக்கை தடுப்பு செய்து தண்டனை அளித்தாவது...

Image result for Education to enlighten and lead the nation to bright

அரசு முதலில் கல்வி சார்ந்த கொள்கைகளில் தெளிவு பெறல் வேண்டும் அதற்கு கல்வியில் சிறந்த சான்றோர்கள் வழி காட்ட உதவ வேண்டும் அவர்களை அரசு முதலில் அங்கீகரித்து அவர்களின் எண்ணப் பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து சமுதாய மேம்பாட்டுக்கு அவர்களின் தாராளமான பங்களிப்புகள் தொடர போதிய வாய்ப்புகளும் வசதிகளும் செய்து தர வேண்டும்.

ஒரு பக்கம் நீட்டு, ஒரு பக்கம் மடக்கு என்பதில் எல்லாம் ஒரு தெளிவான திறந்த எல்லாருக்கும் வாய்ப்பளிக்கும் முறைகள் வேண்டும். பல்லில்லாத  நிலை போக்கப் பட வேண்டும்...
Image result for Education to enlighten and lead the nation to bright


மொத்தத்தில் இந்தியா போன்ற ஒரு அத்தியாவசியத் தேவைகளே சென்று சேராத நாட்டில், கழிப்பறை, மருத்துவம், ஆரோக்யம், சாலைவசதி,உணவு, உடை, உறையுள் சென்று சேராத நாட்டில் மனித இறந்த உடலை அப்புறப் படுத்த, போக்குவரத்து செய்யக் கூட முடியாத நாட்டில் ஆனால் தனி மனித வருவாயில் உலகில் 7 வது பணக்கார நாடாக உள்ள நாட்டில் கல்வியின் பங்கு பிரதானமாக மகத்தானதாக இருக்க வேண்டும்

அரசுகளே கூட சரியில்லாமல் இருந்தும் கூட படித்த பெருமக்கள் தமது சேவையை கீழ் நோக்கி மக்களுக்காக கல்வி சார்ந்த பணிகளுக்காக மாணவ மாணவியர்க்காக அப்துல் கலாம் செய்த பணிகள் போல செய்ய முற்பட வேண்டும்.

அந்தக் கல்வி சமுதாய மேம்பாட்டுக்கு, முன்னேற்றத்திற்கு பிற உயிர்களுக்கு, கீழ் இருக்கும் மனிதர்களுக்கு கை தூக்கி மேல் வர உதவிட வேண்டும். அதல்லாத கல்வி கல்வியே அல்ல...தாம் வாழ செய்திடும் தொழில் போல இதுவும் ஆனால் இதற்கு மரியாதை இருக்காது...

எனவே கல்வியும் தரமும் மேம்பட வேண்டும், கல்வியால் நாடும் வளம் பெற வேண்டும், கல்வி இந்த நாட்டை மேம்படுத்த எப்படி சுதந்திரப் போர்த் தியாகிகள் தம்மை அந்த விடுதலை வேள்விக்கு ஆகுதி செய்தார்களோ, அர்ப்பணித்தார்களோ அப்படி அடியிலிருந்து வித்தாக விதைக்கப் பட வேண்டும். அடிமட்ட மனிதர்களுக்கு சென்று சேர வேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம் என ரஸ்கின், டால்ஸ்டாய், காந்தி போன்ற மகான்கள் கண்ட கனவுகள் மெய்ப்பட வேண்டும்..

Image result for Education to enlighten and lead the nation to bright


அதற்கு தடையாய் இருக்கும் ஒழுக்க கேடுகள், சீரழிவுகள், மதுக்கடைகள் யாவும் முற்றிலும் ஒழித்தொழிக்கப் படவேண்டும் அது எந்த முறையில் இருந்தாலும்  சரி.

சுய நலம் காக்க நீ கற்கும் கல்வி வியாபரம் தான். கல்வி அல்ல. கல்வி நிறுவனம் என்ற பேரில் ஆலைத் தொழில், பண்ட மாற்று வியாபாரம் அதற்கும் மேலாக பணம் காய்க்க நிறுவனம் நடத்துவது கல்விச் சாலையல்ல,,,,கடைதான் இலாபமாக்கும் இலாபம் பார்க்கும் முறைதான். இவை கல்வியை உருவாக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதற்கில்லை. முதலைப் போடுகிறார் இலாபம் பார்க்கிறார். அதேபோல மாணவர்களும் முதலைப் போடுகிறார் இலாபம் பார்ப்போம் என்றே...எனவே இந்த முறைகளில் கல்வி எதையும் சாதிக்காது..

அதில் அவர்கள் பிழைப்புக்கே  நடத்த முடியாத நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் பேயாட்டம் போட குஜராத் மும்முறை நாயகன் மோடி இந்தியாவையே மாற்றுவார் அனைவர்க்கும் வேலை தந்து விடுவார் என்ற கனவெல்லாம் பாழ், தூளாகிட... ஒரு தபால் எழுதினால் ஒரு உயிர் போகும் கோரிக்கை பற்றி எழுதினாலும் மாதக்க்கணக்கில் ஆனாலும் அதுபற்றி எந்த வித மூச்சும் பேச்சும் இல்லாத இந்த அரசுகளால் எப்படி கல்வி மேம்பட முடியும்? மாணவர் பிரச்சனை தீர முடியும்?  எப்படி இந்த மாணவர்கள் சமுதாயத்துக்கு உதவி மேம்படுத்த முடியும் ? எல்லாம் சிக்கல். மன நலம் குன்றிய ஆசிறியர்  இருக்கிறார்கள்...மன நலம் குன்றிய மாணவர்களை உருவாக்குகிறார்கள்.

Image result for Education to enlighten and lead the nation to bright

அவர்கள் எல்லாம் நமைப்போன்றோரை மென்டல், என்றும், பைத்தியம், என்றும் மன நலம் குன்றியவர்களாக இருக்கிறார்கள் என கமென்ட் அடிப்பதுதான் பெரும் வேடிக்கை. ஏன் எனில் இனி இந்த( தமிழ்) நாட்டில் புகைக்கும் மது அருந்தும் பழக்கமும் இல்லார் எவராக இருந்தாலும் அவர்கள் இவர்கள் பாணியில் சொன்னால் சமுதாயத்தின் விதிவிலக்குகள் தாம்.

BUT WE SHOULD LEAD THE NATION.IT IS MUST  NEED.IN THIS HOUR OF TIME.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


No comments:

Post a Comment