Saturday, January 18, 2020

சமதர்மச் சாதனையாளர் விருது: கவிஞர் தணிகை

சமதர்மச் சாதனையாளர் விருது: கவிஞர் தணிகை

Image may contain: 2 people, people standing

17.01.2020 வெள்ளிக் கிழமை திண்டுக்கல் வி.ஜி.எஸ் மஹால், கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூடத்துக்கு வெளியே கூட மக்கள் கூட்டம்.(வெள்ளம் என்ற மிகையான வார்த்தை எல்லாம் சொல்ல வில்லை அறிக்கை கொடுக்கும்போது உண்மை மட்டுமே இருக்க வேண்டும் என்பதும் எப்போதும் உண்மை ஒளிர வேண்டும் என்பதும் எனது பேரவா)

சென்னை  தமிழக அரசின் செயலகத்தில் பணி புரியும் சமதர்மப் பாண்டியன் என்னும் ஆர்வலர் இந்த நிகழ்வு வடிவமைய காரணகர்த்தா.

இவர் தந்தை சமதர்மம் காமராசர் அவையில் தூய்மைக்குப் பேர் பெற்ற அமைச்சராக இருந்த ஏழ்மையில் இருந்தும் மந்திரியாக இருந்த கக்கன் அவர்களை எதிர்த்து சட்டசபையில் தேர்தலில் நின்று தோற்றுப் போய் புகழ் பெற்றவர்
Image may contain: 2 people, including குகன், people standing
திண்டுக்கல் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல் கல். எம்.ஜி.ஆர் தனது முதல் தேர்தல் பயணத்தை துவக்கிய இடம் அங்கு நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் மாயத்தேவர் என்னும் பாராளுமன்ற உறுப்பினரை அ.தி.மு.க வழியாக இரண்டு இலட்ச வாக்குக்கு அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அனுப்பிய ஒரு அருமையான தொகுதி. அதிலிருந்துதான் அ.தி.மு.க அதன் பின்.அ.இ.அ.தி.மு.க தனது வெற்றிப் பயணத்தை மாநில அளவில் பெற்றதும் உற்றதும் நாடறியும் இன்னும் அதன் வீச்சு தொடர் இருந்தபடி தான் இருக்கிறது.
Image may contain: 2 people, people standing
நான் காந்திகிராம கிராமியப் பல்கலையில் 1984 வாக்கில் பயிற்சி எடுக்கும் போது அங்கு விலாஸ் இசை வாத்தியங்களுக்கு கொடும் கோட்ஸே அங்குத் தோன்றினான் திடும் என்றே சுட்டான் அண்ணல் காந்தியை என்ற பாடலை அவர்கள் இசைக்கேற்ப பாடி இசைத்த இடம்...
No photo description available.
அது மட்டுமல்ல அங்கு நடந்த அப்போதைய ஜேசீஸ் (ஜீனியர் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ்) நிகழ்வின் போது கடைசி நேரத்தில் இளம் புயலாக பேராசிரியர் ரங்கராஜன் அவர்களின் காலம் கருதியமையையும் கருத்தில் கொள்ளாது தடை உடைத்து  உள் நுழைந்து அப்போதே எழுதி இருந்த தலைப்பிற்கேற்ற ஃபெயித் இன் காட் என்ற தலைப்பில்
 புறம் கட உள் பார்க்க புறம் கட கடவுள் பார்க்க‌
என்ற கவிதையை எழுதிய இடம்
அடுத்து சொல்ல வேண்டுமெனில்
விடியல் குழு வைத்து இன் செயல்கள் நடத்தி வரும் என்னுடன் 43 ஆண்டில் அடி எடுத்து என்னுடன் தொடர்ந்து வரும் நண்பர் விடியல் குகன் எனை அழைத்து ஒரு முறை: வாழ்வியல் வழிகாட்டி" என்ற பட்டம் கொடுத்த இடம்.

ஆக இது போன்ற இடத்தில் மறுபடியும் என்னை
சமதர்ம சாதனையாளர் விருது
எனத் தந்து கௌரவிக்க விரும்புகிறோம் என அழைப்பு.
உண்மையிலேயே அதற்கு எனக்குத் தகுதி உண்டு... எப்படி எனில்:
நெடுங்காலமாக  என்னிடம் பைபிள், குரான், கீதை ஆகியவை எண்ணத்திலும் சொல்லிலும், ஏட்டிலும், செயல்பாட்டிலும் உண்டு. அந்த நூல்கள் எனது ஆய்விலும் உண்டு.பல முறை படித்து அதன் பயன்பாடுகளை அனுபவித்ததும் உண்டு. அது மட்டுமல்ல புத்தம், ஜைனம், மதமற்ற கோட்பாடுகள் யாவும் என்னிடம் உண்டு.

எனக்குப் பிடித்தமான மனிதர்கள் என நான் திட்டமிட்டு அமைக்காமலேயே : காந்தி, தெரஸா, கலாம் என்ற மூன்று பேருமே மதம்‍ பிடிக்காத தலைவர்கள் அவர்கள் இயல்பிலேயே பிறப்பால் இந்து, கிறித்தவர், முகமதியர் என்ற கோட்பாடு கொண்டு வாழ்ந்தவர்கள்
Image may contain: 1 person, sitting and table
நான் திட்டமிடாமலேயே இந்தப் பொங்கல் திருநாளில் கூட எங்கள் வீட்டுக்கு பொங்கல் கொண்டாட ஒரு கேரளாவை தாய் இடமாகக் கொண்ட கிறித்தவப் பெருந்தகை    Orthodontics  துறைத் தலைவர் முன்னால் கல்லூரி முதல்வராக இருந்தவர். மருத்துவப் பேராசிரியர்  .   சுநீல் சன்னி என்பார் வந்திருந்து என்னுடன் அன்றைய பொழுதை களித்து மகிழ்ந்தார்.

இவற்றிற்கு எல்லாம் மேலாக சாதி, மத, மொழி, இன வேறுபாடு எல்லாம் மறந்து இந்தியா மாநிலங்களில் பெரும்பான்மையான பின் தங்கிய மாநிலங்களில் சுற்றி அலைந்து திரிந்து அதன் பின் சுமார் 10 ஆண்டுக்கும் மேல் மலைவாழ் மக்களுக்கு திட்ட அலுவலராக இருந்து நூற்றுக் கணக்கான குக்கிராமங்களில் எவரும் எளிதில் சென்றடையாத சென்று அடைய முடியாத பகுதி மக்களுக்கான சேவையை செய்து நற்பேர் ஈட்டியவன் அதைப் பற்றி எல்லாம் சொன்னால் அது ஒரு பெரிய புராணமாகிவிடும்.

 நாங்கள் அப்போது நிலை தாழ்ந்த பட்டியல் பிரிவில் உள்ள தாழ்த்தப்பட்ட்ட மக்கள்,மலைவாழ் மக்கள்,சேரிப்பகுதி மக்கள், சேவை புரியும் தொழில் சார்ந்த மக்கள் ஆகியோர்க்கு கை தூக்கிவிடும்  சேவையை செய்து வந்தோம். அந்த நாளுக்கு நாங்கள் செய்தது இந்த நாளில் கௌரவமாகி இருக்கிறது. இயல்பாகவே நாங்கள் தேடிச் செல்லாமலே. பொதுவாக விருதுகள் விற்கப்படுகின்றன என்கிறார்கள். ஆனால் இந்த விருது அவர்களாகவே எனது பேரை தேர்வு செய்து போக்குவரத்து செலவும் கொடுத்து அழைத்தார்கள். அந்த பெருமை ஏற்பட முக்கியக் காரணம் விடியல் நண்பர்கள் குழுவின் விடியல் குகன் மட்டுமே. அவர் அதை முன் மொழிந்திராவிட்டால் ஒரு வேளை நானறியாத எவரேனும் அதை முன் மொழிந்திருந்தால் ஒரு வேளை நான் அதை புறக்கணித்திருக்கவும் கூடும்...சர்.சி.வி ராமனைப்போல, ஜெயமோகனைப்போல, இன்னும் விருதுகள் தேடி வந்தும் வேண்டாம் என்று சொன்ன மேன்மக்கள் போல... எப்போதோ செய்ததற்கும் இப்போதும் எனது வாழ்வில் போக்கு மாறாமல் போவதற்கும் இப்போது கிடைத்திருக்கிறது இந்த விருது ஒரு அங்கீகாரமாக.
Image may contain: 2 people, people standing
அப்படி பல வகையிலும் அந்த விருதுக்கு அதாவது சம தர்ம சாதனையாளர் என்னும் சமய நல்லிணக்க விருதுக்கு நான் தகுதி பெற்றவராக இருந்த காரணத்தால் தஞ்சை முதன்மை நடுவராக இருக்கும் கு.கருணாநிதி அவர்களால் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டு எனது சேவைக்காக இந்த விருது தேனி மாவட்ட நீதிபதி: அ.முகமது ஜியாவுதீன் மற்றும் சிறப்பு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை  வருவாய்அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
Image may contain: 1 person, standing
நான் மேட்டூரிலிருந்து சுமார் 11.40 மணிக்கு சென்று அடைந்தேன். போகும்போது மிகுந்த தாமதம். வழியில் பள்ளப்பட்டி என்னும் ஊரில் அது ஒரு முகமதியர்கள் நிறைந்த ஊராக இருக்கக் கண்டேன். பள்ளப்பட்டி என்ற ஊரை 1992 அல்லது அந்த ஆண்டுக்கும் மேலான கால நிகழ்வுகளில் சென்னை டான் போஸ்கோ செய்திப் பரிமாற்ற கலை நிறுவனத்தில் ஊடகத்தின் சுரண்டல் என்ற ஒரு இரண்டு அல்லது மூன்று நாள் பணிமணையில் ஒரு கிறித்தவப் பெண்மணியை சந்தித்தேன் அவர் அப்போது அவரது ஊர்: பள்ளப்பட்டி என்றார். (அந்தப் பணிமனையில் ஹிந்து என்.ராம் ,ஆசியா நெட் சசிகுமார், இப்போதைய ஹிந்து பன்னீர் செல்வம் இப்படி பல பிரபலங்களுடன் என்னிடம் திட்டு வாங்கிய ஞாநி... அது வேறு கதை) பள்ளப்பட்டி என்றால் அது ஏதோ ஒரு குக்கிராமமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த ஊர் எவ்வளவு பெரிய ஊர் என்பதும் அதில் பெரும்பான்மையாக முகமதியர்களே இருக்கிறார்கள் என்பதையும் ஊரைச் சுற்றிக் காட்டி எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் எல்லாரையும் ஏற்றிச் சென்ற நான் ஏறிய தனியார் பேருந்து நல் அனுபவத்தை தந்தது.நான் காலதாமதமாகவே செல்கிறேன் என்ற நினைவும் என்னை நெருட உறுத்த...

அங்கு சென்றால் நல்ல கூட்டம் மேடையில் இந்து அர்ச்சர்கர்கள், கிறித்தவப் பாதிரியார், முகமதிய மௌல்வி எல்லாம் அவரவர் வழியில் பிரார்த்தனை செய்தனர். பொங்கல் வைக்கப்பட்டது. மேடையில்  நான் முன் சொன்னவர்கள் இருந்தனர்.

கலாம் போன்ற பிரபலங்களுடன், பி.என். பகவதி போன்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவைகளில் கூட இடம் பெற்ற எனக்கு இப்போதெல்லாம் மேடைக்கு கீழே அமர்வது என்பதெல்லாம் கூட ஏற்றுக் கொள்வதாகிவிட்டது...

நான் என் மணத்தை எந்தவித பிராமணரும் புரோகிதம் சொல்ல இடம் அளிக்காமல் பார்ப்பன ஐயர் இன்றி பெரிய மனிதர்கள் முன்னிலையிலேயே தாயை முன் வைத்து தந்தை அப்போது இல்லாததால் நடத்திக் கொண்டவன்.

விருதுகள் வழங்கப்பட்டன...எல்லாம் மின்னல் வேகம்.
அடுத்து மதியம் முதல் போக மறுத்து அங்கே இருந்த சுமார் 50க்கும் அதிகமான பேருடன் விருது எப்படி பொருத்தமானது இலட்சிய வாதிகளின் பயணம் எத்தகையது, இலட்சியங்கள் தோற்பதில்லை அவை தொடர்கின்றன...என விவேகானந்தா, கலாம் 2020, வள்ளலார் ஆகியோர் மறைந்தபோதும் அவர்களின் பணிகள் எப்படி தொடர்கின்றன என முழங்கினேன் எனது சிற்றுரையில்.

மதிய நிகழ்வின் போது நிகழ்வை ஒருங்கிணைத்தேன் : விதை சிகிச்சை: மனவளக்கலை பேராசிரியர் பாண்டியராஜன், சிரிப்பு ராஜேந்திரன், செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஜியாவுத்தீன், ஆசிரியர் குமர குரு,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க விடியல் குகன் நிகழ்வை தனது உரையை நிகழ்த்தி முடித்து வைத்தார்.

 நாட்டில் குடியுரிமை சாசன அறிக்கை பராளுமன்றத்தில் அமல்படுத்தியதை ஒட்டி நாடே கொந்தளித்துக் கிடக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இது போன்ற சமதர்ம சமய நல்லிணக்க விழாக்கள் நடத்துவதன் அவசியமும் அதில் இப்படி எனைப் போன்று சாதி மதம் பேதமின்றி பணி புரிந்தோர்க்கு விருது அளித்து கௌரவித்ததும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரின் சார்பாகவும் விருது பெற்றவர்களின் சார்பாகவும் பிரதிநித்துவம் அளித்து அவர்களது கருத்தை பதிவு செய்து கொள்ள பதிவு செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

தமிழ் நாடெங்கும் உள்ளவர்களை எல்லாம் பொறுக்கி எடுத்து பெரும் கூட்டமாக ஆக்குவதை விட ஆண்டுக்கு பல முறை ஒவ்வொரு துறையாக தேர்வு செய்து இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்...மேலும் அந்த விருதின் போது இலட்சக்கணக்கான பணம் பரிசளிக்காவிடிலும் ஆயிரக்கணக்கிலாவது பண முடிப்புகள் பரிசளிக்குமாறு இருந்தால் இன்னும் நிகழ்வு சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது....அப்பதாங்க பட்ட கஷ்டத்துக்கு இன்னும் படுகிற கஷ்டத்துக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்

இல்லையென்றால் நல்ல கண்ணுவாகவும் கக்கனாகவும் அரசு மருத்துவ மனைக்கே போய்ச் சேர வேண்டியதுதான்....

தீயவைக்குத் தீயை வை
தமிழ் மணக்கப் பெரும் பொங்கல் வை
வாழ்த்துகள் எழுது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment