Wednesday, September 28, 2016

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.


Image result for aandavan kattalai 2016

1. மதுக் குடி விருந்து எதுவும் இல்லாது படம் எடுத்ததற்காகவும்
2. சண்டைக்காட்சிகள் வன்முறை இல்லாததற்காகவும்
3. கதை ஓடிக்கோண்டே நிறைய நிகழ்வுகளால் பின்னப்பட்டிருப்பதற்காகவும்
4. கோர்ட் சீன்கள்,போலி சான்றிதழ் இயக்கங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் போன்றவை தத்ரூபமாக சினிமாத்தனம் இல்லாமல் இருந்ததற்காகவும்

5. வசனம் நன்றாக எழுதப்பட்டு சடையர் என்பார்களே அது போன்ற சாடல்களுடன் நகைச்சுவை கலந்த தாக்குதல்களுடன் எழுதப்பட்டிருப்பதற்காவும் இந்த படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நல்ல டீம் ஒர்க். காக்கா முட்டைக்கு பிறகு  இது ஒரு நல்ல முயற்சி மணிகண்டனுக்கு அவருடன் அன்புச் செழியன், அருள் செழியன் அனுச்சரன் , கே ஆகியோர் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.

நிறைய நிகழ்வுகள். எனவே கதையாக அந்தக் காலத்தில் சொல்வது போல சொல்லவே முடியாது. படம் பார்த்தால் மட்டுமே எல்லாம் விளக்கும் விளங்கும்.

நல்ல கதை நல்ல படமாக மாறும் என்பது இந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பாடல்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை. அது தேவையுமில்லை இந்த படத்துக்கு. மற்றபடி பின்னணி இசையில் ஒன்றும் குறைவில்லை. யார் அந்த கே(ஆங்கில எழுத்து) இசை அமைப்பாளர் என்பது தெரியவில்லை.

செப்டம்பர் 23 இங்கு நம் நாட்டில் வெளியிட்டிருக்க செப்டம்பர் 29ல் உலகெங்கும் வெளிநாடுகளில் வெளியிடுவதாக செய்திகள்

பன்னி மூஞ்சா வாடா வா என்பார்களே அந்த நடிகர் தோற்றத்தில் சினிமா இல்லை கதையில் பாத்திரத்தில் என அந்த குதிரைக்கார நடிகரைப் போல பிரகாசித்துள்ளார். அந்த வினோதினி வைத்தியநாதன் ஜூனியர் வக்கீல் என்ன ஒரு டைமிங்க் காமெடி, அவர் மட்டுமல்ல‌ சில காட்சிகள் மட்டுமே வரும் கார்மேகக் குழலி அதாங்க ரீத்தா சிங் கதாநாயகியின் தாய் பாத்திரம் கூட கன கச்சிதமாக பொருந்தியுள்ளது. கோர்ட் சீன் பின்னி எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட இது சினிமா சூட்டிங்கிற்காக நடந்தது என்பது தெரியாமல்.

ரீத்தா சிங் கார்மேகக் குழலியின் பத்திரிகை நிருபர் பாத்திரமும், அவர் விஜய் சேதுபதியை வார்த்தைகளால் சொல்லாமல் நேசிப்பதை உணர்வுக் குவியலாய் முகத்தை நடிக்க வைத்திருப்பதை நன்கு உணர முடிகிற நுட்பமான நடிப்பு.

விஜய் சேதுபதி காலம் போலும். இப்போதுதான் தர்மதுரையில் ஒரு ஹிட் கொடுத்தார். இப்போது இதில். ஆண்டவன் கட்டளை என்ற உடன் ஏதோ ஆளும் கட்சிக்காரர்கள் கட்டளை விளையாடப் போகிறது என்று எதிர்பார்த்தால் இது உண்மை, பொய் கலந்த சட்ட நெளிவு சுளிவுகளை, சட்டத்தின் ஓட்டைகளை, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதற்காக இளைஞர்கள் செய்யும் மாய்மாலத்தை, வெளிநாட்டு தூதரகங்களை, வெளி நாட்டுக்கு செல்லும் ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னல்களை சுருக்கமாக சொல்லி நிறைய கதை முடிச்சுகளை நிறைய கருக்களை  சொல்லி விட்டு அடுத்து அடுத்து வீடு மாறுவது போல சென்று கொண்டே இருக்கிறது. போலியான கை எழுத்து போட்டு பாஸ்போட் பிராடாக பெறுவது முதல்....பணம் செலவு பண்ணி வெளி நாட்டுக்கு சென்று ஏமாறுவது வரை...

இலங்கை அகதி பாத்திரம் கடைசியாக தனது மனைவி மக்களை சேதுபதியிடம் பார்த்தால் சொல்லுங்கள் என பரிதாபப் பட வைத்து உச்சிக்கு எடுத்துச் செல்கிறது ஊமையாக நடிப்பது செயற்கையாக போலித்தனமாக பிரதிபலிக்க வைத்து உண்மையான குட்டை உடைக்கிறது கால் முடமில்லாமலே முடமாக நடித்து பிச்சை எடுப்பார் போல.

விஜய் சேதுபதி இளைஞராக நடிக்கிறார்...அது இன்னும் கொஞ்ச காலம்தான் தாங்கும் என நினைக்கிறேன். வயதுக்குத் தகுந்த ரோலில் நடித்தால் இன்னும் சூப்பர் ஹிட் கொடுக்கலாம்.

Image result for aandavan kattalai 2016


ஆனால் இவரைப் பற்றி சிறப்பாக சொல்ல பெரிதாக ஏதுமில்லை என்றாலும் இவரின் படங்கள் இயல்பாக இருப்பதால் வெற்றி பெறுகின்றன என்பது இவருக்கு பிளஸ் பாயின்ட்.

வேலையில்லா இளைஞர் போலிக் கை எழுத்துகளுடன், போலியாக மணமாகியதாக ஒரு பெண் பேரை விசா வாங்க  இலண்டன் செல்ல மேற்கொள்ளும் முயற்சியில் தமது நண்பர் எப்படி வெற்றி பெற்று துன்பப் படுகிறார், இவர் தோல்வியடைந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை தப்பிப்பதுடன் தமது வாழ்க்கைத் துணையை எப்படி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பதற்கு இந்த ஆண்டவன் கட்டளை பிரிந்து போகிறோம் எனச் சொல்லி சொல்லி சேர்ந்து வாழ இயற்கை போடும் அழகான முடிச்சுகளை போட்டு காந்தியையும் கார்மேகக் குழலியையும் இணைக்கும் கதை.

ரித்திகா சிங்க் நல்ல மெறுகேற்றம் இறுதிச் சுற்றுக்கும் பிறகு. நாசருக்கு மறுபடியும் ஒரு அல்வா சாப்பிடுவது போன்ற நல்ல பாத்திரம். வில்லனாக பெரும்பாலும் நடித்த இந்த நடிகர் இப்போது நல்ல குணச் சித்திர நடிகராகவே மிக நீண்ட காலமாக தமிழ் சினிமா இவரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிலை. இராமைய்யா போல. சிங்கம் புலிக்கு சொல்லும்படியான பெரிய ரோல் இல்லை. உடம்பும் ஊதிக் கொண்டிருப்பது தெரிகிறது.
Image result for aandavan kattalai 2016



3 மாசமா ஒரே வேலையில் இருக்கிறாள், என கார்மேகக் குழலியை இவங்க அம்மா பாராட்டுவது போல பாராட்டுகிறார் பாருங்கள் வசனத்தை எடிட்டிங்கை காட்சி அமைப்புகளை நன்றாக செதுக்கியுள்ளார்கள். நன்றாக இரசிக்க முடிகிறது. இரவு 11.11 மணிக்கு பார்த்து முடித்தேன்

Image result for aandavan kattalai 2016

மறுபடியும் பூக்கும் தளம் இந்த படத்திற்கு 55+  மதிப்பெண் தருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment