Sunday, September 25, 2016

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

Image result for tamil writers

எனைப் பாதிப்புக்குட்படுத்திய இப்போது என் நினைவுக்கு எட்டியவரை எனது மலை மறைவுப் பிரதேசத்தில் உள்ள இருட் குகைக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதில் தான் எவ்வளவு வெளிச்சம்.

எனது நண்பர் ஒருவர் எனை  கிளறி விட்டார். நீறு பூத்த நெருப்பை கிளறி விட அது கனன்று கொண்டே இந்த பதிவாகிறது.அவர் சாதரணமாக ஒரு கேள்வி கேட்டு விட்டு போய் விடுகிறார். ஆனால் அவருக்கு உரிய பதிலை தருவதில் திருப்தியடையா எனது எண்ண ஊற்றுகள் தீயின் நாட்டியங்கள் எழுந்து ஆடவும் ஓடவும் ஆரம்பித்து விடுகின்றன. அந்த திருப்தி அடையா பதிலுடன் இருவரும் இரு வேறு வாழ்வில் பிரிந்து போய் விடுகிறோம் என்றாலும் இந்த எழுத்துகள்  பொதுவாக எங்களுக்குள்
பாலம் இடும் நம்பிக்கை எனக்குண்டு. இனி சூரியக் கீற்றுக்குள்..
மெல்லிய ஒளி ஊடுருவலுக்குள்...என்னால் முழுதாக சொல்ல முடியுமா என்ற நம்பிக்கை இல்லாதபோதும்...

Image result for tamil writers

அவர் கேட்டது இலக்கியம் பற்றி எந்த எழுத்தாளர்களை படித்திருக்கிறீர் என்பது பற்றி, சாண்டில்யன் , கல்கி , பாலகுமாரன் எல்லாம் படித்திருக்கிறீரா என்பது பற்றி...

நான் அவருக்கு சொல்ல விரும்பிய பதில் மீதமிருப்பது இப்படி ஆரம்பிப்பதாக இருந்தது...அதற்குள் நாங்கள் அவரவர் வாழ்வுக்குள் புகுந்து கொண்டோம்...நீங்கள் மாக்ஸிம் கார்கியின் தாய், லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு , கார்ல் மார்க்ஸின் டாஸ் கேபிடல், தமிழில் சொன்னால் மூலதனம், காந்தி வழி நூல்களின் 17 நூல் தொகுப்பு, சரத் சந்திரரைப் அழாமல் படிக்க முயல்வது... ஹிட்லரின் மெய்ன் கெம்ப் இதை எல்லாம் செய்து பாருங்கள்...என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்.உலகுக்கே மூலதனம் என்ற அரிய கம்யூனிச தத்துவம் வழங்கிய கார்ல் மார்க்ஸின் மனைவிக்கு போதிய ஊட்டச் சத்து உணவின்றி ஏன் உணவே இன்றி பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக தாயின் மார்பிலிருந்து இரத்தம் வந்ததையும் தெரிந்து கொள்ளுங்கள் என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்....தாய் எழுதிய மாக்ஸிம் கார்க்கி நெடுவழிப்பாதையில் ஒரு பெண்ணுக்கு அந்த பெண்ணின் எதிர்ப்பிற்கிடையே பிரசவம் பார்த்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்பினேn.
Image result for tamil writers


இதை எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தேன் எனில் எனக்கு குரல் வளம் அதிகம் நன்றாக தமிழில் உச்சரிப்பும் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் என்னைக் கொண்டாடுவார்கள்....எனவே எனது வயது இருந்தால் 7 அல்லது 8 இருக்கும்..இரண்டாம் வகுப்பு, அல்லது 3 ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்து வெளிப் படிப்பு ,கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.பிறருக்கு கடிதம் எழுதித் தருவது, பிறருக்கு வரும் கடிதத்தை பிரித்து படித்துக் காண்பிப்பது எல்லாம் இருந்தது.ஒரு புத்தகம் ஆரம்பித்தால் அதை முன் அட்டை முதல் கடைசி அட்டை வரை முடிக்கும் வரை வேறு எதிலும் எண்ணம் இலயிக்காது. உணவு, உறக்கம் எல்லாமே அதற்கு இரண்டாம் பட்சம்தான். பாடப் புத்தகங்களிடையே நூல்களை வைத்துக் கொண்டு வீட்டுக் தெரியாமல் படித்த அனுபவங்கள் எல்லாம் இரவில் உண்டு. அம்மாவுக்கு படிக்கத் தெரியாது அப்பா வந்து அதை எல்லாம் பார்க்க வாய்ப்பில்லை என்ற நினைப்பு.ஆனாலும் நிறைய முறை மாட்டிக் கொண்டதுண்டு, தொந்தரவு இருக்கக் கூடாது என எமது வீட்டில் பின்னாளீருந்த புளியமரம், பூவரச மரத்தின் மேல் எல்லாம் அமர்ந்து கொண்டு படித்த அனுபவம் உண்டு.

எது முன் பின் எனத் தெரியாது, எனது தந்தை சுப்ரமணியம் அவர்கள் குமுதம், கல்கண்டு வாங்கி வந்தார் சந்தாதாரராக சில காலம் என நினைக்கிறேன். அதன் பிறகு வறுமையின் காரணமாக அவரால் வாங்க முடியவில்லை. ஆண்டியப்பன் என்னும் ஒரு சிகை அலங்காரக் கடை அல்லது முடி திருத்தக் கடை...பக்கத்தில் ஒரு டைலர் கடை அது எம்.ஜி.ஆர் மன்றமாகவும் செயல்பட்டது அந்த டைலர் பெயர் சுந்தரம்.

இந்த ஆண்டியப்பனின் தந்தை கொஞ்ச காலம் எங்களது வீட்டுக்கே வந்து எங்கள் வீட்டின் ஆண் மக்கள் அல்லது சிறுவர்களாகிய எங்களுக்கு எங்கள் செடிப்பக்கம் (வீட்டின் பின் புறம் புழக்கடை அல்லது தோட்டம் என்றும் சொல்லலாம்) முடி திருத்தம் செய்துவிடுவார். அது கொஞ்ச காலம் தொடர்ந்தது. அதன் பின் ஆண்டியப்பன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்ள வேண்டியதானது...இதெல்லாம் நடந்த காலம்1968லிருந்து ஆரம்பமாகி இருக்கலாம்...

Image result for tamil writers

அப்போதெல்லாம் தினத்தந்தி பேப்பரும் டீக்கடையும் நாட்டின் தலை எழுத்தை பெரும்பாலும் நிர்ணயித்தன. பொது வாழ்வும் அரசியல் வாழ்வும், நாட்டு நடப்புகளும், ஊரின் முக்கிய சமாச்சாரங்களும் அங்குதான் பெரும்பாலும் அலசப்பட்டன. டீ, குடிக்காமலே தினத்தந்தி செய்தித் தாளை படி படி என்று படித்து சிந்துபாத் கன்னித்தீவை முடியாமலே விட்டது போல படிக்க டீக்கடைக்காரர், சில முடி திருத்தக் கடைக்காரர்களிடம் சலிப்புடன் பேச்சு வாங்கியதும் உண்டு, கட்டிங் பண்றதுக்கு வேற கடைக்கு போறது, பேப்பர் மட்டும் இங்க படிக்க வருவதா? டீ குடிப்பதில்லை பேப்பர் மட்டும் படிக்க வந்து விடுகிறாய் என்பது போல இதெல்லாம் அவ்வப்போதே பெற்ற சிராய்ப்புகள்.

நாம் மத்தியப் பகுதிக்குள் வருவோம்...ஆண்டியப்பன் கடையில் குமுதமும் கல்கண்டும் வாரம் வாரம் தவறாமல் வாங்குவார்.அப்போது இவை பெரும்பாலும் ஞாயிறுகளில் வாரம் தோறும் வரும் என்று சொன்னாலும், சனிக்கிழமை ஏன் சில சமயம் வெள்ளிக் கிழமை மாலைகளில் கூட கடைக்கு வந்து விடும். வரும் பையனிடம் குமுதம் கல்கண்டு கொடுத்தனுப்பவும் என்ற துண்டுச் சீட்டுடன் புத்தகக் கடைக்காரர் எனச் சொல்லப்படும் பீடாக் கடைக்காரரிடம் கொண்டு சென்று கொடுத்து புத்தகங்களை வாங்கி வரும்போதே வழியில் படித்துக் கொண்டே வந்து முதல் ஆளாக படித்து முடித்து விடுவதுண்டு. அதில் தண்டபாணிக்கும் எனக்கும் சில காலம் போட்டி நிலவியதும் உண்டு. (அந்த கல்கண்டின் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு எல்லாம் ஏற்பட்டது வேறு கதை.)

Image result for tamil writer sandilyan and kalki


Image result for tamil writer sandilyan and kalki

Image result for tamil writer sandilyan and kalki

அங்கிருந்து ஆரம்பித்தது சாண்டில்யன் கதை, அது இரத்தனம் ஓவிய ஆசிரியர் வழியாக வாரத்தின் 2 ஓவிய வகுப்பில் ஒரு வகுப்பு ஓவியம் ஒரு வகுப்பு கதை...அதுவும் கடல் புறாவும், யவனராணியும்...அப்போது ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை வந்திருந்தோம் என எண்ணுகிறோம். எனவேதான் என் போன்றோர்க்கு ஓவியமே வரவில்லை. கதை புகுந்து கொண்டது.

சாண்டில்யனை  அதாவது இரங்க பாஷ்யம் அய்யங்கார் என்ற சாண்டில்யன் சரித்திரக் கதைகள் யாவற்றையும் முதலில் படித்தேன்,இவரை விட யாரால் எழுத முடியும் அப்படி ஒரு கிக் இருக்கும் எனவே அந்த போதை கல்கி  ‍(ரா.கிருஷ்ணமூர்த்தி)பற்றிய அடுத்த நூலைத் தந்தது அவருடைய நூலை எல்லாம் வாசித்த பிறகு பொன்னியின் செல்வனும் , சிவகாமியின் சபதமும், தியாக பூமியும்  அலை ஓசை, பார்த்திபன் கனவு என அவரது நூல்கள் வேறு ஸ்டைலில் இருப்பது தெரிந்தது...சாண்டில்யன் நூல்களின் ஒரு பாலுணர்வு மயக்கம், கிறக்கம், ஒரு தூண்டு உணர்வு படிப்பாரை மாய வெளிகளில் இட்டுச் செல்ல...கல்கி தென்றலாக மெல்லிய நீரோட்டமாக எந்த வித முடுக்கமும் இன்றி சற்று ஆன்மீகம் கலந்த தெய்வாம்சம் நிறைந்த இயற்கையோடு இயைந்த வாசமாகவே எழுத்துகளை உணர வைத்தார்.

அகிலன், தீபம், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி, கோவி மணிசேகரன், அரு.இராமநாதன், இராஜாஜி,என சரித்திர நூல்கள் எனத் தெரிந்த என்னை சமூக நாவல்கள் எழுத்தாளர்கள் இலஷ்மி,சுஜாதா (இவருக்கு நான்  பெங்களூரில் பெல் நிறுவன விலாசத்துக்கு எனது நூல் வெளியிடும்போதெல்லாம் தவறாமல் அனுப்பியதுண்டு ஒரு சிறு நாவலில் ஒரு நாயக பாத்திரத்துக்கு தணிகை என்ற பெயரை சூட்டியிருந்தார்),ஜெயகாந்தன், ‍ இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் எனக்கு பள்ளியில் முதல் பரிசாக 1978ல் கொடுக்கப்பட்டது, புதுமைப் பித்தனின் சிறு கதைகள் அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்கே ஒரு கொடை. அது என் கைக்கும் வந்து சென்றது...மகாக் கவி பாரதியை, நாம் கவிதைக்கு சொன்னால் புதுமைப்பித்தன் தான் சிறுகதை நாயகன்...பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, நாமக்கல் கவிஞர் , முதல் மு.மேத்தா, வைரமுத்து அப்துல் ரஹ்மான்,
Image result for tamil writers


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்...கு. அழகிரிசாமி, தி.ஜா.ரா என்னும் தி.ஜானகி ராமன்,இராஜம் கிருஷ்ணன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி,கரிச்சான் குஞ்சு, மௌனி,நீல பத்மநாபன்,புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீ வேணுகோபாலன்,ராகி ரங்கராஜன், கு.ப.இராஜகோபாலன்,சு.சமுத்ரம்,க.ந.சுப்ரமணியம்,ஆதவன், கண்ணதாசன், வல்லிக் கண்ணன், எம்.எஸ்.உதய மூர்த்தி,டாக்டர் மு.வ,அசோகமித்ரன்,பாலகுமாரன், லா.ச.ரா, கி.ரா என்னும் கி.இராஜநாரயணன்,அனுராதா இரமணன், இரமணி சந்திரன்,பெரியார்,சா.கந்தசாமி,பிரபஞ்சன்,விக்ரமன், இப்படி கிடைத்த கதை மாந்தர்களையும் கதை எழுதிய எழுத்தாளர்களையும் கட்ந்து கொண்டே இருந்தேன். up to A.P.J.Abdul kalam...

Image result for tamil writers

பிரம்மராஜன் ஊட்டி இவர் வரவில்லை என நினைக்கிறேன், ஜெயமோகன், சாருநிவேதிதா, விக்ரமாதித்தியன் போன்றோருடன் ஒகேனக்கல் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு ஒரு நாளில் அவர்கள் போதை கலப்பு பிடிக்காமல் இரண்டாம் நாள் பட்டறைக்கு போகவே இல்லை. இன்குலாப் போன்ற மக்கள் நாடித்துடிப்பை உணர்ந்த உணர்த்திய கவிஞருடன் கவியரங்கம் செய்துள்ளேன்...

இப்படி தமிழ் எழுத்தாளர்களின் சகவாசம் நிறைய கடந்து  நிறைய பேர்கள் விடுபட்டு இருக்கும் ஆனால் அவை மறுபடியும் தீண்டப்படும்போது நினைவுக்கு தீனி போடும்...அடுத்து மலையாளம், வங்க, குஜராத்திய, இலக்கிய வரிசையில், தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, மலையாளத்தில் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்,வாசுதேவன் நாயர்,வைக்கம் முகமது பஷீர்,குஞ்சுண்ணி,

இதை அடுத்து மேலை நாட்டு இலக்கிய வரிசை முக்கியமாக உடையாத சோவியத் சோசலிச நாட்டின் ஏராளமான புத்தக வரிசைகள்,அதை எல்லாம் விட சோவியத் நாடு ஆங்கில பதிப்பு, தமிழ் பதிப்பு இரண்டுமே என்னுடன் தொடர்பிலிருந்தது...அந்த கூட்டாட்சிச் குடியரசை யெல்ட்சின் உடைக்கும் வரை கோர்பச்சேவ் அதிபராக இருக்கும் வரை எனக்கு அது சந்தா அடிப்படையில் வந்து கொண்டேதான் இருந்தது. அப்போது சென்னையிலிருந்து தபாலில் வந்து சேரும்...அப்போது சோவியத் நாட்டின் புத்தகப் பிரிவு சென்னையிலிருந்தும் செயல்பாட்டில் இருந்தது. எனவே எப்படிப் பார்த்தாலும் சோவியத் நாடும் இரஷியாவும் இன்னும் எனக்கு சோவியத் லேன்ட் அனுப்பாத கடன் பட்டிருக்கிறது.அலெக்ஸாண்டர் புஷ்கின்,விளாட்மிர் நப்கோவ்,மைக்கேல் புல்காவ், கதைகள் விடுபட்ட வரிசையில் அவாரிய நாட்டு பழமொழிகளும் அடக்கம்.

ஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியரிலிருந்து, அலிஸ்டர் மாக்லீன், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், நமது ஆர் கே நாரயன், கமலா தேவி, கமலா மார்கண்டேயா, சேதன் பகத், நான்ஸி ப்ரைடே.. இப்படி ஒரு பக்கம்..பொதுவாக‌ சொல்லப் போனால் புதுசாம்பள்ளி, கருமலைக்கூடல், மால்கோ, இப்படி நூலகங்களின் வரிசை எல்லாம் முடித்து சேலம் மத்திய நூலகம் வரை சென்று கொண்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் மால்கோ நூலகத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியா டுடே, ஆங்கிலம் மற்றும் தமிழ்,  மாதந்திர, வாரந்திர, இருவாரத்துக்கொருமுறை  வாரத்துக்கொருமுறை வரும் அத்தனை புத்தகங்களும் அது அப்போது குங்குமம், தாய், ஆனந்த விகடன், கல்கி , சினிமா எக்ஸ்பிரஸ், மங்கயர் மலர், இப்படி போய்க் கொண்டே இருக்கும் இதன் முடிவில் பகவத் கீதை, பைபிள், குரான், ஜைனம், புத்தம், ஜென் , ஜே.கே, ரஜினீஷ், இராமகிருஸ்ணர், விவேகாநந்தர், இரமணர், அரவிந்தர்  இப்படி ஆன்மீக நூல்களுடன் பயணம்...

Image result for tamil writers

இப்போது நினைவுக்கு எட்டியவரை இந்த பதிவு சொல்கிறது இதை மீறி மேலும் செல்லும்... வாய்ப்பிருந்தால் பதிவோம்...

எனக்கு சீடராக 93 வயதை நிரம்பிய ஒரு மலையாள நண்பர் தமிழில் எழுத முயற்சி செய்தவர் உண்டு அவரை நீண்ட நாளுக்கும் பிறகு இன்று சந்திக்கும் நிகழ்வு இருப்பதால் இன்று இதற்கும் மேல் எழுதும் ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. these are recorded apart from kamba raamayanam, thirukkural, epics,Raamaayanam, Mahabaratham,silappathikaaram, manimekalai, and other litreatures in tamil.It includes Malayala Manorama and  all books related with universe and space science study about Gali Galilio,Newton,Iynsteen ,up to our venki Ramakrishnan...

ஒவ்வொரு அசைவிலும் ஒரு மாறுதல் நிகழ்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment