Sunday, December 9, 2018

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை
Image result for body weight related with sweets


காதல் என்பது இனிப்பு விஷம் என ஒரே மாதிரி நீலக்கலர் யமாஹா வைத்துக் கொண்டிருந்த 3 நண்பர்களுள் ஒருவர் எழுதி வைத்துக் கொண்டிருந்தார். அது அன்று. இன்றும் என்றும் காதல் என்பது எப்போதும் ஒரு இனிப்பான வசியமான விஷயம்தான்  என்பது வேறு அது பற்றி நான் சொல்லப் புகவில்லை. எனது இப்போதைய பகிர்வு உங்களுக்கும் ஒரு நாள் உதவலாம் என்றே...

எனது உறவுப் பெண் ஒன்று விட்ட சகோதரியின் மகள் குழந்தை எடை குறைவாகவே இருக்கும் நாங்கள் அவனுக்கு பேர் சொல்லாமல் ஒன்றரை கிலோ என்றே கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் அழைப்போம். அதுவும் இப்போது சொல்லவில்லை ஏன் எனில் குழந்தைகள் பருவத்தில் மிகவும் மெலிந்து காணப்படும் பெண் குழந்தைகள் திருமணமாகிய பின் பார்த்தால் மிகவும் பருத்து விடுகின்றனர். இதையே முன்னோர்கள் பெற்ற இடத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் புகுந்த இடம் போனபிறகு குண்டாக ஆகிவிடுவதும் பிறந்த இடத்தில் குண்டாக இருக்கும் பெண்கள் புகுந்த இடத்தில் போனதும் ஒல்லியாக ஆகிவிடுவதும் இயல்பாக இருக்கிறது என்கிறார்
Related image
ஆனால் இதை எல்லாம் மீறிய விதிவிலக்குகள் அல்லது இவை எல்லாம் பொருந்தாத  நபர்களும் உண்டு...எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா?

வழக்கம் போல அன்று வேம்படிதாள அரசு மருத்துவமனைக்கு எங்கள் கல்லூரியின் மருத்துவக் குழுவினர் சென்றிந்தோம். அங்கு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் எங்களது பல் மருத்துவக் குழு காலை பத்து மணி முதல் பனிரென்டு வரை முகாம் செய்து மருத்துவ சிகிச்சை செய்வது வழக்கம் இது தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடந்து வருவதுதான் ஓய்வு நேரத்தில் முன்னால் உள்ள புற நோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு புற நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு, உள் நோயாளிகள் எனில் அதற்குண்டான அனுமதிச் சீட்டு, மேலும் மருந்து எடுத்துத் தரும் கம்பவுண்டருக்கு சற்றே உதவும் வண்ணம் அவருக்கு மருத்துவர் பார்த்த பின் கொண்டு வரும் எண்களுக்கான மருந்துப் பொருட்கள் யாவை எனக் கணினியில் அச்சடித்து அவர் கேட்கும் ஊசி இருக்கா எனப் பார்த்துச் சொல்லுதல் இப்படி அங்கே இருக்கும் சித்த மருத்துவ நண்பர் முதல் அனைவரும் அங்கு எனக்கு நல்ல நட்பு. உதவியாளர்கள் செவிலியர் யாவருமே...

யதேச்சையாக எடை போட்டுப் பார்த்தேன் அறுபத்து நாலரை கிலோ என்று அந்தப் பெண் செவிலியர் கூறினார். நம்பவில்லை. நம்பமுடியவில்லை. தாஸ் நீங்களே வந்து பாருங்கள் என்றார். தாஸ் என்பவர் அந்த மருத்துவ மனையின் ஆன் இன் ஆல் அழகு ராஜா...உதவியாளர்... அவரும் அப்படியே சொன்னார் ....மெஷின் ஏதாவது ரிப்பேரா என்றேன்...

ஏன் எனில் மிகவும் கவனமாக ஹெல்த் பேண்ட் எல்லாம் கட்டிக் கொண்டு நடைப்பயிற்சியில் எல்லாம் முழுமையாக ஈடுபட்டு எனது உடல் எடையை 60 கிலோ கிராம் என்றே பராமரித்து வரும் எனக்கு ஒரேயடியாக நாலரை கிலோ அதிகம் என்றவுடன் ஏற்க முடியவில்லை.

எனக்குத் தெரியாமலே எந்த இடைஞ்சலும் தொல்லையும் தராமலே அது அதுவாக இருப்பது போலவே இருந்து கொண்டு எடை கூடியிருந்தது.... உடனே எங்கு என்ன என பரிசீலித்தால் ஒன்றுமே புரியவில்லை எல்லாம் அதனதன் போக்கில் இருப்பதாகவே பட்டது.
Image result for body weight related with sweets
ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் செய்தி மூட்டையை அவிழ்த்தவுடன், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏகப்பட்ட சாக்லேட், டென்மார்க்கிலிருந்து ஆசை ஆசையாய் தங்கை மகள் வாங்கி வந்த வித விதமான வகை வகையான சாக்லேட்கள், தீபாவளி இனிப்புப் பண்டங்கள்,கேக், மற்றும் சரவணாவின் நெய் பிஸ்கட்கள்,திருப்பதி இலட்டுகள்  இப்படி இந்த பருவம் எல்லாம் விளையாடி இருந்தது குறிப்புகளாய் தரப்பட்டது... இத்தனைக்கும் உப்பு, சர்க்கரை, மூலம், குடல்புண், உணவுக் குழல் தழற்சி , உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளதன் அறிகுறிகள் யாவற்றையும் அடக்கி ஆண்டு வரும் உணவுக் கட்டுப்பாடு எல்லாம் அனுசரித்து வருவதும் என்னுடன் இருக்கிறது. இது மலேரியா டைபாய்ட் தோல் வியாதிகள் என யாவற்றையும் வெற்றி கண்ட உடல்.

மேலும் அடிக்கடி மலைப்பிரதேசங்களில் பணி புரிந்தபோது வயிற்றுப் போக்கு அவ்வப்போது நிகழ அதன் பலனாய் ஆர்வோ வாட்டர், வடிகட்டி, காய்ச்சி, செம்புக் குடத்தில் ஊற்றிய நீரை அன்றாடம் பணிக்குச் செல்லும்போது எடுத்துச் செல்வது போன்றவையும், வீட்டில் கருஞ்சீரகம் வெந்தயம், மாலையில் நடைப்பயிற்சியில் சிறிய அளவு 10 எண்ணிக்கை ஆவர மொட்டுகள், சில வில்வ இலைகள் இப்படி எல்லாம் உட் கொண்டு எந்த பிணியும் தற்போதைக்கு அண்டாமல் விரட்டி வருவதும் உண்டு வருவதை மிகச் சரியாக கடைபிடிப்பதும் உண்டு.

அன்று முதல் இனிப்பு சாப்பிடுவதில்லை வயோதிகம், உடல் தேய்மான அறிகுறி ஆகியவற்றை அலட்சியம் செய்து சிறு பிள்ளைகள் போல, குழந்தைகள் போல விருப்பப் படி இனிப்புகளை  உட்கொண்டதன் விளைவு...இந்த சத்தமில்லாத விஷ(ய)ம் நடந்திருக்கிறது.
Image result for rajaji and gandhi
இராஜாஜியும் காந்தியும் தன்னிடம் வந்த பெற்றவளுக்கு இந்தப் பிள்ளை அதிகம் இனிப்புப் பண்டம் சாப்பிடுகிறான் இவனுக்கு அறிவுரை சொல்லுங்கள் எனக் கேட்டு நீங்கள் சொன்னால் கேட்பான் என்றதற்கு சில வாரங்கள் கழிட்து வாருங்கள் எனச் சொல்லி விட்டு அந்த சில வாரங்கள் கழிந்து வந்த தாயுடன் மகனுக்கு அது தவிர்க்கப்பட வேண்டியதுதான் என்று அறிவுரை சொன்னார்கள். ஏன் அதை அந்த சில வாரங்களுக்கும் முன்பே சொல்லி இருக்கலாமே என்றதற்கு அது முடியாது ஏன் எனில் அப்போது நானே அப்படி சாப்பிட்டு வந்ததால் அதை சொல்ல முடியாமல் போயிற்று. அதன்பிறகு அதை நான் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால் இப்போது சொல்லும் தகுதி வந்து விட்டது எனவே இப்போதுதான் சொல்ல முடிந்திருக்கிறது என்றார்களாம்.

இன்று மூதறிஞர் இராஜாஜி பிறந்த நாளாம்.

நான் இந்த விஷயம் தெரிய வந்தவுடன் அதாவது பிறந்த நாள்  பற்றி அல்ல...இனிப்பு என்பது உடல் எடையைக் கூட்டி கொழுப்புச் சத்தை வேண்டாத கொழுப்புச் சத்தை உடலில் ஏற்றும் என்று தெரிந்த சில நாட்களுக்கும் முன்பிருந்தே அதை துறந்து விடத் தீர்மானித்து விட்டேன்.
இனி நானும் மற்றவர்களுக்குச் சொல்லலாம் தானே...


உடனே தங்கை சொல்கிறார்  அவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை. அதெல்லாம் விட வேண்டியதில்லை. பாதாம் பருப்பு வாங்கி கொதி நீரில் போட்டு வேக வைத்து அதன் தோலை நீக்கி விட்டு சில பருப்புகள் சாப்பிட்டால் போதும் உடல் கொழுப்பு தானாக குறைந்து தேவையான அளவுக்கு வந்து விடும். இனிப்பு சாப்பிடுவதை எல்லாம் அறவே விட வேண்டாம் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிறார். ஆனால் எதற்கு அந்த விஷப்பரிட்சை எல்லாம். மாதாந்திர மளிகை செலவில் வீட்டம்மா பாதாம் பருப்பு ஹார்லிக்ஸ் கறுப்பு கொட்டை திராட்சை போன்றவை  வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இடம் கொடுக்க வில்லை என்றும் சொல்லி விட்டார்.  எனவே விட்டு விடுதல் நல்லது. இதற்கும் மேல் ஆசைப்படாமல். துறந்து விடுவது நல்லது. துறவு நிலை நல்லது. திருவண்ணாமலை மூக்குப் பொடி சித்தர் நிறைவடைந்து விட்டாராம். நீர் உணவு எடுத்துக் கொள்ளாமலே...வயோதிகத்தினால். கடலூரின் கடற்கரைச் சென்று கடலை ஏன் சத்தமிடுகிறாய் அமைதியாய் இரு என்றாராம்...அதன் பின் புயல் வந்ததாம்...மூக்குப் பொடியை மட்டும் ஏன் இவர் விடாமல் இருந்தார் எனத் தெரியவில்லை...எல்லாம் செய்திகள் தான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment