Thursday, August 25, 2016

இதுதான் நம்ம இந்தியா 70: கவிஞர் தணிகை

இதுதான் நம்ம இந்தியா: கவிஞர் தணிகை


Image result for orissa man carries her wife's body more than 10 km by hand


70 ஆண்டு சுதந்திரம் பெற்றதாகப் பீற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மனிதன் தன் இறந்த மனைவியை தோளில் சுமந்து பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு 10 கி.மீ நடந்து தனது 60 கி.மீ வீட்டை மருத்துவமனையிலிருந்து அடைய... சொல்லி விட்டால் தூற்றிவிட்டோம் என எவருமே நாம் எழுதுவதை வெளியிடாமல் மறைக்கின்றனர். ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஒலிம்பிக்கில் பெற்ற அதே தருணம் ஒரு தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு வீராங்கனை 20 வயதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஏனென்று கேட்க நாதி இன்றி...

நான் 1985களில் 3 மாதம் கோராபுட் மாவட்டத்தில் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்தேன், அப்போது எனது பணித் தோழர்களில் சிலர் காலாகண்டி, புல்பானி மாவட்டங்களிலும் பணி புரிந்து வந்தனர். வாழ்க்கை அங்கு இன்னும் மேம்படவேயில்லை. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலமும் ஒரிஸ்ஸாதான், மிகவும் பின் தங்கிய மாவட்டங்களும் அங்கேதான் உள்ளன.இன்னும் நிலை மேம்படவில்லை.

ஒரிஸ்ஸாவை ஒடிசா என்பார், வங்கத்தை பெங்கால் என்பார், தெலுங்கானா என்பார், தமிழ் நாடு என்பார் இப்படி பேர் மாற்றி வைத்தாலும் மக்கள் நிலை மாறவில்லை என்பதற்கு இந்த செய்தி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக..

அங்குள்ள முதல்வர் நவீன்பட்நாயக் கடந்த பிப்ரவரி மாதம்தான் ஏழைக்கு இலவச அமரர் ஊர்தி திட்டத்தை கொண்டு வந்ததாகவும் அது செயல்படும் இலட்சணம் தான் இது என்பதும் செய்தி. நல்லவேளை நடவடிக்கை எடுத்த மக்களும், ஊடகங்களும், மாவட்ட ஆட்சித் தலைவரும் மீதமுள்ள 50 கி.மீ இந்த சத்ய நடைப்பயணம், சவம் சுமந்த பயணம் நடைபெறாமல் புண்ணியம் கட்டிக் கொண்டனர். என்னே நாடு இது எத்தனை சுகங்கள்...உலகிலேயே தனிமனிதர் வருவாய் உள்ள பணக்கார நாட்டு பட்டியலில் 7 ஆம் இடத்தில் முன்னேறிய நாடுகளையும் பின் தள்ளி இருக்கிறதாம். அந்தோ பரிதாபம்...

செய்தி: ஆங்கிலம்: டைம்ஸ் ஆப் இந்தியா
          தமிழில்: மாலை மலர் 25.08.16.

செய்தி உங்கள் கவனத்திற்கு:

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த மனைவியை தோளில் சுமந்து சாலையில் சென்ற மனிதர்


ஒடிசா மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தனது மனைவியை தோளில் ஒரு மனிதர் சுமந்து கொண்டு சாலையில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பவனிபட்னா பகுதியில் நேற்று காலை ஒரு மனிதர் தனது தோளில் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கும் தனது மனைவியின் பிணத்தை சுமந்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 12 வயதுமிக்க அவரது மகள் அந்த மனிதருடன் நடந்து சென்றார்.

மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தன்னுடைய மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்ல வாகன வசதி எதுவும் கிடைக்காததால் இவ்வாறு அந்த மனிதர் நடந்தே சென்று கொண்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து அவரது வீடு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்த பின்னர் தொலைக்காட்சி குழு ஒன்று அவரை அணுகி விசாரித்துள்ளது. அப்போது, ஒடிசா மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டமான காளஹந்தியை சேர்ந்த மஜ்ஹி என்ற அந்த மனிதரின் 42 வயது மனைவி அமங் தேய் காசநோய் தாக்கி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும், “நான் மிகவும் ஏழை மனிதன் என்றும் என்னால் இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் தாயார் முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்” என்று மஜ்ஹி அவர்களிடம் தெரிவித்தார்.
 
முன்னதாக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களை கருத்தில்  கொண்டு இலவச அமரர் ஊர்தி திட்டத்தை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தி இருந்தார். இருப்பினும் நிறைய மருத்துவமனைகள் அந்த திட்டத்தை முறையாக கடைபிடிப்பதில்லை.

உடனடியாக அந்த தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட கலெக்டரை தொடர்ந்து கொண்டு மீதமுள்ள 50 கிலோமீட்டர் செல்ல வாகனம் ஏற்பாடு செய்தனர்.

இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் கிடைக்காமல் சாலையில் தோளில் சுமந்து கொண்டு சென்ற கணவர் பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment