Saturday, December 1, 2018

2.O 3..O mINIMAL maximal ....waste of cost.எல்லாம் ஜீரோதான்: ..கவிஞர் தணிகை

2.ஓ ,3.ஓ,எல்லாம் ஜீரோதான்: கவிஞர் தணிகை

Image result for shankar


Image result for shankar

பி.கு: பாஹுபலி கிராபிக்ஸ் கதையை ஒட்டி இருந்ததால் பார்க்க முடிந்தது. இதில் எல்லாமே கிராபிக்ஸ் என்றிருப்பதால் சிறுவர்களுக்கே ஏற்றதாகிறதுஇவ்வளவு பொருட் செலவில் எதற்கு இந்தப் படம் என்பதுதான் எனது கேள்வி....சிறு பிள்ளை விளையாட்டு. குழந்தைகளுக்கேற்ற படம். வீடியோகேம் ஆடுகிறார்களே அவர்களுக்கு ஏற்றது மற்றபடி இந்தப் படம் செய்ததற்கு மேலாக பரியேறும் பெருமாள் போல நூறு நல்ல கதைகளைத் தேர்வு செய்து படமாக கொடுத்திருக்கலாம்.

மினிமல் 3. ஓ புறாமேல் வருவது... ஒரே உருவத்தில் பல பிரதிகள்...பட்சிராஜனை பழிவாங்குவதாக சொல்வது...சிட்டி 2.ஓ 3.ஓ எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. நிலாவும், பட்சிராஜன் என்று சொல்லப்படும் சலீம் அலி பறவை இயலாளர் பற்றிய செய்தியும் மட்டுமே படத்தில் வெளிப்படுத்தப்பட்டதில் தரமாக இருப்பவை.

சிட்டுக்குருவி இனம் உண்மையிலேயே எண்ணிக்கை குறைந்துதான் இருக்கிறது. இதற்கு செல்பேசி கோபுரம் தான் காரணம் என்றும் செல்பேசியின் அதிர்வலைகள்தாம் காரணம் என்றும் அறிவியல் பூர்வமாக நிரூப்ணங்கள் இல்லை என்றும் செய்திகள் இருக்கின்றன.ஆனால் கதை என்று பார்க்கும்போது செல்பேசி டவர்கள்...பறவைகள்...பறவையைக் காக்க விரும்பும் பட்சி ராஜன்..மற்றபடி ஆவி, ரோபோ, இப்படி சாதாரண தரமான சிந்தனையற்ற முறைகள் இந்தப் படத்திலும் காணப்படுகிறது.

வெறும் கிராபிக்ஸ் விசூவல் எஃபக்ட்ஸ், ரசிகர் கூட்டம் வைத்துக் கொண்டே மாபெரும் சாதனை என்று வெறும் விளம்பரம் செய்து கொண்டு போட்ட முதலை திரும்ப எடுக்க திண்டாடி வருவதாக செய்திகள்

எந்திரனே அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்று நாமெல்லாம் எழுதி இருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது அதை ஒப்பிட்டாலும் இது படு மோசம்.

கதை என்ற ஒன்று வலுவாக இல்லை... வெறும் காட்சி வெளிகளில் போலிகள் உண்மையிலேயே இது இரசிக்கத் தக்க படமாக அமையவில்லை.
மேலும் இதை ஆங்கிலப் படத்துக்கும் மேலே என்பதும், ஆடு வெட்டுவது, கேக் வெட்டுவது யானை மேல் வருவது, பால் அபிசேகம் செய்வது யாவும் மக்கள் பிரச்சனையி திசை திருப்பவே பெரும்பாலும் உதவும்.

ஸ்டெரிலைட் பிரச்ச்னையில் நீதிமன்றம் கை விரித்து பணக்கார நிறுவனத்துக்கு ஆதரவான நிலை எடுக்கும் காலத்தில் கஜா தாண்டவமாடி இருக்கும் காலக்கட்டத்தில், இதென்னவோ மனிதகுலத்துக்கு மேன்மை செய்ய வந்த ஒரு பாதையைக் காட்டுவது போல வெட்டி பந்தா வெறும் உதார் படாமாக அமைந்திருக்கும் இந்தப் படத்துக்கு ரஜினியின் காலா, கபாலி, லிங்கா போல வெறும் விளம்பரத்தை வைத்தே நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

சசிபெருமாளை மதுவிற்கு எதிராக போராட வைத்த எங்கள் இயக்கத்தின் சார்பாக இந்த செல்பேசி டவர் கோபுரக் கதையை எங்களால் ஏற்க முடியவில்லை. அது நிஜம். இது ஒரு மிகையான அபரிமிதமான செல்பேசிகளின் கற்பனை ஏன் அதீதமான கற்பனை என்றும் கூட சொல்லலாம்,.

சங்கர் இந்த முறையும் தோற்று இருக்கிறார் தமது பெரு முயற்சி எனச் சொல்லப்பட்ட படத்தில்...

இந்தியன் 2 வது இவருக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்...

வட போச்சே, நாலு பேருக்கு நல்லது செய்யலாம், புள்ளினங்காள் இப்படி சில சொற்றொடர்கள் இரசிக்கத் தக்கவாறு இருப்பதையன்றி இந்தப் படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடி இல்லை என்றே சொல்ல வேண்டும்

பார்க்கலாம் பார்க்காமல் விடலாம்...உங்கள் விருப்பம்.
நான் தமிழ் ராக்கர்ஸ் வழியே ஒரு கல்லூரி மாணவர் டவுன் லோட் செய்த படத்தையே பார்த்தேன் இதை 3 டி தியேட்டரில் பிரும்மாண்டமான தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. பணம் விரயம் என்றே நினைக்கிறேன்.

மேலும் பிறர் போட்ட அதே 3 டி கண்ணாடியை நமக்கும் தருவதால், இந்த நோய்தொற்றும் காலத்தில் இது பெரும் ஆரோக்ய சுகாதாரப் பிர்ச்சனையுடன் கலந்திருப்பதால்...எவரும் இது போன்ற தவறை செய்ய வேண்டாம் அது உங்கள் உடல் நலத்துக்கு கேடாக முடியும்.

பிறர் உபயோகித்த கண்ணாடியை நாம் உபயோகிக்கக் கூடாது என்பது சரியான முடிவே...

வசீகரன், ரோபோ, நிலா இப்படி எதைப்பற்றி சொன்னாலுமே சொல்கிற அளவில் இரசித்து குறிப்பிட்ட இடத்தைத் தொட்டுக் காட்டுகிற மாதிரி படத்தில் ஒன்றுமில்லை. சங்கரின் ஜென்டில்மேன், காதலன்,இந்தியன், முதல்வன், அந்நியன் அளவில் எல்லாம் இதை வைத்துப் பார்க்கக் கூடாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

7 comments:

 1. ***இந்தியன் 2 வது இவருக்கு கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.***

  இந்தியன் ஒண்ணே பெரிய குப்பை. ரெண்டு மிகப் பெரிய குப்பையாகத்தான் இருக்கும். ஆனால் உங்களூக்கு அந்தக் குப்பை மட்டும் மணக்கும்.

  ReplyDelete
 2. கமல் ரஜினி காலம் முடிஞ்சுபோச்சுன்னு இந்த ஷங்கருக்கு இன்னுமா தெரியல? பாவம்.

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback on this post.karigan.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete