Sunday, May 19, 2019

எவரையும் எதையும் பேசலாம் ஆனால் செய்ய வேண்டியது>? கவிஞர் தணிகை

எவரையும் எதையும் பேசலாம் ஆனால் செய்ய வேண்டியது>? கவிஞர் தணிகை

Image result for 17th lok sabha

கெய்ல் இராட்சதக் குழாய்கள் தஞ்சை விளைநிலத்தின் மத்தியில் போய்க் கொண்டிருக்க பணிகள் ஆரம்பத்திருக்க..

குடி நீர்த் தேவைக்காக தமிழகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க‌

கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ,  ஆகிய பிரச்சனைகள் தலைவிரித்தாட கொடும் கோடையில் உயிர்கள் பிழைப்பதா மாய்வதா என்று போராட்டத்தில் கிடக்க...

தேர்தல் பிரச்சாரத்திற்காக கமல் பேசிய பேச்சை தமக்கே உரிய கருத்துகளின் புரிதலில் பெரிது படுத்தப் பட்டு பிரச்சனைகளை திசை திருப்பி வருகிறார்கள் என்ற கருத்தை நிறைய பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

உண்மைதான் ஆளும் அரசுகள், அது மாநில அரசானாலும், மத்திய அரசானாலும் இருக்கும் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்காமல் அதை திசை திருப்ப  அன்று புதிதாக வரும் செய்திகளை ஊதிப் புடைத்து அதில் தானிய மணிகளுக்குப் பதிலாக வெறும் உமியை எடுத்து வருகிறார்கள்.

ஊடகமும் எந்த செய்தி முக்கியமோ அதைப்பற்றி கவனம் கொள்ளாமல் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் வெறும் சளசளப்புக்கான செய்திகளை வெளிப்படுத்தி ஏற்கெனவே உள்ள கோடையை மேலும் கொதி நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.
Image result for contradiction news about opinion of success of election of India
மேலும் ஒரு சாரர் மோடி அணிக்கு 100 சீட் கிடைத்தாலும் அதிகம் காங்கிரஸ் பக்கமே பெருத்த எண்ணிக்கை என்று அவர்கள் சார்பு ஊடகமே தெரிவித்து வருவதாகவும்

மறு சாரர் இல்லை இல்லை அவர்களுக்கு தனிப்பெரும் கட்சியாக ஏன் அமித் ஷா சொல்வது போல முன்பு வென்றிருந்த எண்ணிக்கையை விட அதிக எம்.பி சீட்களை வெல்வோம் என்ற பாணியில் பேசி வர‌

இன்னும் சில நாட்கள்...காத்திருப்போமே...

இடையே இடைத்தொகுதி தேர்தல் எம்.எல்.ஏவுக்காக‌
 பல நூறு கோடி ஆளும் கட்சி செலவளித்திருப்பதாக ஒரு செய்தியில் முன்னால் மந்திரி சொல்வதாகவும்
தி.மு.க அடையாளத்திற்காக இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் காபி  எடுத்து கொடுத்துள்ளதாகவும் அதை வாக்களித்த பின் கொண்டு வருவார்க்கு இரண்டாயிரம் வழங்கப்படும் என்ற செய்தியும்
Image result for contradiction news about opinion of success of election of India

கமல் செருப்பும் முட்டையும் கற்களும் தாங்கி சினிமாவிலிருந்து பொது வாழ்க்கைக்கு வந்தே விட்டார். இனி அவருக்கு நல்ல நேரம் தாம் போலும்.

இன்றைய 7 ஆம் கட்ட வாக்குப் பதிவு நாளில்..

தேர்தல் ஆணையம் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் தேர்தலை நன்றாக அமைதியான முறையில் நடத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். கட்சிகள் தங்கள் கை வண்ணத்தை காட்டி இருந்த போதிலும்.

அதே போல வாக்கு எண்ணிக்கையையும் எந்த வித சூது வாது இல்லாமல் நேர்மையாக செய்து முடித்து விட்டதென்றால் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் 17 வது மக்கள் அவை பணி முழுதும் நிறைவடைந்ததாகவே கருதலாம் அதன்பின் எண்ணிக்கை சாய்வுகளும் நகர்தல்களும் பதவி ஏற்புகளும் இயல்பாக நடைபெற்றுவிடும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment