72 ஆயிரம் கோடி ரஷியாவுக்கு கடன் இந்தியா தந்தது சரியா: கவிஞர் தணிகை
பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைக் கால ரஷிய பயணத்தின் போது ஒரு பில்லியன் டாலர் அதாவது 72 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரஷியாவுக்கு கடன் அளிப்பதாக மோடி அறிவித்துள்ளது பற்றி ஒரு தொழில் நலிந்து வரும் இந்தியாவின் கடைக்கோடி குடிமகன் என்ற நிலையில் எனது ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷியா ஒரு வல்லரசு. அமெரிக்காவுக்கு இணையான பேரரசு. உலகின் இரண்டாம் நிலையிலுள்ள நாடு. அதற்கு ஈடு இணையாக இல்லாத ஒரு நாடாக உள்ள இந்தியாவின் தலைவர் அவர் இஷ்டம்போல மக்களது பணத்தை வாரிக் கொடுத்து வருவது எந்த வகையில் நியாயம் என்றே தோன்றவும் இல்லை தெரியவும் இல்லை.
ஆய்தம் வாங்கினோம், விமானம் வாங்குகிறோம், ஏவுகணை வாங்குகிறோம் என அமெரிக்காவுக்கும், ரசியாவுக்கும், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் கொட்டிக் கொடுப்பது ஒரு ரகம். அது கூட வியாபாரம். சரி விட்டு விடலாம்.
ஆனால் இந்தியாவில் மொத்த உள் நாட்டு உற்பத்தி என்பது 5 சதத்துக்கும் குறைவாகப் போய்க்கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில் நமது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாமல் தொழில்கள் முடங்கி வேலையை விட்டு இலட்சக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே அல்லாடி வரும் நிலையில்
இப்படி அவரவர் இஷ்டம்போல இயங்குவது தேவையா அவசியமா...லால்பகதூர் பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியா வறுமையில் இருந்தபோது வீட்டில் சமைக்கும்போதெல்லாம் ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் எடுத்து நாட்டு சேமிப்புக்காக வைத்துக் கொடுங்கள் என்று கேட்டது எல்லாம் இந்த நாடு மறந்து விட்டது.
ஜி.எஸ்.டி, டி மானிட்டிஷேசன் என ஏழைகளின் பணத்தை எல்லாம் கொணர்ந்து வங்கியில் போடவைத்து அவர்களை வேண்டும்போது அவர்கள் பனத்தையே எடுக்க விடாமல் செய்து வங்கிகளை இணைக்கிறோம் வளைக்கிறோம் என்று தகிடு தத்தம் செய்து அம்பானிமார்களை வாழவைத்து தனியார் முதலாளிகளிடம் தேர்தல்நிதி பெற்றி வெற்றி இலக்கை அடைந்து விட்டு மக்கள் நலத்தை எல்லாம் மறந்து விட்டு என்ன நினைத்துக் கொண்டு இப்படி பணத்தை வெளி நாட்டுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை...புட்டின் புத்திசாலியா மோடியா...
விவசாயம் நலிந்து விட்டது, தொழில்கள் நசிந்து வருகின்றன, வேலையில்லாத் திண்டாட்டத்தில் நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன மக்களுக்கு ஒன்றும் செய்யத் துணியாத அரசு இது வரை குடி நீருக்கும் மருத்துவத்துக்கும், கல்விக்கும், உணவுக்கும் இருப்பிட்த்துக்கும் எதையும் செய்யா அரசு, அதாவது உத்தரவாதம் செய்யா அரசு வெளி உலக நாடுகளின் மத்தியில் எங்கள் நாடு பெரிய நாடு என சீனா போல வளர்ந்து விட்டோம் என வெளிவேஷம் போடவா இப்படி கொடுத்து இருக்கிறது...
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க் கூட தான் பிரதமராக இருக்கும்போது ஏதோ ஒரு நாட்டுக்கு இப்படிப் படி அளந்து வந்ததாக படித்த நினைவும் இருக்கிறது ஆனால் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும், பிரான்சுக்கும் இங்கிலந்துக்கும் படியளக்குமளவு இந்தியாவில் என்ன கிழிக்கிறது என்று எனக்கும் கேட்க உரிமை இருக்கிறது ஒவ்வொரு நாளிலும் எனது உழைப்பிலும் நாட்டுக்கு வரி என்று போய்க் கொண்டிருக்கிறது என்பதால்...
ஒரு அநியாயம் இணையத்துக்கு கட்டணம் என்று பி.எஸ்.என்.எல்லில் 690 என வசூலிக்கும் பணத்துக்கு. 135 ரூ ஜி.எஸ்.டி என மாதம் ஒன்றுக்கு கட்டுகிறேன்
900 கோடியில் சந்திராயன் தயாரிப்பை இஸ்ரோ செய்வதும் எத்தனை சிக்கனமான முயற்சி டைடானிக், அவ்தார் போன்ற சினிமா எடுக்கும் பணத்தில் அரைப் பாதி அளவுதான் இதற்கு ஆனதாம் சுமார் 16,500 அறிவியல் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டதாக ஒரு செய்தி.., கார்ப்ரேட், தனியாருக்கு கொடுத்த பணக் கடன்களை வாங்காமலே இப்படி நாடு பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தியில் 5 சதத்துக்கும் கீழ் இறங்கி வரும் நிலையில் இந்த கடன் விவகாரம் தேவைதானா தலைவரே..
குடிப்பதற்கு குடிநீர் தர முதலில் உத்தரவாதமில்லை, கழிவறைகள் இல்லா சுத்தம் சுகாதாரம் இல்லா நாட்டின் தலைமை உலகின் வல்லரசிற்கு கடன் அதுவும் 72 ஆயிரம் கோடி தந்துள்ளதை வரலாறு மன்னிக்காது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment