Thursday, January 16, 2020

இந்த நாட்டின் தலைவனாக :கவிஞர் தணிகை

இந்த நாட்டின் தலைவனாக வருவார் இதை எல்லாம் செய்ய வேண்டும்.


1. மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்படவேண்டும்
   அனைத்து மது ஆலைகளும் மூடப்பட வேண்டும்
2. அனைத்து புகைக்கும் சிகரெட்,பீடி தயாரிப்பு ஆலைகள் மூடப்பட வேண்டும்
போதையூட்டும் கஞ்சா, அபின், போன்ற எல்லா போதைப் பொருட்களும் முற்றிலும்
தடை செய்யப்படவேண்டும்
3. பொது இடங்களில் மட்டுமல்ல புகை என்பதே நாட்டில் தடை செய்யப்பட வேண்டும்
4. சினிமாத் துறை 5 வருடம் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டும்
5. தொலைக்காட்சி, ஊடகங்கள் (பத்திரிகை, வானொலி) யாவும் அரசின் முழுக் கட்டுப்பாடில் இருக்க வேண்டும்
6. மண், நீர் யாவும் அரசுடமை அல்லது பொதுவாக்கப்பட வேண்டும்
7. தொழில், கல்வி, மருத்துவம் யாவும் தனியார் உடமை அகற்றப்பட்டு அரசுடமையாக்கப்படும்
8. நதிகள் இணைக்கப்படும்
9. விவசாய மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் மேம்படுத்தட வேண்டும்
10.தேர்தல் முறைகள் மாற்றம் செய்யப்பட்டு ஒரேதேர்தல் முறை வழிகாட்டப்படும். கட்சிகள் தனியே செலவு செய்தல் கூடாது.
11. நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் இரண்டாண்டு இராணுவப் பயிற்சி அல்லது கிராமியப் பயிற்சி தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.
12. சட்டம் நீதி நிர்வாகம் யாவும் மக்களை அலைக்கழிக்காமல் நேர்மையான நியாயமான குறுகிய காலத்துள் விசாரணை மற்றும் தீர்வுகள் தரப்படல்வேண்டும்
13. வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள், போன்றோர்  அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க முடியும்.
14. தனியார் முதலாளித்துவம் இருக்கக் கூடாது.
15. வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் விவசாய குறு சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடனுதவி, பெரு முதலாளிகளுக்கு கடனில்லை என்றும் அவர்கள் கட்ட வேண்டிய முதலுக்கு அவர்களாக ஈடு செய்ய முடியாத பட்சத்தில் அவர்களின் உடமை அனைத்தும் மட்டுமல்ல பொதுவாகவே அனைத்து தனியார் சொத்துகளும் அரசுடைமையின் கீழ் கொண்டு வரப்படும்.
16. இலஞ்சம் ஊழல் நிரூபிக்கப்பட்டால் உடனடியான பணி நீக்கம், அவர்கள் குடும்பமும் தலைமுறையும் அரசுப் பணிக்கே வர முடியாதபடியும் கடுமையான தண்டனையும்
17. இணையம் அரசின் கட்டுப் பாட்டில் மட்டுமே இருக்கும்
18. எரிபொருள்,இரும்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியப்பொருட்கள்,போன்ற எந்தவித கனரகத் தொழில்களும் தனியார் இருக்கவே கூடாது
19. பள்ளிகள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் அனைத்துமே அரசு மட்டுமே நடத்தும்.
20. ஒரு குடும்பத்துக்கு ஒரு கார் மட்டுமே இருக்க வேண்டும்
21. ரயில்வே, போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அனைத்துமே அரசு மட்டுமே நடத்த வேண்டும்
22. ஒரு வழக்கு முடிய 3 மாதத்துக்குள் மட்டுமே கால அளவு இருக்க வேண்டும்.
23. வன்புணர்வு, போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையுடனான மனமாற்ற ஆலோசனையுடன் பாலியல் கல்வி வழங்கப்படும்
24. உண்மையான சேவையாளர்க்கு மட்டுமே ஊராட்சி, நகராட்சி பதவிகள் வழங்கப்படும்
25. எம்.எல்.ஏ,எம்.பி மந்திரிகளுக்கு வேறு எந்த தொழிலும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு ஊதியம் இருக்காது. பராமரிப்பு செலவு மட்டுமே உரிய தேவையான அளவில் வழங்கப்படும்.
26. கூட்டுறவு பண்ணை விவசாய முறைகளும் அரசுப் பண்ணைகளும் ஏற்படுத்தப் பட வேண்டும்.
27. இயற்கை சைவ உணவு வகைகள் மக்களுக்கு ஆலோசனை மூலம் ஏற்றுக் கொள்ள அறிவுறுத்தப் படும்.

இப்படி நாட்டை மக்களை நலமாக்கும் இராமராஜ்ஜியக் கனவுகளும், கலாம் 2020 கனவுகளும் கம்யூனிசக் கனவுகளும் நிறைவேற்றப் படும் அரசான நல்லரசை வழங்க வேண்டும்

சுமார் 10 ஆண்டுக்கும் மேல் கிராமிய முன்னேற்றத்துக்கு பாடுபட்டவன் என்ற முறையில் எனக்கு அந்த தகுதி இருக்கிறது என நினைத்து அப்படி நான் ஒர் தலைவன் ஆனால் இதை எல்லாம் செய்வேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment