Wednesday, May 29, 2019

மழை இல்லை என்றாலும் இன்று காற்று ஓய்ந்தது : கவிஞர் தணிகை

புழுதிக்காற்று: கவிஞர் தணிகை


Image result for wind and dust in tamil nadu

சில நாட்களாக எங்கள் ஊரில் மட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் பல இடங்களிலும் சூறைக்காற்று, புழுதிப் புயல் மண்ணை வாரி வாரித் தூற்றியபடி இருந்தது மழையே இல்லை. எனவே பாலை நிலத்தின் விளைவு போலவே...

அந்தக் காற்று வடமேற்கே இருந்து தான் வந்தது.ஆனாலும் தமிழகத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்ததாலும்  படை சிறியதாக இருந்ததால் பெரும் சைன்னியத்தை தடுக்க மட்டுமே முடிந்தது என்றாலும் வடக்கே இருந்த புழுதிப் புயலின் முன் ஈடு கொடுக்கவே முடியவில்லை. அது ஜெயித்தே விட்டது.

வெற்றி பெற்ற மாந்தரில் பாதிக்கும் மேல்  குற்ற வழக்குகள் உள்ளவர் என்றும் புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன.

சாதியை மதமும் மதத்தை பணமும் வென்ற சரித்திரம் இங்கே நடந்தது. வாக்கு எந்திரங்கள் பல இடங்களில் கண்டதான காணொளிகள் பார்க்கக் கிடைத்தவை பொய்யா மெய்யா என்றே தெரியவில்லை

ஆனால் எதிரிக்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளை ஒன்றுமில்லாமல் செய்ய திட்டமிட்டே ரெய்டுகள் நடந்தேறின...பண முடக்கம் செய்யப்பட்டன  தேர்தலிலும் திட்டமிட்டே எதிர்க்கட்சிகளிடம் பெரும்பான்மையான தேர்தல் ஆணையத்தின் பார்வை இருந்தன. ஆளும் கட்சியை வல்லமையாக்க‌ எதிர்க்கட்சியை சூன்யமாக்கும் காட்சிகள் நன்றாகவே அரங்கேறிவிட்டன.காவி என்பது துறவு என்பதைக் குறிக்கும்... இங்கு நடந்தது எல்லாம் வேறு.

இனி காபந்து சர்க்கார் என ஆளும் கட்சியை பயன்படுத்தாமலே  குடியரசர் ஆளுகையில் தேர்தல் நடந்தால் மட்டுமே எந்தவித மாய்மாலங்களும் இல்லாமல் தேர்தல் என்பது இருக்கும்

சூப்பர் ஸ்டார் என்ன சொல்லி இருக்கிறார் எனில் அந்த ஒரே மனிதர்க்காக மட்டுமே இந்த வெற்றி நிகழ்ந்த்து என தனி மனித துதி பாடியுள்ளர். இதெல்லாம் எங்கே போய் நிற்குமோ எனில் இரண்டு வருடம் கடந்து பார்க்கலாம் என்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

2 comments:

  1. "வெற்றி பெற்ற மாந்தரில் பாதிக்கும் மேல் குற்ற வழக்குகள் உள்ளவர் என்றும் புள்ளி விவரங்கள் சொல்லி இருக்கின்றன."
    .
    திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்
    அது மட்டுமல்ல
    ஆ ராசா , கனிமொழி , இவர்கள் எல்லாம் குற்ற பின்னணி உடையவர்கள்
    தயாநிதி மாறன் மீது கேஸ் உண்டு
    கார்த்தி சிதம்பரம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை

    ReplyDelete