தர்பாரும் ஹெலிகாப்டர் பூக்களும்: கவிஞர் தணிகை
அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக களம் இறங்க இருப்பதாக செய்திகள் அடிபடும் நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படம் நாளை 09.01.2020 வியாழனில் வெளி வர இருக்கும் நிலையில் சேலத்தில் உள்ள 5 தியேட்டர் அரங்கில் உள்ள போஸ்டர் விளம்பரத் தட்டிகள் மேல் அவரின் இரசிகர்கள் ஹெலிகாப்டர் கொண்டு பூத் தூவ மாவட்ட நிர்வாகத்தை அனுமதி கேட்க அதற்காக பெங்கலூரிலிருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தி இருப்பதாக செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
அதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு அது இடையூறாக இருக்கும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கொடுத்த மனுவின் பேரிலும் கள ஆய்வினை முடித்து அனுமதிக்க முடியாது என தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய நிலையில் உள்ளது.
முதல்வர் வேட்பாளாராக களம் இறங்க இருக்கும் ரஜினிகாந்த் முதலில் தமது இரசிகப் பெருமக்களுக்கு நல் ஆலோசனை வழங்கி இது போல் தம் போஸ்டருக்கு பால் ஊற்றுவது , பூ போடுவது, பிரம்மாண்டம் என்ற பேரில் ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவல் போன்ற முட்டாள்தனமான செயல்களில் இருந்து விடுபட கற்றுத் தர வேண்டும். பயிற்றுவிக்க வேண்டும் அறிவுறுத்த வேண்டும்.
மக்கள் பணியை எப்படி கையில் எடுத்து அவர்களின் முக்கிய பிரச்சனைகளான கல்வி மருத்துவம், வேலைவாய்ப்பு, குடி நீர், விலைவாசி போன்ற முக்கிய அடிப்படைப் பிரச்சனைகளுடன் வாழ்வாதாரமான உணவு, உடை உறையுள் போன்ற பிரதானமான தேவைகள், போதை ஒழிப்பு, புகை மறுத்தல், சுற்றுச் சூழல் மேம்பாடு, மரம் நடுதல், போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் இவர்களை ஈடுபட ஈடுபடுத்த நல்வழிப்படுத்த வேண்டும். சாதி மத பேதமற்ற ஒரு நல்லாட்சியை தர முயலட்டும் வாழ்த்துவோம்.
அதை விட்டு இந்த போஸ்டருக்கு பூ தூவ ஹெலிகாப்டர் வர அனுமதி மறுப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர் என்ற செய்தி வெளியீடுகள் யாவும் அவர்களது தரத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறதே அதிலிருந்து எல்லாம் வெளிவந்து அகரம் பவுண்டேசன் போல நல்லதை செயல்படுத்த முயலட்டும்...
ப்ளக்ஸ் கட் அவுட் வைக்கும் முறைகளை நீதிமன்றங்கள் தமிழக அரசுக்கு தடை செய்ய வேண்டும் என உத்தரவு இருந்தும் ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது, பொது இடங்களில் புகை பிடிப்பது போன்று இந்த சட்ட வடிவையும் நீதி முறையையும் சட்டை செய்யாமல் இருப்பது வருத்தத்துக்குரியது.
முதலில் இது போன்ற இரசிகர்கள் தங்கள் பெற்றோரை, குடும்பத்தை நல்ல நிலையில் காப்பாற்ற கற்றுக் கொண்டு இது போன்ற செயல்பாட்டுக்கு எல்லாம் வந்தால் தேவலாம்.
ஒரு வேளை வெறும் விளம்பரத்துக்கு இது போன்ற சாகசங்களை செய்து வேடிக்கை காட்டி செய்தியில் இடம் பெற வேண்டுமென்றே ஊடகங்களை பயன்படுத்தி படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் தேடும் யுக்திகளில் இதுவும் ஒன்றோ?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

முதலில் ஏட்டு படிப்பு படித்த முட்டாள்களுக்கு, திரையில் கையை காலை அசைக்கும் போராளிகளுக்கும் உண்மையான போராளிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்பிக்க வேண்டும். பாமரர்கள் இப்படி முட்டாள்தனமாக நடிகர்கள் பின்னால் திரிவதற்கு இந்த படித்த முட்டாள்கள் தான் முக்கிய காரணம். எல்லா ஊடகங்களிலும் எல்லா விஷயத்திற்கும் நடிகர்களின் கருத்து தான் ஏதோ முக்கிய கருத்து என்பது போல அவர்களை பெரும் அறிஞர்கள் போல பில்ட்அப் கொடுப்பது, ஏதோ மன்னர் காலத்தில் பராக் பராக் சொல்வது போல பட்டங்கள் வைத்து சதா அவர்கள் புகழ்(?) பாடுவது, தொலைக் காட்சிகளில் ஒரு நடிகர் அரசியலுக்கு வராவிட்டால் தமிழ்நாடே மூழ்கிவிடும் என்ற ரேஞ்சில் பல மணி நேரம் அறிஞர்கள்(?) விவாதம் நடத்துவது - நல்லவா இருக்கிறது? இந்த படித்த முட்டாள்கள் செய்யும் களேபரத்தில் பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் மானம் போகிறது.
ReplyDeleteஎரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும். முதலில் இந்த ஊடகங்கள் நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்க்க வேண்டும். படித்த மக்கள் தன் நாட்டுக்கு தலைவனை திரையில் தேடுவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் நடிகர்கள் திரையில் சாகசம் காண்பித்து தமிழ்நாட்டை ஆள நினைக்க மாட்டார்கள்.
மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் கருத்து எனக்கு முற்றிலும் உடன்படுவது.
Deleteஎனக்கு தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாது. எனவே சில வேளை ஆங்கிலத்திலும் பதிலை இடுவது எனது குறைபாடு. உங்கள் கருத்தை என்னுடன் சேர்ந்து படித்த செந்தில் குமார் என்னும் எனது நண்பர் ஒருவர் அவர் தமிழில் சொல்லி இருக்கிறார் நீங்களும் அப்படியே எழுதி பதில் தாருங்களேன் என்றார் எனது முதல் பதிலை உங்களுக்கு இடும்போதே...அப்போது அலுவலகத்தில் அவசரம்...இப்போது போதிய கால அவகாசம் இருப்பதால் அந்த குறையை நிவர்த்தி செய்து தமிழில் பதில் தந்திருக்கிறேன். நன்றி வணக்கம்.