Monday, September 5, 2016

கிடாரி: பார்த்த கதை: கவிஞர் தணிகை

கிடாரி: பார்த்த கதை: கவிஞர் தணிகை
Image result for kidari wiki


ஆட்டில் ஆண் ஆடு கிடாரி, பசுவாயிருந்தால் கடாரி என்றால் ஈனாத இளம் பசு. பொதுவாக ஆட்டுக் கெடா பின் வாங்கி வந்து தலையுடன் தலை மோதி நொறுங்கி நொறுக்கிக் கொள்ளும், நொறுக்கிக் கொல்லும்.அதன் பின் வாங்கும் போக்கு அந்த அளவு முன் வந்து தாக்கும் வேகத்திற்காக.அப்போது அது வந்து தாக்கும் எடை 300 கிலோ எடை வந்து தாக்குவது போல இருக்கும் இது சுமார் அளவுக்குறிப்புதான்.

சசிகுமாருக்கு இந்தவிதமான ஒரேவிதமான ரோல்தான் எப்போதும் கிடைக்கும்போலும். பழிக்குப் பழி, சண்டைக் காட்சிகள்.பொதுவாக இது போன்ற கட்சி, காட்சி யாவுமே அடுத்தவரைக் கொல்லும்போது அது நியாயப் படுத்தும் காட்சிகளாகவும், அந்தக் காட்சிகளில் நாயகத்துவமாக இருக்கும் பாத்திரங்கள் ஏதோ அதிசயம் போலும் அது  துன்பப் படும்போது நாமும் துன்பம் கொள்ளுமாறுமே அமைக்கப்படுகிறது. தனது உயிர் வெல்லக் கட்டி, அடுத்த உயிர் அறுபடவேண்டிய கோழி, ஆடு, மனிதம் இப்படியாக...

எனவே இந்த படத்துக்கு எல்லாம் நாம் எழுத வேண்டிய அவசியமில்லைதான். ஊடகங்கள் எல்லாம் இது போன்ற படங்களை  தமது எழுதும் பிரபலங்களை வைத்து நன்றாக இருக்கிறது என்றே சொல்லும். ஆனால் சாதாரணமாக பார்க்கும் நமது பார்வையாளர்கள் கணிப்பே செல்லும்.

இது ஒரு பத்தோடு சேர்ந்த பதினொராவது படம்தான். எதிர்பாராத கொலைகளும், இரத்த வெள்ளமும், காதலனும், காதலியும் கட்டிப் பிடித்தால் கூட எவராவது வந்து முதுகில் குத்திக் கொன்று விடுவார்களோ என எதிர் பார்க்க வைக்கும், எதிரியை பார்க்க வைக்கும் மனோபாவம் விளைக்கும் படம்...

அடுத்தடுத்த கொலைகள் வாழ்வதற்கும், தமது இடத்தை தக்க வைப்பதற்கும் அல்லது தலமை இடத்தை பிடித்துக் கொல்வதற்கும், தலைமை இடத்தை பிடித்துக் கொள்வதற்கும், சட்டம் ஒழுங்கு, காவல் நிலையம் எல்லாம் இருப்பதாகவும் ஆனால் பயனின்றி இருப்பதாகவும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

மற்றபடி இந்தப் படத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பெரிய பாதிப்போ நஷ்டமோ இல்லை. காதலுக்கு எல்லாம் இடம் அதிகமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment