நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை
இரண்டு காகங்கள் ஒன்றையொன்று புணர்வது கண்ணில் பட்டால் குறைந்த நாட்களுக்குள்ளாகவே நெருங்கிய உறவினர் இறந்து போவார்.
முதன் முதலில் இதை ஒரு கிராமத்திலிருந்து குடி பெயர்ந்த ஒரு குண்டுப் பெண் மூலம் கேள்விப்பட்டேன். அப்படிப் பட்ட காட்சி ஒன்றைக் கண்ட பிறகு அவரது கணவர் இறந்திருந்தார். அந்த இறப்புக்கும் பின் தாம் அந்தக் காட்சி பற்றி எல்லாம் அந்தப் பெண் விளக்கிக் கூறி இருந்தாள்.
இப்போது இந்த புராணம் எதற்கு என்கிறீர்களா?
வழக்கம் போல் 4 மணிக்கு நாங்கள் எழுந்து அன்றைய கல்லூரி வேலை நாளுக்காக புறப்பட்ட படி இருந்தோம். துணைவி எனக்குத் தேவையான உணவு தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.
வேலையை முடித்து விட்டு நான் கல்லூரிக்கு புறப்படுவதற்குள் அதாவது விடிந்தும் விடியாத பொழுது சுமார் காலை 6 மணி இருக்கலாம். அவர் கடைக்கு ஏதாவது வாங்க சென்று விட்டு வீடு வருவார்.
கடைக்கு போய் வந்த போது,ஏங்க , இன்னைக்கு ஒரு காகமும் இன்னொரு காகமும் அணைவது கண்ணில் பட்டது என்றார். சரியாகப் பார்க்க வில்லை என்று சமாளித்தார்
எப்படியோ உன் கண்ணில் பட்டு விட்டதுதானே கொஞ்ச நாளில் தெரியும் பார் என்றேன்.
நேற்று இரவு 1.45க்கு உறக்கம் நீங்க சிறு நீர் கழித்து விட்டு மறுபடியும் 4 மணி வரை நேரம் இருப்பதால் மறுபடியும் உறங்க முயற்சித்தேன் உறக்கமே பிடிக்க வில்லை. ஒரு நொடி நேரம் கூட உறங்கவில்லை. அப்படியே 4 மணிக்கு அலாரம் அடிக்க எனது நாளை ஆரம்பித்தேன்.
துணைவியும் அவர் பணிகளில் இருக்க...சுமார் 5 மணிக்கும் மேல் ஒரு தொலைபேசி செல் சிணுங்க...
இந்த நேரத்தில் யாராக இருக்கும் எனத் தொடர்பு கொண்டால்: துணைவியாரின் தாய் மாமா ஒருவர் அதாவது 62 வயது அவரது தாயின் சித்தப்பா மகன்...ஏஞ்சியோ ப்ளாஸ்ட் செய்தவர் மாரடைப்பால் காலமான செய்தி.
இது போலவே தென்னை மட்டை விழுவது, பனம்பழம் விழுவது வீட்டுள் பன்றி புகுவது போன்ற பல சம்பவங்களை நான் கவனித்திருக்கிறேன். ஏன் வீட்டுள் பாம்பு புகுந்தால் வீட்டில் கலகம் நடப்பதையும் பார்த்திருக்கிறேன். அதேபோல திரைச்சீலை பற்றி எரிவது, எண்ணெய் விளக்கை நம் கையே தட்டி விடுவது, எது எடுத்தாலும் தவறுவது, அடிக்கடி வீட்டில் எரியும் மின் விளக்கு ப்யூஸ் போவது இப்படி எல்லாம் நிறைய இயற்கை தொடர்பலைகளைக் கண்டு அவற்றை பொருளுணர்ந்து நடக்கும் சம்பவங்கள், நடைபெறும் சம்பவங்கள், நடைபெறப் போகும் சம்பவங்கள் ஆகியவற்றை தெரிந்திருக்கிறேன்.
பூனை வலம், இடம் போதல், பல்லி விழுதல் யாவற்றிலுமே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மொழி இருக்கிறது
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment