Friday, September 23, 2016

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை


Image result for manjavadi kanavai near karur

கடந்த வாரத்தில் ஒரு நாள், மறக்க முடியாத திருநாள்,அது 19.09.2016 திங்கள் என்றும் மங்காத தங்கத் திங்கள் அது. கல்லூரியிலிருந்து சுமார் 68 கி.மீ தொலைவுப் பயணம். அரூர் செல்லும் வழி மஞ்சவாடிக் கணவாய்ப் பாதை முன்பு போல் இல்லை. பெரும்பகுதி கரைத்து விட்டார்கள். என்றாலும் அந்த காடுகளும் வானரக் குரங்குகளும் அப்படியேதான் இருக்கின்றன வெளியில் போக்குவரத்துப் பாதையில் இருந்து பார்ப்பதற்கு. உள்ளே எப்படி இருக்கிறது எனத் தெரியாத போதும்அன்பு நண்பர் செம்முனி இமாலயன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் இதன் முதல்வர் பொறுப்புகளில் இருந்து சளைக்காமல் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த முகாமை அவர் நடத்தி அது முடிந்த கையுடன் பள்ளி மாணவ மாணவியர்க்கு அவர் விடாமல் தேர்வை எழுதச் சொல்லி நடத்திய விதத்தில் இருந்தே அவரின் பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள முடியும்பாதை எங்கும் நல்ல வரவேற்பு போஸ்டர்கள், பள்ளி மாணவர்கள் வேறு வரிசையாக நின்று வரவேற்றதுடன், பாதைக்காக சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டு ஒழுங்கமைவைக் காட்டியது.

முன்னால் அமைச்சரும் இந்நாள் பாப்பிரெட்டிப் பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி. பழனியப்பனை குத்து விளக்கேற்றி துவக்க அழைத்திருந்தார். ஆனால் அவர் சென்னைக்கு சென்று விட்டதால் அவர் தவிர அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சி. தென்னரசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் சி. சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிப்பிள்ளைகளுக்கு முகாம் விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன.

கல்லூரியின் கைதேர்ந்த 20 மருத்துவர்கள் சுமார் 600 மாணவ மாணவியர்கள் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் இந்த முகாமில் பற் பரிசோதனை செய்யப் பட்டனர். மேலும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிலாளர்கள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செம்முனி பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்து ஆங்காங்கே மாபெரும் கட்டணமில்லாத பல் மருத்துவ முகாம் என்று ஒட்டியிருந்ததுடன் செய்தி நோட்டீஸ்களையும் விநியோகித்திருந்தார்.

பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் இந்த முகாமில் பல் ஆரோக்யம் மற்றும் பல் பாதுகாப்பு விரிவுரை செய்தார்.

எனது நிறைவுரையில் பெற்றோர், ஆசிரியர், பள்ளிப் பிள்ளைகள் பற்றிய கலாமின் தங்க முக்கோணமே சமுதாயப் பிணிகளுக்கான தீர்வு என்பதையும்,அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தி மாமனிதமாகுங்கள் என சிறிய மனிதர்களை ஊக்கப்படுத்தினேன்.

நான் இந்த இடத்தில் நிற்கிறேன் எனில் அதற்கு இரண்டு பேர் காரணம், ஒன்று என்னையும் செம்முனியையும் ஒரே களத்தில் இணைத்த சிற்பி.கொ.வேலாயுதம் இரண்டு, பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மதிப்பிற்குரிய ஜா.பேபி ஜான்,இருவரும் இல்லை எனில் நான் இங்கு வந்து உங்கள் முன் வந்து நின்று கொண்டிருக்க முடியாது என சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.

முகாம் நடைபெற கல்லூரியின் முதல்வர் ஜே.பேபி ஜான் அவர்கள் கொடுத்த அனுமதியும் ஊக்கமும் என்னை மேலும் மேலும் சிறந்த பணிகளை செய்ய வைக்கும் என நம்புகிறேன்.

அந்த முகாமில் கலந்து கொண்டாரில் முக்கியமாக‌ உடனே மருத்துவம் தேவைப்படுவார் என சுமார் 150 மாணவர்கள் அடங்கிய பட்டியலையும் பள்ளித் தாளாளரிடம் வழங்கினோம்.

வந்திருந்த அனைத்து விருந்தினர்க்கும் சைவைம் மற்றும் அசைவ உணவு வழங்கிய ஏற்பாடு சிறப்பாக இருந்தது.பள்ளி சார்பாக அனைவரையும் வரவேற்ற செம்முனியின் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் ஏற்கெனவே நானும் எனது நண்பருமான‌ நீதிபதி   கருணாநிதியுடன் சென்று பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவுரை மொழிந்தது இன்னும் நினைவிலிருந்து மறையவே இல்லை என்னும்போது இந்த முகாமும் என்றும் நினைவிருக்கும் வண்ணம் சிறந்திருந்து.

பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியப் பெருமக்களும் ஒழுக்கம் காத்து இந்த முகாமுக்கு முழு மனதோடு ஒத்துழைத்த விதத்தை மறக்கவே முடியாது.

மறக்க முடியாத ஒரு நல்ல முகாம். வந்திருந்த விருந்தினர் அனைவர்க்கும் பகவத் கீதை நினைவுப் பரிசாக வழங்கி அனைவர்க்கும் விலை மதிப்பு மிக்க பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.Image result for manjavadi kanavai near karur


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.No comments:

Post a Comment