Tuesday, May 14, 2019

கமல் காந்தி கோட்ஸே: கவிஞர் தணிகை kamal gandhi kotse...kavignar thanigai.

கமல் நாதுராம் கோட்சேவைச் சொன்னால் இவர்களுக்கு ஏன் இத்தனை எரிச்சல்?  கவிஞர் தணிகை

Image result for kamal gandhi kotsey




தமிழிசை, சு. சுவாமி, ஹெச்.ராஜா இப்படி ஒரு சாரர் இவர்கள் எல்லாம் அந்த இந்துசேனாவிலிருந்தும், ஜனசங்கத்திலிருந்தும்,பாரதிய ஜனதாவின் பூர்வீக ஆரம்பத்திலிருந்தும் வந்த வழித் தோன்றல்கள் என்று சொல்லாமல் சொல்லி கோட்சே அவர்கள் ஆள்தாம் என்று சொல்லாமல் சொல்லி தம்மைத் தாமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழிசை தேர்தல் முடிவு தேதியும் மறு தேர்தல் நாளும் நெருங்க நெருங்க உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக ஸ்டாலின் பாஜகவுடன் இரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார் பதவி பெற என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் அப்படி ஏதும் இருந்தால் தாம் பதவி விட்டே விலகத் தயார் என்றவுடன் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசியதாகவும், கருணாநிதி மகன் ஸ்டாலின் அரசியலில் இருப்பதே தமது விருப்பம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.Image result for kamal gandhi kotsey


டில்லியில் வழக்கும் அரவக்குறிச்சியில் இரு வழக்கு என கமல்ஹாசன் மீது மிகவும் காட்டமாக இருக்கிறது நாட்டின் மாபெரும் கட்சி ...ஒரு மாநில மந்திரி அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்கிறார்

இவர்கள் எல்லாம் என்ன தாங்கள் மகாத்மா காந்தி என்ற சமாதான நல்லிணக்கத்துக்காகவும், மத நல்லிணக்கத்துக்காவும் பாடுபட்ட   மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியை 120 வயது வரை வாழ்வேன் எனச் சொன்ன ஒரு உலகத் தலைவரை 78 ஆண்டுகளில் கொன்று முடித்ததை ஆதரிக்கிறார்களா? வேறு என்ன இதற்கு பொருள்?

அந்த கோட்ஸே கொன்றது உண்மை என்பதை சரித்திரம் சொல்கிறது அதை ஒரு கட்சித் தலைவர் பேசியது தவறு என்றால் பாபர் மசூதி இடித்தது இன்னும் கூட முடிவடையாமல் உள்ள நிலையில் அதன் அடிப்படியில் ஒரு ஆட்சி தேர்தலில் நின்று வாக்கு கேட்பதும் மறு முறையும் தாமேதாம் ஆட்சிக்கு வருவோம் என்பதும் என்ன நியாயம்?


Image result for kamal haasan




இந்த கூட்டம் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யுலாம் என்று அறிந்த கமல் கட்சியின் தலைவர் என்ற முறையில் அன்றைய அரவக்குறிச்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மதுரை சென்றதும் அந்தக் கூட்டத்தை 16 அன்று தொடரலாம் என்று விட்டு வந்திருப்பதும் நல்லதே.

இதனிடையே அந்தக் கட்சியையே ரத்து செய்ய வேண்டுமா வேண்டாமா என்றெல்லாம் ஊடகங்கள் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன‌

ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்னும்படியாக கமல் மேல் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஆளும் வர்க்கத்தார்க்கு பேதம், கோபம்,வெறுப்பு எல்லாம். இந்த காலக் கட்டத்தில் ரஜினி மாதிரி தோழர்கள் இது பற்றிக் கருத்து சொல்லவிரும்பவில்லை என்பது யார் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார் என்றதை தெளிவு படுத்துகிறது.

கமல் காந்திய வழியில் பயம் கொள்ளாது வழக்குகளைச் சந்திக்க வேண்டும் தேவைப்பட்டால் சிறைக்கும்  செல்ல வேண்டும். அது அவரை மேலும் நாடெங்கும் பிரபலமான தலைவராக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்துவிட்டு அவரது கட்சிக்காரன் தான் அடித்தான் என்று சொல்வதும்...தேர்தல் என்ற ஒரே இலக்குடன் பதவி என்ற ஒரே இழுக்குடன் இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம்
என்றுதான் ஒரு முடிவு வருவது அது இந்தப் புள்ளியில் இருந்தாவது ஆரம்பிக்கட்டும்...இவரது கட்சியை தடை செய்தால் தேர்தல் முறையை எல்லாம் கூட தடை செய்து விட வேண்டியதாக இருக்கும்.

ஏன் எனில் எல்லாம் வரையறையை சட்ட விதி முறைகளை மீறியதாகவே நடந்து வருகிறது என்பதை உலகு பார்த்தே வருகிறது. எங்கே எம்.எல்.ஏ சீட் இந்த கட்சிக்கு கிடைத்து விடுமோ என்ற ஒரு
எதிர்ப்பில் எனவே அந்தக் கட்சியையே தடை செய்து விட்டால் சரியாக இருக்கும் என்ற தப்புக் கணக்குகள்...எம்.எல்.ஏக்களை கட்சி பதவி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் போல‌

எங்கோ அடித்தால் இங்கேன் வலிக்க வேண்டும், அவரது நாக்கு ஏன் அறுக்கப்பட வேண்டும்... தப்பும் தவறுமாக பேசியே பதவி சுகத்தில் கிடந்து வரும் உழன்று வரும் நபர்களாய் இருக்கும்போது ஒரு மனிதன்  உண்மை பேசியதற்காக அவரது நாக்கு அறுக்கப்பட வேண்டுமென்றால் அது கூட தவறில்லை தான் கலிலியோ உண்மை கண்டறிந்தபோது வீட்டுச் சிறையில் அடைபட்டது போல, கோபர்நிகஸ் நாக்கு அறுபட்டது போல,சாக்ரடீஸ் விஷக்கோப்பை ஏந்தியது போல...

கமல்ஹாசன் இனி புகழ் பெறுவார் அது நிச்சயம்...
இந்த சிறு நரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் வாலாட்டலுக்கும் அவர் பயந்து விடக்கூடாது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment