Tuesday, December 11, 2018

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை


                                 பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

. பாலாஜி B.E                                    14 12 2018         Dr.R.G..ஜனனி M.D.S

 இடம் : ஸ்ரீ தேவி திருமண மஹால்,  அவினாசி சாலை நீலாம்பூர் கோவை.

என்னைக் கவிஞர் என்கிறார்கள், கவிஞர் வாக்கு பொய்க்காது

அழகிரிக் குடும்பத்தின் குலக் கொழுந்து பாலாஜி ஜனனியுடன்
கிளை பரப்ப பூ விரிக்க விதை சேர்க்க  மகரந்த சேர்க்கை நடத்தும் காலம்
மணவிழாக்கோலம் .

இப்போது அழகிரிக் குடும்பத்தை எப்படி வாழ்த்துவது என
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
Image result for beautiful scenes of nature to marriage wishes
கல்லூரி இரண்டாமாண்டில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டதிலிருந்து
நாற்பது ஆண்டுக்கும் மேலும் எங்கள் பந்தம் தொடர்கிறது
இவனைப் பெற்றவரிலிருந்து அவர்களைப் பெற்றவரிலிருந்து
இவன் பெற்றது வரை நாங்கள் தொடர்ந்து வருகிறோம்
 Related image
எல்லாவற்றையும் சொல்ல மொழி இல்லை, எழுத சொல் இல்லை

அழகிரியின் குடும்பத்துக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன்
கைம்மாறு செய்ய என்னிடம் ஏதும் இல்லை...
என் பெரிதுவக்கும் வார்த்தைகளையன்றி
 Related image
வார்த்தைகள் சில நேரம் உறவுகளின் நெருக்கத்துக்குள் புகுந்து
இடைவெளி ஏற்படுத்தி விடுகின்றன ஆனாலும்
அடையாளமாகி என்றும் நிற்கின்றன.

வாழ்வது என்பதன் மகத்துவம் குல வளர்ச்சியில்
வாழ்வாங்கு வாழ்வது என்பது உறவின் மலர்ச்சியில்
இந்த "சீனாக்காரன்" மிகவும் அதிர்ஷ்டசாலி என்பார்கள்
எப்போதும் விளையாட்டுப் பிள்ளை இன்றும் என்றும்

Image may contain: 2 people, including தமிழ்மகன், people smiling, hat, eyeglasses and closeup


எனது குடும்பத்தின் வாழ்த்துகளும் ஆசிகளும்
இவனது குடும்பம் சேரும்
"மணமக்கள் பதினாறும்  பெற்று பெரு வாழ்வு வாழ்க"!


அன்புடன்: சு. தணிகை, ..வடிவு தணிகை மணியம்.

Image may contain: 1 person, outdoor


Sunday, December 9, 2018

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை
Image result for body weight related with sweets


காதல் என்பது இனிப்பு விஷம் என ஒரே மாதிரி நீலக்கலர் யமாஹா வைத்துக் கொண்டிருந்த 3 நண்பர்களுள் ஒருவர் எழுதி வைத்துக் கொண்டிருந்தார். அது அன்று. இன்றும் என்றும் காதல் என்பது எப்போதும் ஒரு இனிப்பான வசியமான விஷயம்தான்  என்பது வேறு அது பற்றி நான் சொல்லப் புகவில்லை. எனது இப்போதைய பகிர்வு உங்களுக்கும் ஒரு நாள் உதவலாம் என்றே...

எனது உறவுப் பெண் ஒன்று விட்ட சகோதரியின் மகள் குழந்தை எடை குறைவாகவே இருக்கும் நாங்கள் அவனுக்கு பேர் சொல்லாமல் ஒன்றரை கிலோ என்றே கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் அழைப்போம். அதுவும் இப்போது சொல்லவில்லை ஏன் எனில் குழந்தைகள் பருவத்தில் மிகவும் மெலிந்து காணப்படும் பெண் குழந்தைகள் திருமணமாகிய பின் பார்த்தால் மிகவும் பருத்து விடுகின்றனர். இதையே முன்னோர்கள் பெற்ற இடத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் புகுந்த இடம் போனபிறகு குண்டாக ஆகிவிடுவதும் பிறந்த இடத்தில் குண்டாக இருக்கும் பெண்கள் புகுந்த இடத்தில் போனதும் ஒல்லியாக ஆகிவிடுவதும் இயல்பாக இருக்கிறது என்கிறார்
Related image
ஆனால் இதை எல்லாம் மீறிய விதிவிலக்குகள் அல்லது இவை எல்லாம் பொருந்தாத  நபர்களும் உண்டு...எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா?

வழக்கம் போல அன்று வேம்படிதாள அரசு மருத்துவமனைக்கு எங்கள் கல்லூரியின் மருத்துவக் குழுவினர் சென்றிந்தோம். அங்கு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் எங்களது பல் மருத்துவக் குழு காலை பத்து மணி முதல் பனிரென்டு வரை முகாம் செய்து மருத்துவ சிகிச்சை செய்வது வழக்கம் இது தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடந்து வருவதுதான் ஓய்வு நேரத்தில் முன்னால் உள்ள புற நோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு புற நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு, உள் நோயாளிகள் எனில் அதற்குண்டான அனுமதிச் சீட்டு, மேலும் மருந்து எடுத்துத் தரும் கம்பவுண்டருக்கு சற்றே உதவும் வண்ணம் அவருக்கு மருத்துவர் பார்த்த பின் கொண்டு வரும் எண்களுக்கான மருந்துப் பொருட்கள் யாவை எனக் கணினியில் அச்சடித்து அவர் கேட்கும் ஊசி இருக்கா எனப் பார்த்துச் சொல்லுதல் இப்படி அங்கே இருக்கும் சித்த மருத்துவ நண்பர் முதல் அனைவரும் அங்கு எனக்கு நல்ல நட்பு. உதவியாளர்கள் செவிலியர் யாவருமே...

யதேச்சையாக எடை போட்டுப் பார்த்தேன் அறுபத்து நாலரை கிலோ என்று அந்தப் பெண் செவிலியர் கூறினார். நம்பவில்லை. நம்பமுடியவில்லை. தாஸ் நீங்களே வந்து பாருங்கள் என்றார். தாஸ் என்பவர் அந்த மருத்துவ மனையின் ஆன் இன் ஆல் அழகு ராஜா...உதவியாளர்... அவரும் அப்படியே சொன்னார் ....மெஷின் ஏதாவது ரிப்பேரா என்றேன்...

ஏன் எனில் மிகவும் கவனமாக ஹெல்த் பேண்ட் எல்லாம் கட்டிக் கொண்டு நடைப்பயிற்சியில் எல்லாம் முழுமையாக ஈடுபட்டு எனது உடல் எடையை 60 கிலோ கிராம் என்றே பராமரித்து வரும் எனக்கு ஒரேயடியாக நாலரை கிலோ அதிகம் என்றவுடன் ஏற்க முடியவில்லை.

எனக்குத் தெரியாமலே எந்த இடைஞ்சலும் தொல்லையும் தராமலே அது அதுவாக இருப்பது போலவே இருந்து கொண்டு எடை கூடியிருந்தது.... உடனே எங்கு என்ன என பரிசீலித்தால் ஒன்றுமே புரியவில்லை எல்லாம் அதனதன் போக்கில் இருப்பதாகவே பட்டது.
Image result for body weight related with sweets
ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் செய்தி மூட்டையை அவிழ்த்தவுடன், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏகப்பட்ட சாக்லேட், டென்மார்க்கிலிருந்து ஆசை ஆசையாய் தங்கை மகள் வாங்கி வந்த வித விதமான வகை வகையான சாக்லேட்கள், தீபாவளி இனிப்புப் பண்டங்கள்,கேக், மற்றும் சரவணாவின் நெய் பிஸ்கட்கள்,திருப்பதி இலட்டுகள்  இப்படி இந்த பருவம் எல்லாம் விளையாடி இருந்தது குறிப்புகளாய் தரப்பட்டது... இத்தனைக்கும் உப்பு, சர்க்கரை, மூலம், குடல்புண், உணவுக் குழல் தழற்சி , உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளதன் அறிகுறிகள் யாவற்றையும் அடக்கி ஆண்டு வரும் உணவுக் கட்டுப்பாடு எல்லாம் அனுசரித்து வருவதும் என்னுடன் இருக்கிறது. இது மலேரியா டைபாய்ட் தோல் வியாதிகள் என யாவற்றையும் வெற்றி கண்ட உடல்.

மேலும் அடிக்கடி மலைப்பிரதேசங்களில் பணி புரிந்தபோது வயிற்றுப் போக்கு அவ்வப்போது நிகழ அதன் பலனாய் ஆர்வோ வாட்டர், வடிகட்டி, காய்ச்சி, செம்புக் குடத்தில் ஊற்றிய நீரை அன்றாடம் பணிக்குச் செல்லும்போது எடுத்துச் செல்வது போன்றவையும், வீட்டில் கருஞ்சீரகம் வெந்தயம், மாலையில் நடைப்பயிற்சியில் சிறிய அளவு 10 எண்ணிக்கை ஆவர மொட்டுகள், சில வில்வ இலைகள் இப்படி எல்லாம் உட் கொண்டு எந்த பிணியும் தற்போதைக்கு அண்டாமல் விரட்டி வருவதும் உண்டு வருவதை மிகச் சரியாக கடைபிடிப்பதும் உண்டு.

அன்று முதல் இனிப்பு சாப்பிடுவதில்லை வயோதிகம், உடல் தேய்மான அறிகுறி ஆகியவற்றை அலட்சியம் செய்து சிறு பிள்ளைகள் போல, குழந்தைகள் போல விருப்பப் படி இனிப்புகளை  உட்கொண்டதன் விளைவு...இந்த சத்தமில்லாத விஷ(ய)ம் நடந்திருக்கிறது.
Image result for rajaji and gandhi
இராஜாஜியும் காந்தியும் தன்னிடம் வந்த பெற்றவளுக்கு இந்தப் பிள்ளை அதிகம் இனிப்புப் பண்டம் சாப்பிடுகிறான் இவனுக்கு அறிவுரை சொல்லுங்கள் எனக் கேட்டு நீங்கள் சொன்னால் கேட்பான் என்றதற்கு சில வாரங்கள் கழிட்து வாருங்கள் எனச் சொல்லி விட்டு அந்த சில வாரங்கள் கழிந்து வந்த தாயுடன் மகனுக்கு அது தவிர்க்கப்பட வேண்டியதுதான் என்று அறிவுரை சொன்னார்கள். ஏன் அதை அந்த சில வாரங்களுக்கும் முன்பே சொல்லி இருக்கலாமே என்றதற்கு அது முடியாது ஏன் எனில் அப்போது நானே அப்படி சாப்பிட்டு வந்ததால் அதை சொல்ல முடியாமல் போயிற்று. அதன்பிறகு அதை நான் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால் இப்போது சொல்லும் தகுதி வந்து விட்டது எனவே இப்போதுதான் சொல்ல முடிந்திருக்கிறது என்றார்களாம்.

இன்று மூதறிஞர் இராஜாஜி பிறந்த நாளாம்.

நான் இந்த விஷயம் தெரிய வந்தவுடன் அதாவது பிறந்த நாள்  பற்றி அல்ல...இனிப்பு என்பது உடல் எடையைக் கூட்டி கொழுப்புச் சத்தை வேண்டாத கொழுப்புச் சத்தை உடலில் ஏற்றும் என்று தெரிந்த சில நாட்களுக்கும் முன்பிருந்தே அதை துறந்து விடத் தீர்மானித்து விட்டேன்.
இனி நானும் மற்றவர்களுக்குச் சொல்லலாம் தானே...


உடனே தங்கை சொல்கிறார்  அவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை. அதெல்லாம் விட வேண்டியதில்லை. பாதாம் பருப்பு வாங்கி கொதி நீரில் போட்டு வேக வைத்து அதன் தோலை நீக்கி விட்டு சில பருப்புகள் சாப்பிட்டால் போதும் உடல் கொழுப்பு தானாக குறைந்து தேவையான அளவுக்கு வந்து விடும். இனிப்பு சாப்பிடுவதை எல்லாம் அறவே விட வேண்டாம் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிறார். ஆனால் எதற்கு அந்த விஷப்பரிட்சை எல்லாம். மாதாந்திர மளிகை செலவில் வீட்டம்மா பாதாம் பருப்பு ஹார்லிக்ஸ் கறுப்பு கொட்டை திராட்சை போன்றவை  வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இடம் கொடுக்க வில்லை என்றும் சொல்லி விட்டார்.  எனவே விட்டு விடுதல் நல்லது. இதற்கும் மேல் ஆசைப்படாமல். துறந்து விடுவது நல்லது. துறவு நிலை நல்லது. திருவண்ணாமலை மூக்குப் பொடி சித்தர் நிறைவடைந்து விட்டாராம். நீர் உணவு எடுத்துக் கொள்ளாமலே...வயோதிகத்தினால். கடலூரின் கடற்கரைச் சென்று கடலை ஏன் சத்தமிடுகிறாய் அமைதியாய் இரு என்றாராம்...அதன் பின் புயல் வந்ததாம்...மூக்குப் பொடியை மட்டும் ஏன் இவர் விடாமல் இருந்தார் எனத் தெரியவில்லை...எல்லாம் செய்திகள் தான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, December 1, 2018

2.O 3..O mINIMAL maximal ....waste of cost.எல்லாம் ஜீரோதான்: ..கவிஞர் தணிகை

2.ஓ ,3.ஓ,எல்லாம் ஜீரோதான்: கவிஞர் தணிகை

Image result for shankar


Image result for shankar

பி.கு: பாஹுபலி கிராபிக்ஸ் கதையை ஒட்டி இருந்ததால் பார்க்க முடிந்தது. இதில் எல்லாமே கிராபிக்ஸ் என்றிருப்பதால் சிறுவர்களுக்கே ஏற்றதாகிறது



இவ்வளவு பொருட் செலவில் எதற்கு இந்தப் படம் என்பதுதான் எனது கேள்வி....சிறு பிள்ளை விளையாட்டு. குழந்தைகளுக்கேற்ற படம். வீடியோகேம் ஆடுகிறார்களே அவர்களுக்கு ஏற்றது மற்றபடி இந்தப் படம் செய்ததற்கு மேலாக பரியேறும் பெருமாள் போல நூறு நல்ல கதைகளைத் தேர்வு செய்து படமாக கொடுத்திருக்கலாம்.

மினிமல் 3. ஓ புறாமேல் வருவது... ஒரே உருவத்தில் பல பிரதிகள்...பட்சிராஜனை பழிவாங்குவதாக சொல்வது...சிட்டி 2.ஓ 3.ஓ எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. நிலாவும், பட்சிராஜன் என்று சொல்லப்படும் சலீம் அலி பறவை இயலாளர் பற்றிய செய்தியும் மட்டுமே படத்தில் வெளிப்படுத்தப்பட்டதில் தரமாக இருப்பவை.

சிட்டுக்குருவி இனம் உண்மையிலேயே எண்ணிக்கை குறைந்துதான் இருக்கிறது. இதற்கு செல்பேசி கோபுரம் தான் காரணம் என்றும் செல்பேசியின் அதிர்வலைகள்தாம் காரணம் என்றும் அறிவியல் பூர்வமாக நிரூப்ணங்கள் இல்லை என்றும் செய்திகள் இருக்கின்றன.ஆனால் கதை என்று பார்க்கும்போது செல்பேசி டவர்கள்...பறவைகள்...பறவையைக் காக்க விரும்பும் பட்சி ராஜன்..மற்றபடி ஆவி, ரோபோ, இப்படி சாதாரண தரமான சிந்தனையற்ற முறைகள் இந்தப் படத்திலும் காணப்படுகிறது.

வெறும் கிராபிக்ஸ் விசூவல் எஃபக்ட்ஸ், ரசிகர் கூட்டம் வைத்துக் கொண்டே மாபெரும் சாதனை என்று வெறும் விளம்பரம் செய்து கொண்டு போட்ட முதலை திரும்ப எடுக்க திண்டாடி வருவதாக செய்திகள்

எந்திரனே அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்று நாமெல்லாம் எழுதி இருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது அதை ஒப்பிட்டாலும் இது படு மோசம்.

கதை என்ற ஒன்று வலுவாக இல்லை... வெறும் காட்சி வெளிகளில் போலிகள் உண்மையிலேயே இது இரசிக்கத் தக்க படமாக அமையவில்லை.
மேலும் இதை ஆங்கிலப் படத்துக்கும் மேலே என்பதும், ஆடு வெட்டுவது, கேக் வெட்டுவது யானை மேல் வருவது, பால் அபிசேகம் செய்வது யாவும் மக்கள் பிரச்சனையி திசை திருப்பவே பெரும்பாலும் உதவும்.

ஸ்டெரிலைட் பிரச்ச்னையில் நீதிமன்றம் கை விரித்து பணக்கார நிறுவனத்துக்கு ஆதரவான நிலை எடுக்கும் காலத்தில் கஜா தாண்டவமாடி இருக்கும் காலக்கட்டத்தில், இதென்னவோ மனிதகுலத்துக்கு மேன்மை செய்ய வந்த ஒரு பாதையைக் காட்டுவது போல வெட்டி பந்தா வெறும் உதார் படாமாக அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு ரஜினியின் காலா, கபாலி, லிங்கா போல வெறும் விளம்பரத்தை வைத்தே நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

சசிபெருமாளை மதுவிற்கு எதிராக போராட வைத்த எங்கள் இயக்கத்தின் சார்பாக இந்த செல்பேசி டவர் கோபுரக் கதையை எங்களால் ஏற்க முடியவில்லை. அது நிஜம். இது ஒரு மிகையான அபரிமிதமான செல்பேசிகளின் கற்பனை ஏன் அதீதமான கற்பனை என்றும் கூட சொல்லலாம்,.

சங்கர் இந்த முறையும் தோற்று இருக்கிறார் தமது பெரு முயற்சி எனச் சொல்லப்பட்ட படத்தில்...

இந்தியன் 2 வது இவருக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்...

வட போச்சே, நாலு பேருக்கு நல்லது செய்யலாம், புள்ளினங்காள் இப்படி சில சொற்றொடர்கள் இரசிக்கத் தக்கவாறு இருப்பதையன்றி இந்தப் படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடி இல்லை என்றே சொல்ல வேண்டும்

பார்க்கலாம் பார்க்காமல் விடலாம்...உங்கள் விருப்பம்.
நான் தமிழ் ராக்கர்ஸ் வழியே ஒரு கல்லூரி மாணவர் டவுன் லோட் செய்த படத்தையே பார்த்தேன் இதை 3 டி தியேட்டரில் பிரும்மாண்டமான தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. பணம் விரயம் என்றே நினைக்கிறேன்.

மேலும் பிறர் போட்ட அதே 3 டி கண்ணாடியை நமக்கும் தருவதால், இந்த நோய்தொற்றும் காலத்தில் இது பெரும் ஆரோக்ய சுகாதாரப் பிர்ச்சனையுடன் கலந்திருப்பதால்...எவரும் இது போன்ற தவறை செய்ய வேண்டாம் அது உங்கள் உடல் நலத்துக்கு கேடாக முடியும்.

பிறர் உபயோகித்த கண்ணாடியை நாம் உபயோகிக்கக் கூடாது என்பது சரியான முடிவே...

வசீகரன், ரோபோ, நிலா இப்படி எதைப்பற்றி சொன்னாலுமே சொல்கிற அளவில் இரசித்து குறிப்பிட்ட இடத்தைத் தொட்டுக் காட்டுகிற மாதிரி படத்தில் ஒன்றுமில்லை. சங்கரின் ஜென்டில்மேன், காதலன்,இந்தியன், முதல்வன், அந்நியன் அளவில் எல்லாம் இதை வைத்துப் பார்க்கக் கூடாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, November 29, 2018

டூ பாய்ண்ட் ஓ ....ஓ ?!போடு: கவிஞர் தணிகை

டூ பாய்ண்ட் ஓ ....ஓ போடு: கவிஞர் தணிகை


Image result for 2.0

சேலத்தில் கெடா வெட்டினார்கள், ஆத்தூரில் கேக் வெட்டினார்கள், நாகையில் யானை முன் வர ஊர்வலமாய் வந்தார்கள்...பால் ஊற்றி அபிடேகம் செய்தார்கள்....பத்தாயிரத்து 300 தியேட்டர்களில் வெளியீடு...அந்த மகத்தான நாள் வந்தது....உங்களால் நான் , உங்களுக்காக நான்...உங்கள் உப்பைத் தின்று வளர்ந்தவன் , ஐ ம் தி ஒன்லி ஒன்....

இதெல்லாம் டூ பாய்ண்ட் ஓ பற்றி ஒரு மாலை தினசரியில் வந்த் தகவல்கள்...மேலும் தமிழ் ராக்கர்ஸ் ஹெச் டி பிரிண்டில் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள்ளாகவே இணையத்தில் வெளியிட்டு விட்டது என்றும்...

550 கோடி பொருட் செலவில் தூக்க முடியாத ட்ரஸ் எல்லாம் தூக்க வைத்து 67 வயது மனிதரை 4 வேடம் ஏற்கச் சொல்லி படத்தை ஓட்டி விடுவார்கள் என்றும் செய்திகள்.

அக்சய குமார் வேடம் பறவைகளின் நண்பனாக இருந்து செல்போன் கேடுகளுக்கு எதிராகப் போராடுவதாக அதை ரீ லோடட் சிட்டி எதிர்த்து அழிப்பதாக‌

கதையே இல்லாமல் சைண்டிபிக் பிக்சனாக  வெறும் கிராபிக்ஸ் அதிசயக் காட்சிகளை எல்லாம் காட்டி பிரமிக்க வைத்து ஆங்கிலப் படங்களே அண்ணாந்து பார்க்க வைக்கிற படம்,  பாகுபலி பக்கத்தில் நிற்க முடியாது என்று எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...

இப்படியே பேசினால் இவரும் அடுத்த எம்.ஜி.ஆராக கட்சி நடத்தி ஆட்சி அமைத்து விடுவாரோ என்று இவரது இரசிகர்கள் கருத...

ஆனால் அவரோ சினிமாவை நல்ல விதமாக ஓட்டி பேர் எடுத்துக் கொள்ளலாம் என நகர்ந்தபடி இருக்க....எமி ஜாக்சனை டூ பீஸில் காண்பித்தும், எல்லாமே ரோபாதான் என்று சொல்லியும் வசீகரன் மனிதராக இருப்பவன் அதை எப்படி எதை வைத்து வெல்கிறான் என்பதே இந்தக் கதையின் கரு.

குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் வியந்து பார்க்கலாம் ஒரு சினிமாவாக...சினிமாவை சினிமாவாகப் பார்க்கலாம் பாருங்கள்...ஆனால் அதை விட மித மிஞ்சிய கற்பனை எல்லாம் வேண்டாம்.

சங்கரின் கற்பனை பிரம்மாண்டமாக திரையில். ஆனால் இந்தப் படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சாதாரண தியேட்டர்களில் வெளியிடுவதில் பயனில்லை...

இந்தப்படத்தில் பெறும் ஊதியத்தை கஜாவுக்கு கொடுப்பார்களா இதில் ஈடுபட்டுள்ளவர்கள்...எல்லாம் வியாபாரம்...வெற்றி தோல்வி இப்படித்தான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, November 26, 2018

அவர்கள் காற்றைப் போன்றவர்கள்: கவிஞர் தணிகை

அன்பு நண்பர்க்கு:
Image result for mentally disordered persons in roadsides

வணக்கம்.

1.ஒரு முறை மகன் மணியத்தின் விளையாட்டுச் சீருடை செட் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று எங்கள் ஊரில் சக்குண்ணி டைலர் கடை இருந்த இடத்தில் இருக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதருக்கு (அவர் எப்போதும் கரிய ஆடையில் இரு கைகளும் இரு பை மூட்டை தாங்க இங்கிருந்து மேட்டூருக்கும் மேட்டூரில் இருந்து எங்கள் ஊருக்கும் பயணம் செய்து வருபவர்தாம் சாலைகளில் பார்த்திருக்கலாம்...அவர் உள்ளூர்க்காரர்தாம் நாவிதத் தொழிலை மேற்கொண்டிருந்தது அவர் குடும்பம். ஆனால் அவரது சகோதரர்கள் எல்லாம் கெமிகல், மில் ஊழியராக நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் .இவரும் பள்ளி இறுதி வரை படித்ததாக இவருடன் கற்றவர் கூறுவர்). அவருக்கு கொடுக்க முனைந்தேன்...உடனே அவர் உடனே என்னை அவமானபடுத்தி, கொடுக்க வந்துட்டா, இவன் கொடுத்தா நான் போடுவனா? என்று வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்....அதை ஒரு பொது இடத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன் சற்று ஒதுக்குப் புறமான இடமும் கூட மறு நாள் அதைக் காணவில்லை எவரோ எடுத்துக் கொண்டு சென்று இருப்பர்.

2. டாக்டர் மனோஜ்கிருஷ்ணன் மால்கோ மருத்துவரின் வகுப்புத் தோழி என்ற ஒரு வதந்தியும் உண்டு.  ஒரு மன நிலை பிறழ்ந்த பெண் இங்கே சுற்றித்திரிபவர்.அவருக்கு மனோஜ்கிருஷ்ணன் உணவுப் பொட்டலங்கள் கொடுப்ப்தாகவும் செய்தி. நாங்கள் அப்துல் கலாம் இயக்கம் என்ற இயக்கத்தின் வழி சில நல்ல சமூக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இவரை சந்தித்து மாற்ற முனைந்தோம்...ஆனால் நாங்கள் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்களை அவர் பெற்றதோடு சரி...அந்த முயற்சியும் முனை மழுங்கியது.

அவர் ஒரு பலகாரக் கடையில் சென்று நிற்பார். உடனே அந்தப் பெண் இரண்டு வடை எடுத்துக் கொடுப்பார். வாங்கிக் கொண்டு சென்று விடுவதைக் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்

3. சக்தி தியேட்டர் நிறுத்தத்தில் ரத்தினவேலு என்னும் டீக்கடைக்காரரிடம் ஒரு ஆண் அனேகமாக அவர் பிராமண இனத்தாராக இருக்கலாம் வந்து அங்கே டீக்கடையில் ஒரு டீ இரண்டு வடை வாங்கி இலவசமாகத் தின்று விட்டு, நாங்கள் உங்களை ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம் வருகிறீரா என்றதற்கு எடுத்தார் ஒரு ஓட்டம்...

..இது போன்று நிறைய பேர் நமது ஊருக்கு வரக் காரணம் சேலத்துக்கும் மேட்டூருக்கும் ரயில் தொடர்பு ஏறுபட்டதும்.

5. எங்களது ஊரில் ஒரு பெண் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டு திரிவார், ஆனால் சாப்பாடு எல்லாம் வாங்கிச் சாப்பிடுவதில் படு கெட்டி. குளிக்காமல் கொள்ளாமல் ஒரே இடத்தில் நாற்றமெடுக்கும் உடலுடன் ஆனால் அங்கங்கே சென்று கொண்டே இருப்பார். நமது பார்வையில் படுவார்.

6. இப்படிப்பட்ட ஒரு பெண்ணை குளிக்க வைத்து படுபாவிப்பயல்கள் வன்புணர்வு செய்ததாகவும் கேள்வி....அதன் பின் அவரை நகமெல்லாம்பிடுங்கி நாக்கெல்லாம் துண்டித்ததாகவும் பேச்சு அடிபட்டது.

7. லோகநாதன் என்னும் சுடர் ஒளி கண்பார்வையற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் விடுதி நடத்துபவர் ஒரு காலக்கட்டத்தில் எனக்கும் எனது நண்பர் முரளிதரன் என்னும் கெமிகல் கம்பெனி நடத்தியபடி கெமிகல் வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர்க்கும் தொடர்பில் இருந்தவர்.Loganathan வைத்தீஸ்வரா பள்ளியில் நுழை வாயிலில் சிறு பெட்டிக்கடை நடத்தி வந்தவர். அவருக்கும் பார்வைக்குறைபாடு கொஞ்சம் அப்போது இருந்தமையாலும் blind school அவர்களின் தொடர்பில் இருந்தமையாலும்...அது போன்ற பணிகளில் ஈடுபட அடிப்படைப் பணிக‌ளில் ஈடுபடும்போது எனது பங்கு பணியும் அதில் உண்டு. ஆரம்ப காலத்தில் அந்த நிறுவனத்திற்கு நான் ஆலோசகர்...பங்களித்ததும் உண்டு. ஆனால் அதில் முழுதும் என்னால் ஈடுபட முடியாது  என்று ஆரம்பத்திலேயே சொல்லி அவரை ஈடுபட வைத்ததும் என் நினைவில் இப்போதும்..

அந்த விடுதியில் இருக்கும் பார்வை இழந்தவர் ஒருவர் ஒயர் சேர் பின்னி சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு இது என்ன கடை, இது என்ன கடை என்று கேட்டு மதுபானக் கடையைத் தேடிக் குடித்துவருவதையும், ரயிலில் சொல்லி வைத்தாற்போல ஒரு கால் துண்டான நபரும், ஒரு குருடரும் பிச்சை எடுக்க தினமும் மேட்டூரிலிருந்து சேலம் வருவதும், சேலத்தில் இருந்து மேட்டூர் போவதுமாக இருந்து வருவதையும் கண்டதுண்டு....

8. பல ஆண்டுகள் நானும் எனது நட்பும் உறவும் வட்டமும் அவ்வப்போது இணைந்தும் பிரிந்ததுமான அவர்களுடன் நான் தொடர்ந்து பல்லாண்டுகள் கிறிஸ்மஸ் நள்ளிரவில் சுமார் 12 மணியளவில் சாலையோரம் படுத்துறங்கும் அனாதைப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை வழங்கி வந்தேன்.ஒரு முறை 2000 ஆண்டு... எவரும் உடன் வராததால்.தனியாக‌ சென்று போர்வை எல்லாம் கொடுத்து விட்டு திரும்புகையில்தான் கீழே வாகனத்துடன் விழுந்து எனக்கு இடது கை மூட்டு எலும்பு இடம் பெயர்ந்தது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது ஒரு மண்டபப் பணிக்காக ஜல்லிக் கொட்டி அதை சாலை முழுதும் விரவிக் கிடந்ததை கூட்டி குவிக்காததால் அதன் மேல் எனது வண்டி செல்ல... அப்போது மணி இரவு. 2 மணி இருக்கும். அப்போதிருந்து அந்தப் பணியை விட்டு விட்டேன்.

9. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு காலக்கட்டத்தில் பிச்சைக்காரர் மறு வாழ்வு நிதி என்று திரட்டி அவர்களுக்கு விடுதி உணவு வசதி யாவும் செய்து தர முயன்றார். செய்தார். முயற்சி தோற்றது. இப்போதிருக்கும் உழவர் சந்தை, சமத்துவ புரம் அளவு கூட அல்லாமல் அது படு தோல்வி அடைந்தது.

10. பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது அதில் ஒரு மந்தாகினி என்னும் ஒரு கேரக்டர் வரும் ஊமைச்செவிடு...ஆனால் அவள் நல்லவள்...பொன்னியில் செல்வன் என்னும் இராஜைராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனை காவிரியில் மூழ்க இருந்தபோது குழந்தையாக இருந்தபோது காப்பாற்றுவாள்...அவளைக் காற்று மாதிரி யாரும் பிடிக்கவும் முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது எங்கு இருக்கிறாள் எங்கூ செல்கிறாள் என்பதை எல்லாம் எவருமே சொல்லவோ கணிக்கவோ முடியாது என்பார்கள்

11. அது போலத்தான் இவர்கள் யாவரும், காற்றைப் போன்றவர்கள்... இவர்களை...ஒரு இடத்தில் பிடித்து வைக்க முடியாது... சில ஹோம்களில் வன்முறையும், அதில் நம்ப முடியாத கதைகள் போன்ற உண்மைகளும் இருக்கின்றன அதில் எல்லாம் நுழைந்து மீண்டு வர அதற்காகவே நம் வாழ்வு சென்றாலும் போதாது.. ...உங்கள் நண்பர்கள் அல்லது நான் ஆரம்பத்தில் செய்தது போல ஒருவர் நினைவு நாள், ஒருவர் பிறந்த நாள் வருகிறது இவர்கள் அந்த  ஹோம் செல்கிறோம் அதை செய்தோம், இதை செய்தோம் என்பதெல்லாம் அவரவர்க்கு ஆறுதல் தேடிக்கொண்டு இது போன்ற  மனிதர்க்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோம் என்று பெறும் நிறைவுக்காக...

12. உண்மையில் இதன் அடிப்படைக் கோளாறு குடும்பம் என்ற மாபெரும் புகழ்பெற்ற இந்தியக் கட்டமைவு குலைந்து அதன் அடையாளங்களாக ஆங்காங்கே திரியும் இவர்கள்... அதன் உச்சியில் அரசின் ஆளுமை அற்ற அலட்சியம். எனவே நாம் இந்த குடும்ப அமைப்புக்கு சீர்பட ஏதாவது செய்வதும் அல்லது கோணாத கோல் என்னும் அபிராம பட்டர் சொல்லும் நல்லாட்சி புரிய ஏற்பட ஏதாவது செய்வதுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு குறைந்த பட்சம் ஒரு தீர்வு ஏற்பட கொஞ்சம் அருகே அல்லது இந்த பணியை ஒரு செ.மீ. அல்லது மி.மீ முன்னெடுத்துச் செல்வதுமாகும்... அது பல்லாயிரம் கி.மீ தள்ளி இருக்கிறது என்பது வேறு...அதில் ஒரு சிறு பொறி பற்றி காட்டுத் தீயானால் பல்லாயிரம் கி.மீ தொலைவு கூட ஒரு நாளில் எட்டி விட முடியும் என்பதெல்லாம் சிதையா நம்பிக்கைகள்...

13. சில நேரங்களில் இதில் ஈடுபடும் நமக்கும் கூட பெரும் தொல்லைகள் கூட உற்பத்தி ஆவதும் உண்டு...
Image result for mentally disordered persons in roadsides
எனவே இதில் எல்லாம் ஈடுபடுமளவு இப்போது காலச் சூழல் இல்லை. wqe need a team to take of these kinds of difficult works.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


Saturday, November 24, 2018

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

ஏண்டா இப்படி அடிச்சிக்கிட்டே சாகறீங்க: கவிஞர் தணிகை

Related image


குத்திக் கொல்லவாடா இவ்வளவு பெரிய கல்லூரியில் காலடி எடுத்து வைத்தீர்கள்? குத்துப் பட்டு சாகவாடா இவ்வளவு பெரிய கல்லூரிக்கு சென்று சேர்ந்தீர்கள்...

கடந்த வாரத்தில் கோவை மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஒரு முதலாமாண்டு மாணவரை மற்ற 3 மாணவர்கள் போய் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி இன்றைய மாணவ சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டுள்ள என் போன்றோர்க்கு வயிற்றில் அமிலத்தை அள்ளி பூசியது போல் தாக்கியது.

அந்த 3 பேருமே 18 வயது கூட இன்னும் நிறையாத பாலகர்கள்...எனவே அவர்கள் சிறுவர்களுக்கான அரசின் கூர்ம சிறார்பள்ளியில் கொன்டு சென்று வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் செய்தி.

அவன் என்னடா பெரிய இவனா? என்று கேட்டதுதான் காரணமாம்... பெரியவன் என்று நிரூபிக்க இந்த மடையர்களுக்கு கத்தியும் கொலையும் தாம் தோன்றியிருக்கிறது...இது இன்றைய சமுதாயத்தின் அவலத்தின் அடையாளம்

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தாம் தங்க முக்கோணவழியில் ஒரு நாட்டை அதன் வழிப்போக்கை சரிசெய்ய முடியும் என கலாம் 2020 என்றெல்லாம் கனவு கண்டு கண்களை மூடினார். ஒரு நட்டைக் கூட கழட்ட முடியாது...ஒரு மண்ணுக்கும் இங்கு வழியில்லை.

முளைத்து 3 இலை கூட விடவில்லை என்பதற்குள் இதற்கெல்லாம் போதை மருந்துகள், மது, புகை , வன்முறை இப்படி ஏகப்பட்ட ஊறல்கள்...இத்தனைக்கும் ஒரு வகுப்பு சரியாக வரவில்லை என்றாலும் கல்லூரியில் இருந்து தகவல் வீட்டுக்கு அனுப்பப் படும் சூழல்கள் இருக்கின்றன‌
Image result for hindustan college coimbatore
பணம் பணம் ஒன்றே குறிக்கோள் என அரசும், தனியார்களும், எதைபற்றியுமே துளியும் அக்கறையின்றி எதிர் வரும் சமுதாயத்தை அதன் வளர்ச்சியை கணக்கில் கொள்ளாது ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதன் முடிவு அதன் பிரதிபலிப்புகள் யாவுமே..

நானறிந்த கல்லூரியில் ஒரு பெண் ஒரே காலக்கட்டத்தில் இரு மாணவர்களைக் காதலிக்கிறாள் என ஒரு மாணவன் மது அருந்தி விட்டு அவளை அடித்திருக்கிறான் ... கல்லூரி என்னடா ஏதடா என கேள்வி கேட்கப் போனால் அவன் விஷமருந்தி விடுவானாம்...வாழ்வு என்றால் என்ன, இன்னும் காலம் எவ்வளவு, உலகம் என்றால் என்ன, பிரச்ச்னை எல்லாம் எப்படி சமையல் எரிவாயு ஆயிரத்துக்கும் மேல் போய்விட்டதே நாடு நல்ல தலைவரைக் கேட்கிறதே, வாக்களிக்க இன்னும் பணமும், மதுவும், பிரியாணியும் கேட்பவர்கள் இருக்கிறார்களே, மக்கள் நல்ல முறையில் இணையாமல் சாதி,இனம், மொழி, நிறம், மதம் இவை எல்லாம் பிரித்தாளும் சூழலும் சூழ்ச்சியுமாய் இருக்கிறதே , தனியார்மயம், தாராளமயம், உலகமயம், கார்ப்ரேட் சதி எல்லாம் இருக்கிறதே இதைப்பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லையே...இவை எல்லாம் பற்றி அறியாமல் இவர்கள் இந்த இளையவர்கள். போகும் பாதை இந்தியாவில் ஏன் தமிழகத்தில் அந்துவானக்காடாக சென்று மிருகங்களுக்கு பலியாவது போல போய்க் கொண்டிருக்கிறதே... அதற்கு நாங்களும் முடிந்தவரை கவுன்சிலிங் செய்தும் ஏன் இவற்றை எல்லாம் தடுக்க முடியாமல் இவை மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்கின்றன? . பருவக் கோளாறு இளம்பருவக் கோளாறு...அத்துடன் போதையின் தடம்... நாங்களும் அந்தவழியில் தானே வந்து வாழ்ந்து வருகிறோம்....

இன்று ஒரு செய்தி என்னவெனில் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டம் ஆடிய சிறுவர்களுக்குள் சண்டை வர அதை பெற்றோர் கையில் எடுத்து உடன் துப்பாக்கியுடன் குண்டுகள் முழங்க சண்டை 6 உயிர்களைக் குடித்திருக்கிறதாம்.

எல்லாவற்றிலுமே தான் என்னும் அகங்காகரம், ஆணவம். அடுத்தவரைப் பற்றிய சிந்தனை இல்லா வாழ்க்கை , ஒத்துப் போகும் தன்மை குறைந்து வருவதையே காட்டி வருகிறது.

விளைவுகள் உயிர்ப்பலிகள்...கோவை சம்பவத்தில் ஈடுபட்ட 4 குடும்பங்கள் இனி விருத்திக்கு வர முடியுமா?? எல்லாம் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகளை மட்டுமே கொண்டிருக்கும் மைக்ரோ லெவல் குடும்பங்கள்...

தமிழக நீதிமன்றம் விலையில்லா அரிசி கொடுப்பதால் சோம்பேறித்தனமும், வேலை செய்ய வடக்கு மாநிலங்களிலிருந்தும் ஆள் வரவேண்டி இருக்கிறதே என இனி உண்மையிலேயே தேவையான வறுமைக் கோட்டிற்கு பின் தங்கிய குடும்பங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் எனச் சொல்லியுள்ளதாக அறிகிறோம். அது போல எவருக்கு மதுவிற்பனை செய்வது என வரையறை செய்து விடலாம் அல்லது மதுக்கடைகளை முதலில் மூடச் சொல்லலாமே....

இயற்கைப் பேரிடரில் கஜா  போன்ற புயல்களால் உயிர்களுக்கு இன்னல் ஏற்படும் இந்நிலையை சரி செய்யவே அரசுகளால் மக்களால் முடியாத போது மனிதர்களின் இந்த வெறி பிடித்த செயல்களை எல்லாம் எப்படி  தடுக்க முடியும் எனில் இது உடனே ரெடிமேட் உப்மா போல முடியாது...நாட்பட காலத்தைக் கணக்கில் கொண்டு திட்டமிட்டு கல்வித்துறை மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் சார்ந்து சேர்ந்து நல்ல முன்மாதிரிகளை அடையாளம் சொல்லி வளர்த்தெடுக்கும் கடமையை சரியாகச் செய்தாக வேண்டும்...இல்லையேல் அமெரிக்கா போல ஆய்தத்துடன் அலைவார்கள் தேவையற்ற உயிர்கள் பலியாகும்...

அரசியல் கட்சி என்கிறீர்கள், அரசு என்கிறீர்கள், கட்சி என்கிறீர்கள், சாதி என்கிறீர்கள், மதம் என்கிறீர்கள்... எல்லாவற்றையும் வைத்து சேர்ந்து நின்று அனைவரையும் வாழ வைக்கப்பாருங்கள்...சாகடிக்கப் பார்க்காதீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, November 21, 2018

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகை

வரலாறு காணாத சமையல் எரிவாயு விலை ஏற்றம் 982.50 ரூ.: கவிஞர் தணிகைImage result for don't give your even one vote to rulers of india and present tamil nadu

மோடி சர்காரை ரிலையன்ஸ் அம்பானிகளும் இன்ஃபோஸிஸ் நாராயணசாமிகளும், ஆடிட்டர் குருமூர்த்திகளும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்... பிரதமர் மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்ஸை ஒரு சீட் கூட  வரவிடாமல் செய்யுங்கள் என மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன் கேரளாவில் பேருந்தில்  அய்யப்பன் கோவிலுக்கு செல்வதை தரக்குறைவாக நினைக்கிறார்.

இவர்கள் யாவரும் சொல்வதெல்லாம் மோடி சர்கார் ஏழைகளுக்கான சர்கார் அல்ல என்பதையே...

அவரவர் பணத்தையே வங்கியில் போடவைத்து நாள் கணக்கில் இரவு பகல் என்று பாராமல் காத்திருக்க வைத்த அந்த ஒரு நிகழ்வே போதும் இந்த சர்காருக்கு ஒரு வாக்கும் கூட போடக் கூடாதுதான். ஒரு வாக்கும் கூட விழக்கூடாதுதான்...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
இப்போதும் கூட நாட்டின் மிகப்பெரும் வங்கியான ஸ்டேட் பாங்க் மக்கள் தம் பணத்தை எடுக்க ஒரு நாளுக்கு இருபதாயிரம் மட்டுமே என வரையறை செய்து வைத்துள்ளது...எவர் பணத்தை எவர் ஆளுமை செய்கிறார் என்ற காரணத்தைப் பாருங்கள் அதற்கேற்ப செயல்படுங்கள்...

விஜய் மல்லையாவின் பங்களாவை ஏலம் விட்டு கொடுத்த கடனை மீட்க‌ முடியாத இந்த ஸ்டேட் பாங்க், ஏழை மாணவர்கள் படிக்க பெற்ற கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வைத்து வசூலிக்க முயன்றதே இது போன்ற காரணங்களே போதும் அரசும் அதன் அமைப்புகளும் எந்தப் பக்கம் இருக்கிறது எனச் சொல்லி அடையாளம் காட்ட...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மிக வளர்ந்த நாடான பிரான்ஸில் கூட பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையேற்றம் கண்டனமாய் நாடெங்கும் ரோடெங்கு எதிரொலிக்கிறது ஆனால் இங்கு மக்கள் சாதி, கட்சி, அமைப்பு, மதம் ஆகியவற்றால் ஒருங்கிணைய முடியா அளவில் பிரித்தாளப்படுகிறார்கள்...

பிரச்சனையின் அடித்தளம், முதுகுத் தண்டு என்னதான் என உணர் முடியா அளவில் இளைஞர்கள் சினிமா, மீ டூ, மது, காதல் , உணர்ச்சி வசம் என பேதலித்துக் கிடக்கிறார்கள் வாழ்வதாக வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கிக் கொண்டு பெட்ரோலை கடனாக பெற்றுத் தர வேண்டிக்கொண்டிருக்கிறது பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து அரசிடம் கோரிக்கை வைத்து  ஆனால் இங்கு பேருந்து கட்டணம் நினைத்தபடி உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

ஏர் இந்தியாவின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மேட்டுக்குடிகள் பாதிக்கும், பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் ஏழை எளியோர்தானே பாதிக்கப்படுகிறார் எனவே இப்படித்தான் அப்படித்தான் என்றுமே அரசுகள் ...

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் 5 நாளாகியும் சோறு, குடி நீர், மின்சாரம் இல்லாமல் கொடைக்கானல் எல்லாம் தீவாகி விட்டதாக செய்திகள் இருந்தும் அந்த பாராளுமன்றப் பிரதிநிதிகளும், சட்டமன்றப் பிரதிநிதியும் தொகுதி பக்கம் கால் வைக்காமல் சேவை செய்து வருவதாக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மேலும்  இதில் தமிழக முதல்வர் ஜீ பூம்பா என்றவுடன் எல்லாம் மின்கம்பங்களை நட்டுவிட முடியாது என்கிறார் எல்லாமே சினிமாத்தனமாகிவிட்டன...

போர்க்கால அடிப்படையில் புயல் நிவாரணப்பணிகள் நடைபெறவில்லை. உயிர்காக்க அறிவுப்புகள் உரியமுறையில் கிடைத்தவுடன் எதிர்க்கட்சித்தலைவர், மக்கள் நீதி மையத் தலைவர், மறுமலர்ச்சி தி.மு.க தலைவர் மற்றும் அனைவருமே புயல் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டினர் ஆனால் உண்மை நிலவரம் தெரிய வர வெட்கமாகப் போய்விட்டது அப்படிப் பேசியமைக்கு ஏன் எனில் உண்மைச் செய்திகள் தாமதமாகவே வெளிவருகின்றன..ஊடகம் யாவும் கூட சரியான செய்திகளை தரவில்லை...கேரளப் புயலுக்கு கொண்டு வெள்ள நிவாரணத்துக்கும் கொண்டு கொட்டியவர்கள் இப்போது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்...சொற்போர் நடந்து வருகின்றன வேலைகளை செய்வதை விட்டு விட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக...
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
ஒரு வாக்கு கூட இவர்களுக்கு எல்லாம் போடக்கூடாது....

அவ்வளவு பொறுக்க முடியாத விலைவாசி ஏற்றத்தில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்...தேர்தல் பக்கம் வரக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலும் இதைப்பற்றி எல்லாம் எவருக்கும் துளியும் கவலை இல்லை...எனவே...

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட வரக்கூடாது என்று சொல்லும் பிரதமர் வார்த்தையைப் போல சொல்ல வேண்டுமெனில் மோடி சர்கார் மற்றும் ஆளும் தரப்பினர் இவர்கள் எவருக்குமே ஒரு வாக்கு கூட விழக்கூடாது..
Image result for don't give your even one vote to rulers of india and present tamil nadu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.