குடி மிருகமே குடி உன் மனைவி
மக்களைக் கிழித்தெறிந்து வழிந்தோடிடும்
இரத்தத்தை நக்கி நக்கிக் குடி மிருகமே!
மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற தேசப்பிதாவின் புதல்வரா? பாரதப் பதரா நீ!
காந்தியின் சிலைக்கு மலக்குளியல் நடத்து பெரியார் சிலைக்கு செருப்பணிவித்து சிறுநீருடன் தாயின் தலையில் கல்லைத் தூக்கிப் போடு தந்தையின் தலையை அரிவாளால் சீவு மகனே ஐந்து வயதுக்கும் கீழான சிறுமியையும் வன்புணர்!
கள்ளுண்ணாமை சொன்ன தமிழ்த்தலைவன் நாணியழ சனநாயகத்துக்காக விஷமருந்திய சாக்ரடீஸ் செத்துவீழ சனநாயகப் படுகொலையாய் தேர்தல் ஆட்சி அரசுடன் யாவும் வெக்கித்து மக்கி மனிதம் மறந்தாய்! மதுவிலக்க உலக மதுவெலாம் குடித்து முடிப்பேனென்ற கண்ணதாசனை நுரைக்கோப்பை உயிர்குடித்து முடித்தது நாய் உடன் இலாத தேவதாஸ்கள் சாலையெங்கும்
மெய் மறந்திருக்கிறார்கள் நுரை வாயில் தள்ள சாலையில் வாயூதி ஆல்கஹால் சோதனையில் காவலர் தமிழகமே சாலைவிபத்தில் நாட்டின் முதன்மையென தமிழக இலட்சியக் குடும்பத்தின் சிற்பிகளும் சசிபெருமாள்களும் சின்னப்பையனும் நடத்திய வேள்விகள் வேணிலின் கானலா?
விஷம் நுரைக்கும் மதுக்கோப்பை ஏந்திய பெண்களும் ஆண்களும் உயிர்குடிக்கும் கோப்பையாகவே ஆனார்கள்....
மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை 11/125 புதுசாம்பள்ளி மேட்டூர் அணை 636 403 செல்பேசி:8015584566
படைப்பு இணைய தளமும் தமிழகக் காவல் துறையும் இணைந்து நடத்திய நுரைக்கும் விஷக் கோப்பைகள் என்ற மதுவிலக்குப் போட்டியில் கலந்து கொண்டேன்.
கவிதை மட்டும் படைப்பு இணைய தளத்துக்காக படங்களை எனது வலைப்பூவுக்காக சேர்த்துள்ளேன்.

No comments:
Post a Comment