Monday, January 6, 2020

அமைதியற்றுப் போனது இந்தியா? இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? : கவிஞர் தணிகை

அமைதியற்றுப் போனது இந்தியா?
இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? : கவிஞர் தணிகை

Image result for citizenship Act  struggles in india"

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறும் மக்களுக்காக இந்திய குடியுரிமைச் சட்டம் என்று கொண்டு வந்திருந்தால் இத்தனை போராட்டங்களும், கூச்சல்களும், குழப்பங்களும், நாடு இரண்டாக வேறுபட்டு ஒரு கட்சியை பிற கட்சிகள் குறை சொல்லி போராடுதல்களும், கல்லூரி மாணவரிடையே ஏற்படும் அடி தடி தகராறுகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

ஜக்கி வாசுதேவ் போன்ற  சாமி யார்கள் எல்லாம் அரசியல் பேச வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. ஹா ஹா ஹா என தோள்களை குலுக்கியபடி வெளிநாட்டினர் பற்றியும் நாய்களுக்கே அடையாளம் தேவைப்படும்போது இந்தியக் குடிமகன்களுக்கும் தேவைதானே எனப் பேசும் இது போன்ற நபர்கள் கொடுத்திருக்கும் அடையாள அட்டைகளை ஏன் ஒழுங்காக பிழையின்றி இந்த அரசால் தரமுடியவில்லை அவற்றைப் பற்றி பேசாமல் ஆறு போகும் போக்கில் மடை மாற்றமின்றி நாடு போகும் போக்கில் தனக்கு என ஏதும் வந்து விடக்கூடாது என அரசோடு சேர்ந்து ஒத்துப் போடுகிறார்கள்.

ஒரு பக்கம் இந்தியாவில் இருப்பார்க்கு எந்த வித இடைஞ்சலும் இருக்காது என ஆளும் கட்சியினர் இதைப்பற்றி விளக்கம் சொல்ல ஊர்வலம் வீடு நோக்கிய பயணம் செய்து வருவதும்

எதிர் அணியினர் அவர்கள் பக்கத்துக்கு ஊர்வலம் , அணி வகுப்பு, எதிர் மறியல் செய்து வருவதும், நாடே கொந்தளித்தபடி இருக்கிறது.
இப்போது இருக்கவே இருக்கிறது என ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் இரு தரப்பு மோதல்கள் இரு தரப்பு காவல் துறை புகார்கள் இருவேறுபட்ட கோணங்களில்...

இதில் வேறு நாடு தழுவிய அளவில் ஒரே மூவ்மென்ட் அட்டையாம்...ஒரே நாடு ஒரே அட்டை என...

எங்க தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் இந்திக்கார முகங்கள். திட்டமிட்ட ஊடுருவல்களா...அடுத்து வரும் தேர்தல்களில் இவர்களின் பங்களிப்புகள் தேர்தலில் ஒரு முக்கியத்துவ முடிவுகளுக்கும் காரணமாகாலாம்...

எப்படியோ இப்படி எல்லாம் செய்தபடி

விலைவாசி ஏற்றம்,  கல்வி மருத்துவம், நதி நீர் இணைப்பு, ஜி.எஸ்.டி, டிமானிட்டிசேசன்  வேலைவாய்ப்பின்மை போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சனைகளிலிருந்து மக்கள் பிரச்சனைகளிலிருந்து அனைவர் மனங்களையும் திசை திருப்பலாம் இது போன்ற அடையாளம் அட்டை என்ற பேர் சொலியே../

இத்தனைக்கும்  நடுவில் ஏப்ரல் முதல் இந்த சோதனை முயற்சிகள் குடியுரிமை மசோதா, கணக்கெடுப்பு, பதிவுகள், ஏடுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடுகள்...மத சாதி, இன்னபிற பிரிவினகளோடு நாட்டின் பதிவுகளில் இடம் பெறும் பணி இருக்குமாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதன் முன் நிகழ்வே இந்த மசோதா தாக்கல் பதிவு ஏற்பாடுகள் என்ற கருத்துகள் உள்ளன.
Image result for citizenship Act  struggles in india"
இதை எல்லாம் வரும் காலங்களில் எதிர்பார்க்கலா, நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிரூபிக்க மீண்டும் இரவு பகலாக தெருவுக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்படலாம்...

அப்படி இல்லாமல் வீடு நோக்கி வந்து அரசு அலுவலர்கள் பிழையின்றி இவற்றை எல்லாம் செய்து அடையாளப்படுத்தி பதிவு செய்து கொண்டால் பாராட்டலாம்தாம்.

ஒரு சார்புடைய அரசாட்சியாக இல்லாமல் பொது மக்கள் யாவருக்கும் நடுநிலை  தவறாத சிறந்த ஆட்சியை தந்தால் இந்தியா இன்னும் உலகில் பேர் சொல்லும் மக்களாட்சியை மலரவைத்த நாடாக பெருமை பெறும்.

நாடு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்...பழமொழி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. மிக சிறப்பான, சரியான புரிதல்.

    ReplyDelete
  2. thanks for your comment on this post. please keep contact

    ReplyDelete