Tuesday, August 23, 2016

இப்படி இருந்தால் எப்படி போராடாமல் இருக்க முடியும் இந்திய தமிழக அரசுகளே? ‍‍‍___ கவிஞர் தணிகை

இப்படி இருந்தால் எப்படி போராடாமல் இருக்க முடியும் இந்திய தமிழக அரசுகளே? ‍‍‍___ கவிஞர் தணிகை

புதுசாம்பள்ளியில் ஏன்  சேலத்திலிருந்து மேட்டூர் வரும் மாலை நேர பயணிகள் இரயிலை நிறுத்தக் கூடாது என ஏற்கெனவே ஒரு பதிவிட்டிருந்தோம். நமக்கு எப்போதும் வன்முறையில் நம்பிக்கையில்லை. எப்போதுமே ரயில் பயணத்தில் இளைஞர்கள் செய்யும் துடுக்குத் தனத்தை கண்டித்து அவர்களை நல்வழிப் படுத்தி வருகிறோம்,

ஆனாலும் இன்று கூட ஒரு கல்லூரி மாணவர் ஓமலூர் ரயில் நிறுத்தத்தில் இரயில் நிற்கும் முன்பே குதித்து கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டார் ரயில் உடனே நின்றதால் நல்ல வேளை பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் மேச்சேரி, ஓமலூர் இரண்டே நிறுத்தம்தான் இந்த இரயிலுக்கு. சரி. ஆனால் அங்கு இறங்கும் பயணிகளை விட பல மடங்கு அதிகமாக இறங்கும் எண்ணிக்கையில் சொல்லப் போனால் குறைந்தது 40 முதல் 50 பேர் வரை அன்றாடம் இறங்கும் , ஓடும்போதே ரயிலில் இருந்து இறங்கும் நிலை உள்ளது. இத்தனைக்கும் மேட்டூர் ரயில் நிலையம் முன் வரும் சிக்னல் விளக்கு இங்கே உள்ளது. அதைக் காரணமாக வைத்து மெதுவாக செல்லும் இந்த இரயிலை ஒரு நிமிடம் நிறுத்தி எடுக்கக் கூடாதா ஏன் 30 நொடிகள் நிறுத்துகிறோம் என உறுதியாக சொன்னாலும் அதை நல்ல வகையில் பயன்படுத்தி அனைவரும் இறங்கி விடுவோமே...

இது பற்றி நாம் முன்பே சொன்னபடி: முதலில் வழக்கறிஞர் அருணாச்சலமும் நானும் சேலம் கோட்ட மேலாளரை சில கிலோமீட்டர் நடந்து  கோட்ட அலுவலகத்தில் சந்திக்க சென்று அவரது நேர்முக உதவியாளர், தனி உதவியாளர், பொதுமக்கள் நல்லுறவின் அலுவலர் ஆகியோரை சந்தித்துப் பேசி 05.07.16 தேதியிட்ட கடித மனுவை கொடுத்து வந்தோம்.

அவர்கள் இந்த அதிகாரம் தென்னக ரயில்வேயின் பொது மேலாளரிடம் உள்ளது அவருக்கும் ஒரு மனுவை கொடுங்கள் என்றனர். சரி என்று அன்றே ஒரு கடிதமனுவை அனுப்பி வைத்தோம்.நீங்கள் மாணவர்களிடம் கையெழுத்தெல்லாம் வாங்கி அனுப்பி வைக்க வேண்டியதில்லை நீங்கள் மட்டுமே எழுதினாலும் போதும் என்றனர்.

சரி என செய்து வைத்தோம். அதே காலக் கட்டத்தில் எல்லாருக்கும் எல்லா மெயில் ஐ.டிக்கும் ரயில்வே மேம்பாடு குறித்து மாண்பு மிகு சுரேஷ்பிரபுவின் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்க அதையே சாக்காக வைத்து ரயில் நிலையத்தில் இருக்கும் அசுத்தம் சரி செய்ய வேண்டும் மேலும் மேட்டூர் ரயில் நிலையத்தில் பெண்களுக்கான கழிப்பறையும், குடி நீரும் கூட இல்லை எனக் குறிப்பிட்டு இந்த ரயில் நிறுத்தம் பற்றிய மனுவையும் அனுப்பி வைத்தேன்.

எனினும் ஒன்னரை மாதமாகியும் எந்த பதிலும் செயலும் இல்லை. எனவே மாணவர்களிடம் கையெழுத்து இரண்டு தாள்களில் இரு வேறாக பெற்று ஒன்று பிரதமருக்கும் மற்றொன்று இந்தியக் குடியரசுத் தலைவருக்குமாய் அனுப்பி வைத்தேன்.

அதே நாளில் அதாவது ஆகஸ்ட் 19.2016ல் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் தளத்திற்கும், பிரதமர் தளத்திற்கும் சென்று இந்தப் பிரச்சனையை பொதுமக்கள் குறை தீர்க்கும் பிரிவில் ரெயில்வே என்ற பிரிவை தேர்வு செய்து அனுப்பி வைத்தேன். அதற்கு பதிவு அத்தாட்சி செய்து எனது செல்பேசிக்கும் , மின்னஞ்சலுக்கும் ஒப்புகை பதிவு அத்தாட்சி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் உயிர் போகும் ஆபத்துதான் இது , இது வரை இன்றும் என்றும் இளைஞர்களும் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே குதித்தே இறங்கி வருகிறோம்.

இளைஞர்கள் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் அரசாங்கம் ஏதாவது  நடவடிக்கை எடுத்துள்ளதா என...ஒன்றும் இல்லை என்பதே எனது பதிலாக இதுவரை இருக்கிறது.

மாதம் 2 ஆனபோதும் இது போல் நடவடிக்கை இல்லாமல் இருந்தால்  அதற்கு பேர் என்ன அரசு, நாடு, ஆட்சி என்றுதான் புரியவில்லை, நாங்கள் அஹிம்சைவாதிகள், சகிப்புத்தன்மையுடன் எல்லாவற்றையும் சந்திக்கிறோம். அதற்காக இன்றைய இளைஞர்களும் எல்லாரும் அப்படியே இருப்பார்களா என்ன? அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும், சொல்வதும் சரியாக இருக்காதே.இந்நிலையில் தொளசம்பட்டியில் ரயில் நின்று சென்ற போது நிறைய பயணிகள் கல்லூரி மாணவ மாணவியர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர் என அந்த நிறுத்தத்தையே ரயில்வேத் துறை நீக்கி விட்டதாக பழைய பயணிகள் சொல்கின்றனர். ஆக இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனியார் பேருந்து முதலாளிகளுக்கும் இந்த ரயில் போக்குவரத்துக்கும் பெரும் தொடர்பு இருப்பதாகவே படுகிறது. ஏனெனில் மேட்டூரில் இருந்து காலை புறப்படும் ரயில் அலுவலக நேரத்துக்கு அல்லது கல்லூரி நேரத்துக்கு முன் சென்றால் நூற்றுக் கணக்கான பயணிகள் ஏறுவதால் பேருந்துகள் நிறையாது என்று தனியார் பேருந்து முதலாளிகளின் கோரிக்கையை அரசியலாக்கிய விளைவே அந்த பயணிகள் ரயில் காலையில் குறித்த நேரத்த்தில் கிளம்புவதில்லை என்பதாகவும் அறிகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment