Sunday, January 12, 2020

எல்லோர்க்கும் எல்லாமும்: கவிஞர் தணிகை

எல்லோர்க்கும் எல்லாமும்: கவிஞர் தணிகை
Image result for all to all


100 இளைஞர்களைக் கொடுத்தால் இந்தியாவை மாற்றிக் காட்டுவதாகச் சொன்ன விவேகானந்தா தினம் இன்று இளையோர் தினமாகும்.  54 கோடி பேருக்கு மேல் இளைஞர் உள்ள இந்தியா உலகில் அதிகம் இளைஞர் உள்ள நாடுகளில் தலையாய நாடாகும்.

முதலாளித்துவ சிந்தனை தவிர வேறு மார்க்கங்கள் யாவுமே உலகை உலக மாந்தரை பட்டினிப்பிடியிலிருந்து மேல் உயர்த்துவதாகச் சொன்ன தத்துவங்களே...

வழிமுறைகள்  வேறாக இருந்த போதும் மார்க்சீயம் கூட கீழ் இருக்கும் மனித வாழ்வை மேம்படுத்த முயன்று வெற்றியடைய இதுவே எளிய வழி என்று சொன்னதேயாகும்.
Image result for vallalar and vivekanandaImage result for vallalar and vivekananda
அதன் பின் வள்ளலாரின் கொள்கையோ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடியது...பசி தீர்த்தலே மானிடத்தின் தலையாய முதல் பணி என்று பசிப் பிணி தீர்க்க வடலூரில் சத்திய சன்மார்க்க சங்கம் நிறுவியது.

அதன் பின் வந்த காந்தி தத்துவமும் கூட கடையனுக்கும் கடைத்தேற்றம் என்றும் இராமராஜ்ஜியக் கனவு என்ற பேரில் மிகவும் பின் தங்கிய குக்கிராமத்தில் இருப்பார்க்கும் நாட்டின் நல் வசதி வாய்ப்புகள் சென்று அடையவேண்டும் எனக் கருதியதே...

கலாம் கூட தமது 2020 விசன் என்ற தொலைநோக்கப் பார்வையில் கிராமங்கள் அனைத்துக்குமே நகர்ப்புற வசதிகளான கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம் சென்றடைந்திருக்க வேண்டும் என்று  அந்தக் கருத்துக்கு வலிவூட்டி இருக்கிறார்.

 இந்து மதம், முகமதியம் , கிறித்தவம் , ஜைனம், புத்தம் யாவற்றின்  இலக்குமே இல்லார்க்கும் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கருத்துருக் கொள்கையை கொண்டு சேர்த்தும் கருத்திலிருந்து மாறுபட்டதாக இல்லை.

இப்படி எல்லா இலக்குகளும் எல்லார்க்கும் எல்லாமும் சென்று சேர வேண்டும் என்று இருக்கையில் ஏன் அவை நடைமுறையில் சாத்தியமாகவில்லை...?

 சிந்தித்திப் பார்த்தால் பிரிவினை என்ற ஒன்றும் சுயநலம் என்ற ஒன்றும் முக்கியக் காரணிகளாகின்றன. அது சாதி, கட்சி, மொழி, மதம், இனம், இப்படிப் பட்ட பெயர்களுடன்...

ஊடகமும், பொய்களும் அதன் துணைக் காரணிகள்....

கொடுக்கும் கல்வியில் கூட மேல்மட்டக் கல்வி, கீழ் மட்டக் கல்வி, வளர்த்தும்போதே பிள்ளைகளை பிரிவினைகளோடு வளர்த்தும் நாடும் அதன் கூட்டமும் சட்டமும், நீதியும் நிர்வாகமும்...இலக்கை வெவ்வேறாக ஆம் வெவ்வேராக கொண்டு செலுத்தும்போது எப்படி எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கும்...

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க முதலில் அந்த எண்ணம் எல்லார்க்கும் வர நாம் நம்மாலானதை செய்வோம் செய்து வருகிறோம். பேதங்களைக் களைய முடியாது என கண்ணாமூச்சி பூதம் காட்டுதலை அறிவு சார் கல்வி எனும் பூதக் கண்ணாடி கொடுத்து அது வெறும் காட்சி தான் அதை தெளிவு படுத்தி மீட்சி பெறச் செய்வோம்.சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. நண்பர்கள் முயன்றபடி இருக்கிறார்கள். வளமான வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment