அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அரசு செயல்படும் : கவிஞர் தணிகை
சுபஸ்ரீ இறப்பு 2000க்கும் மேலான போஸ்டர் ப்ளக்ஸ்களை எடுக்க வைக்க ஒரே பெண்ணை பெற்று எடுத்ததாகச் சொல்லும் தந்தை வயிறு வாயுமாக அடித்துக் கொள்ள மகளை இழந்த குடும்பத்துக்கு 5 இலட்சம் இழப்பீடு அளிப்பதாக அரசு விளம்பரங்களும் நீதிமன்றத்தின் தீர்வுமாக ...
முதன் மந்திரி வழியாக வந்தால் உடனே சாலை போட்டிருப்பார்கள்
பாராளுமன்ற உறுப்பினர் வருவதாக இருந்தால் கொசுமருந்து அடித்து சாலை இருபக்கமும் சுண்ணாம்பு வட்டங்கள் இட்டு அலங்கரிப்பார்கள்
சாலையில் செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராகவாவது இருக்க வேண்டுமல்லவா?
இப்படி பொதுமக்கள் எல்லாம் போகவா சாலையும் ரோடும்....
போனால் இப்படித்தான் இருக்கும், நடக்கும். இதை எல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ட்ராபிக் இராமசாமிக்கு வயதாகிவிட்டது ப்யூஸ் மானுஸ் போன்றவர்களுக்கு செருப்பு மாலையும் அடி அடி பூஜையும், எனைப் போன்றோர்க்கு வீட்டிலேயே கொசுக்கடி தாளவில்லை சிறைக்கு சென்று கொசுக்கடியை தாக்குப் பிடிக்க உடலில் சத்து இல்லை,.இதைப்பற்றி எல்லாம் பேச எழுத கேட்க கேள்வி எழுப்ப குடும்பம் வாய் வயிறு ஏதுமே இருக்கக் கூடாது அவர்கள் மனிதராயும் பிழைக்கக் கூடாது...பிழைத்திருக்கவும் கூடாது. பிழைக்கவும் விடமாட்டார்கள் அதெல்லாம் வேறு.
காவல் நிலையத்துக்கு புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்
நீதிமன்றத்திற்கு வழக்கு தொடரப்பட்டால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
புகார் மனு வந்தாலும் கொடுத்தாலும் மட்டும்தான் அது பற்றி கவனித்தால் நடவடிக்கை என்ற பேரிலாவது எதாவது செய்ய விரல் அசைக்கப்படும்
ஊடகம் எல்லாம் எதையும் கண்டு கொள்ளாது அதிசயமாக இருந்தால் மட்டும் கண்டு கொள்ளும் இரட்டைத்தலைப் பாம்பு, ஒங்களைப் போடணும் சார் என்ற சினிமா விளம்பரம் இது போன்று வித்தியாசமாக இருந்தால் மட்டுமே ஊடகம் வருவாய் இருந்தால் மட்டுமே தொழில் நடத்த முடியும்.... எனவே பொதுமக்கள் பிரச்சனையை எல்லாம் யார் கையில் எடுத்துக் கொள்ளப்போகிறார்கள்... எல்லாம் ஆன்லைனிலேயே சான்றிதழ் பட்டா மாறுதல் யாவுமே செய்து கொள்ளலாம் ஆதார் பான் போன்றவை கூட ஆனால் கொடுக்க வேண்டியதை பார்த்துக் கொடுத்துவிட்டால்... தனியார் என்பவை இருக்கும் வரை அரசு என்பது இப்படித்தான் இருக்கும்...
சேலத்தில் முதல்வர் வருகிறார் என்று சிட்டியிலும் அர்பன் லிமிட்டிலும் ஹைவே சாலைகளிலும் அடிக்கடி இந்த சம்பவம் நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பத்து பதினைந்து மீட்டர் இடைவெளியில் ப்ரோட்டோக்கால் என்ற நடைமுறையில் சாலையில் கடும் வெயிலிலும் மழையிலும் நூறடிக்குள் அல்லது நூறு மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு காவலர் இதுவே கிலோமீட்டர்களின் நீளத்தில் தொடர்ச்சியாக வரிசையாக....
சாலையின் இருமருங்கும் கட்சிக் கொடிகள் சில இடங்களில் சாலையின் உள் பக்கமாகவே அக்கறையில்லாத படிக்காத பாமர குடிகார வேலைக்காரர்களால் நடப்பட்டிருக்க எங்கும் எங்குமே எங்கெங்கும் போஸ்டர்கள் .அம்மாவின் விளம்பர ஸ்டைல் இன்றைய முதல்வர் விருப்பமாக... இதெல்லாம் சட்டம் நீதிக்கும் புறம்பானது என முதல்வருக்கு தெரியாது என நினைப்போமாக அல்லது அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாது அதை எல்லாமா ஒரு முதல்வர் பார்த்துக் கொண்டிருக்க முடியும்... அவர் மிகவும் பிஸியானவராக இருப்பார், ஸ்டெரிலைட்டாலையில் மனிதர்கள் சுடப்பட்ட கதை போல அங்கு ஒரு பெண்ணை வாயில் குண்டு சுட்டு சாகடித்த கதை போல இன்று இந்த சுப-ஸ்ரீ விபத்து...
பாருக்குள்ளே நாடு நம் பாரத நாடு, டாஸ்மாக் பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம தமிழ் நாடு.
ப்லக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது என சட்டமும் நீதியும் சொன்னபோதும் எதற்கெடுத்தாலும் போஸ்டர் கலாச்சாரம் கட்சி என்று இல்லாமல் மக்கள் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது இறந்தாலும், பிறந்தாலும், மணம் என்றாலும், பூப்பெய்தினாலும்,இன்னும் டைவர்ஸ் செய்து கொண்டோம் என்ற போஸ்டரைத்தான் இன்னும் பார்க்க முடியவில்லை. அதையும் செய்தித்தாள்களில் மறுதேடலுக்காக போட்டுக் கொள்வார்கள்.... இதற்கு எல்லாம் ஆரம்பம் இந்த அரசியல் கட்சிகள்தான்.
போஸ்டர் அடிக்கச் சொன்னவர்கள் மேல் செயல்நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதை அடித்த பிரஸ்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறார்களாம் வாயில் அல்லாமல் வேறு ஏதிலோ சிரிக்கிறார்களாம் கேட்பவர்கள்...
இதெல்லாம் ஒரு அரசு இதற்கெல்லாம் அரசு என்று பேர்...
அதிலும் கட்சிக்காரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம் எல்லார் வீட்டு திருமணங்களும் தலைவர்கள் போஸ்டர்கள் இல்லாமல் இல்லை. அதில் ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீக போஸ்டர்களும் இருக்கின்றன... யாரைச் சொல்லியும் குற்றமில்லை மக்களின் மனநிலையே அப்படி ஆகிவிட்டது...இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் மனநிலை பிறழ்ந்தவராகவே கருதப்படுவார். இதெல்லாம் இந்தக் காலத்தின் அவசியமய்யா என்ற குரல்கள் ...டாஸ்மாக்கில் பணி செய்யும் எனக்குத் தெரிந்த ஒரு சாகக் கிடக்கும் சவத்துக்கு சம்பளம் ஒரு குவாட்டரும் இருபது ரூபாயுமாம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
இறந்து போன சுப-ஸ்ரீக்கும், ஒரே மகளை இழந்த பெற்றோர்க்கும் இந்த பதிவை ஆழ்ந்த வருத்தத்துடன் காணிக்கையாக்குகிறேன்.

No comments:
Post a Comment