Tuesday, September 13, 2016

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை

ஏன்டா இன்னும் திருந்தவே மாட்டீங்களாடா காட்டுமிராண்டிகளே?:கவிஞர் தணிகை
Image result for season of karnataka cauvery issueஉங்களை எப்படி ஒரு தாயும் தந்தையும் பெற்றார்களோ அப்படித்தானேடா அவனையும் ஒரு தாயும் தந்தையும் பெற்றிருப்பார்கள்? எப்படி எதற்காக ஒரு தனியாக சிக்கிக்கொண்டதற்காக அந்த மனிதனை அவமானப்படுத்தி, அடித்து, துன்புறுத்தி,மண்டியிட வைத்து உங்களுக்கு ஆதரவாக கோஷமிட வைத்தீர்கள்? எதற்காக எவன் போட்ட முதலோ அந்த வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள்?

ஒரு மாநில அரசின் போக்குவரத்து வாகனத்துக்கு தீ வைக்கிறீர்கள், இனக் கலவரம், என மனித இனத்தையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்...வள்ளுவர் சொன்னபடி: தோன்றின் புகழொடு தோன்றுக... என்னும் படி நீங்கள் எல்லாம் தோன்றாமலே இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்.  அதுக்கு ஒரு நடிகை வேறு அவர் கவர்ச்சியாக நடித்து அந்த கன்னட நாட்டுக்கு பெரும் தொண்டு செய்வதாகவும் கேள்வி..அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் தூண்டியிருக்கிறார். நீங்கள் எல்லாம் மனிதக்கருவிலிருந்து, மனிதக் கர்ப்பத்திலிருந்து, மனிதச் சூலிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள், ஆனால் உங்களை அழிக்க நாங்களும் எழுந்தால் அது வன்முறையாகிடும்.

சோனாக் கல்லூரியில் படிக்கும் கர்நாடகா கன்னட‌ மாணவப் பூம்பிஞ்சுகளில் 4 எனதருகே ஒரே பேருந்தில் நான் 5 ரோட்டில் இறங்கிக் கொள்கிறேன் நீங்கள் அமர்ந்து பயணிக்கலாம் என சக பயணியாய், சக உயிராய், சக மனிதராய் வாழ்க்கைப் பயணம் செய்து கொண்டிருந்தோம். எதை நம்பி ஒரு மனிதன் ஒரு மாநிலம் விட்டு மறு மாநிலம் பயணம் செய்கிறான்? படிப்பிற்காக, பிழைப்பிற்காக, வாழ்க்கைக்காக அங்கிருக்கும் மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேரும் உறுதுணையாக வாழ உதவுவார் என்ற தார்மீக நம்பிக்கை அடிப்படையில்தானே?

Image result for season of karnataka cauvery issue

எல்லாம் தேவையில்லாத காரணத்திற்காக உங்களைப் போல வெகுண்டு எழ ஆரம்பித்தால் பூமியில் எந்த மனிதருமே வீட்டை விட்டு வேறு எங்குமே போக முடியாது...மேலும் எந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ முடியாது...எந்த அரசுமே நிர்வாகம், ஆட்சி புரிய முடியாது...

செப்.20 வரை நீர் விடுவதை தடுத்து நிறுத்த உங்களால் முடியாது. ஆனால் வாகனத்தை, தீக்கிரையாக்க முடியும், தனியாக மாட்டிக் கொள்ளும் மனிதரை மண்டியிட வைக்க முடியும், அடிக்க முடியும், அறைய முடியும், உதைக்க முடியும், பின்னந்தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க முடியும், நீங்கள் சொல்லும் கோஷத்தை உயிருக்கு பயந்து சொல்ல முடியும்... நீரை பகிர்ந்து அளிக்க வேண்டிய கடமை இருந்த முதல்வர் வீட்டையும் கல்லெறிந்து தாக்கியுள்ளீர்கள், துப்பாக்கி சூட்டுக்கும் பலியாகி... அண்டை மாநில அரசுக்கு சொந்தமான , அத்தியாவசிய பணிக்கு வந்த வாகனங்களை எரித்தபடி, வீட்டைக் கொளுத்தியபடி.., இருக்கும் பதர்களே நீங்கள் செய்வது மனித இனத்திற்கே பெருத்த அவமானம்.

Image result for season of karnataka cauvery issue

நீங்கள் மனிதராய் இருப்பதற்கே தகுதி மட்டுமல்ல அருகதையற்றவர்கள்

சேலம் மாவட்டத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேல் பெங்களூர்க்காரராக பயிற்சி ஏற்று பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக உயரம் தாண்டி நடப்பு அமெரிக்க சாம்பியனையும் வென்று முதல் பரிசு எட்டிய செய்தி காதிலிருந்து மறையுமுன்னே இந்த கர்நாடகா மாண்டியா மாவட்டத்துக்காரர்களின் இழி செயல்கள்....

உடனே அமெரிக்கா தமது குடிமகன்களை  அங்கு சுற்றுலா செல்வதிலிருந்து தள்ளி நில்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்படி இருந்தால் எந்த ஆட்சி எந்த நிர்வாகம், எந்த மாநில மத்திய அரசுகள் ஆள முடியும், மிருகங்கள் இவை இதை குண்டாந்தடி கொண்டு தாக்குங்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள் என துணை நிலை இராணுவத்தை 1000 பேரை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுமளவு....அவமானச் சின்னமாகி விட்ட நீங்கள் என்றுதான் திருந்துவது? வட்டாள் நாகராஜ் போன்ற மனித இனத்துரோகிகளும், தற்போது எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மனித சகோதரர்களுள் ஒருவரை ஒருவர் எந்த காரணத்தையுமே அடிப்படை இல்லாமல் தூண்டி விட்டு நெருப்பு பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் பதர்களே உங்களை அந்த நெருப்பு  பற்றவே பற்றாதா? உங்களை அந்த நெருப்பு பற்றுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? உங்கள் உயிர் மட்டும் என்ன என்றும் நிரந்தரம் என்ற பட்டியலில் இடப்பட்டு உனது பெற்றவரால் உருவாக்கப்பட்டதா?
Image result for season of karnataka cauvery issue

இந்த நாட்டில் மத, மொழி, இன, சாதிய எல்லைக்கோடுகள், மாநில எல்லைக்கோடுகள் எல்லாம் மறையும் தலைமுறையில் வாழ்கிறீர் என்பதை மறந்து விடாதீர், மேலும் கணியன் பூங்குன்றனார் சொன்னபடி அதை ஐ.நாவில் கலாம் பேசியபடி நாமெல்லாம் உலக மாந்தர்கள்...நாட்டின் எல்லைக்கோடுகள் கூட நம்மை பிரித்து குறுக்கி சிறுத்துப் போகச் செய்யக் கூடாது..

காக்கைக் குருவி எங்கள் சாதி
நீள் காடும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்கக் நோக்கக் களியாட்டம்

என்ற பாரதியின் வரிகளின் படி வரிகளைப் படி, அந்த பாரதிக்கும், திருவள்ளுவருக்கும் நீங்கள் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்பீர். உங்களிடம் எப்போதும் மாறுதல் வரவே போவதில்லை...
Image result for season of karnataka cauvery issue


முதலில் நதி நீரை இணையுங்கள்: தேர்தலின் போது மட்டும் வாய்ப்பந்தல் போடாதீர்கள்...எல்லாப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் மனிதம் குறைந்தபட்சம் இந்தியன் அனைவரும் என்ற உணர்வுக்காவது வந்து இணைவான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment