Saturday, September 10, 2016

சேலம் மாவட்டத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத் தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

சேலம் மாவட்டத்தின் தங்க  மகன் மாரியப்பன் தங்கவேலுவும் தங்கத்தாரகைத்  தாய் சரோஜாவும் : கவிஞர் தணிகை

Image result for mariappan thangavelu and his mother saroja


காலை மதுபோதை பேருந்து ஓட்டுனரால் 5 வயதில் இழந்த இந்த தங்க வேல் இன்று இந்த 21ஆம் வயதில் சரித்திரத்தில் தமது பெயரை தக்க வைத்துக் கொண்டார். தாய் சரோஜாவின் தியாகம் பயிற்சியாளர் பெங்களூரு சத்யநாரயணா ஆகிய அனைவரையும் தங்கவேலையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இது போன்ற எத்தனையோ வைரங்கள் நமது இந்திய மண்ணில் இருக்கின்றன. வெளியே பளிச்சிட ஆரம்பித்த பின் தான் இந்த உலகும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் இந்த இந்திய மண் கோடிகளாய் கொட்டிக் கொடுக்கிறது.

அதற்கும் முன் எத்தனை துன்பங்கள்? எத்தனை அவலங்கள், கணவன் விட்டுப் பிரிந்த பின் நாலு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் வாழ்ந்த இந்த காலை பேருந்துக்கு பலி கொடுத்த தங்கவேலு இந்திய நாட்டின் ஒலிம்பிக் அவமானத்தை துடைத்தெறிந்து இந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் உயரத் தாண்டுதலில் பெற்றதன் மூலம் ஒரு காலாக ஆகி விட்டார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் தாய் சரோஜா. இவர் பெரியவடகம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சைக்கிளில் சென்று காய்கறி விற்பனை செய்து வருகிறார்.


சரோஜா இவரின் தாய் கூலி வேலை பார்த்து செங்கல் தூக்கி அதன் பின் காய்கறி விற்று செய்யாத தியாகம் எல்லாம் செய்து ஆண் வருவாய் ஈட்டுவார் இல்லாத குடும்பத்தில் தியாக தீபம் ஏற்றி இன்று இந்தியப் புகழ் பந்தம் ஏந்தி உலகெங்கும் சுடர் விட வைத்து விட்டார் இந்த பதக்கத்தை பெற்றதன் மூலம்.

இளைஞர்களே இது நமக்கெல்லாம் ஒரு பாடம். கிரிக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள். இந்த உருப்படியில்லா அரசு உங்களை எல்லாம் உருவாக்கும் என நினைக்காமல் இப்படி தியாகம் செய்து சாதித்து காட்டுங்கள் அதன் பின் உலகே உங்கள் பின் நிற்கும்

எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்வு. எமது ஊர்க்கார, சேலம் மாவட்டத்தை சார்ந்த தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடுகம்பட்டியை சார்ந்த சிறிய கிராமத்தை சார்ந்த இந்த இளைஞரை ஈன்று நாடே திரும்பிப் பார்க்கிறது.

அது மட்டுமல்ல இந்த உயரத் தாண்டலில் 3 பதக்கங்களில் 2 இந்தியாவுக்கே .தங்கமும், வெண்கலமும். இது ஒரு புதிய சாதனை.

ஆனால் பாருங்கள் நண்பர்களே இன்று ஜலகண்டாபுரத்து பள்ளி மாணவர் அதிலும் முதல் மதிப்பெண் நிலையில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர் மாதிரித் தேர்வு எழுதிய தாளைக் காணவில்லை என ஆசிரியை இப்படித்தான் நீ முதல் மதிப்பெண் பெறுகிறாயா எனக் கேட்ட கேள்விதாளாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு செய்தி...

அரசுகளே முதலில் இனி உங்கள் அமைப்பை மாற்றிக் கொண்டு திறமை எங்கிருக்கிறதோ அங்கு கீழ் இறங்கி வரக் கற்றுக் கொள்ளுங்கள் உங்க ஒலிம்பிக் கமிட்டி முதல் வேலையாய் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள இது போன்ற வைரங்களை தத்து எடுக்கட்டும். அதன் பின் ஒலிம்பிக்கில் நமக்கு இடம் இல்லாமல் போகவே போகாது.

இந்த தங்கவேல் கூட இந்தியாவில்  2 மீ உயரம் தாண்டிய சாதனை எல்லாம் உண்டாம். இப்போது 1.89ல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

என்ன சொல்லி வாழ்த்த என்றே விளங்கவில்லை...இந்த மாபெரும் மகிழ்வில் பங்கு கொள்ளவெ இந்த பதிவு.
 அந்த தங்க மகனை ஈன்று பெருந்தியாகம் செய்த அந்த சரோஜா என்ற தாய்க்கும் நாம் நமது ஈடில்லா வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறோம். இனி நாம் பேசும் பேச்சில் எழுதும் எழுத்தில் இந்த சரித்திர நாயகனின் சாதனையும் இடம் பெறும் என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

அருணிமா சின்‍ஹா செய்தது போல இதுவும் ஒரு அருஞ்சாதனை.
கால் இல்லாதவரால் நிகழ்த்தப் பட்ட சாதனை. அந்த உயிர் பட்ட பாட்டுக்கு ஏற்றுக் கொண்ட வேதனைக்கு வலிக்கு. இடைவிடாத பயிற்சியின் போது தாங்கிக் கொண்ட துன்பத்துக்கு ஒரு அற்புத பரிசு. முயற்சிக்கு  பலனாக வேறு எவரும் எட்ட முடியாத உயரம் சிகரம், இந்த இந்திய நாயகனின் பயணம்.

Image result for mariappan thangavelu and his mother saroja



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment