நானும் கூட இந்துதான் பிறப்பால்: கவிஞர் தணிகை
காணபத்யம், கௌமாரம், சக்தேயம், சௌரம்,சைவம், வைணவம் என்ற சமயக் கூறுகளை உள்ளடக்கியதுதான் இந்து மதம். எல்லாவற்றிலும் நிறைய கதைகள். மக்கள் நம்பிக்கைகளாக. அதன் அடியில் இராமாயணம் மஹாபாரதம் என்னும் இதிகாசம் இரண்டும். என்னிடம் இவை மட்டுமல்ல பைபிள், குரான், கீதை, யாவும் பல முறை படித்து முடிக்கப்பட்டு ஒரு வரையறை செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் பௌத்தம், ஜைனம், ஜென் , ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்ற எல்லா தத்துவங்களிலும் ஈடுபாடு உள்ளது அவை நன்மை பயக்குமெனில். இவை யாவற்றிலும் உள்ள நல்லதை எடுத்து செரித்து அதன் ரசத்தை உறிஞ்சிக் குடித்து வளர்ந்த செடி.
மதங்களைக் கடந்து பார்க்கத் தெரிந்திருந்தால் மட்டுமே மனிதம் முழுமை பெறும். அவர்களே மனிதர் என்று அழைக்கப்பட சரியான பொருள் பெறுவர்.
பிறப்பால் நானும் கூட ஒரு இந்து தான் என்றாலும் கலாம் ஐநாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டது போல யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வழியே சிறந்தது என்று எண்ணி வாழ்வது எங்கள் வழி.
மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும் வணங்கலாம் என்ற பெரியாரையும் பிடிக்கிறது
ரூபக்கடவுளும் பூசாரிகளும் இருக்கும் வரை இந்த உலகில் ஒழுக்கம் தோன்ற வழியே இல்லை என்ற விவேகானந்தரின் நெறியும் பிடிக்கிறது என ஏன் சொல்ல முடிகிறது எனில் அவை எவருக்கும் ஊறு விளைவிக்கவில்லை என்பதால்
கலாம், தெரஸா, காந்தி போன்ற மாமனிதர்களை எல்லாம் நாம் மதம் என்ற ஒரு அளவுகோல் வைத்து அதற்குள் அடைத்து விட முடியாது. அவர்கள் முழு மானிட சமுதாயத்துக்கே சொந்தம். ஏன் எனைப்போன்றோர் கூட எந்த மதம் சார்ந்தும் இயங்குவது இல்லை. ஆனால் எல்லா மதத்தின் வழிகாட்டுதலும், நெறிகாட்டுதலும் உவமைகளும் சொற்றொடர்களும் எமது பேச்சின் புழக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டவே செய்யும் ஏன் எனில் அவை எம்முள் ஊறி இருப்பதால் .ஆனால் அவை காட்டும் முட்டாள் தனங்களையும், மூடத்தனங்களையும் யாம் ஒரு போதும் ஏற்பதில்லை.
விவேகானந்தர் சொல்வது போல உருவ வழிபாடு என்பதே மிகவும் கீழான நிலை...அதிலிருந்து தியான மார்க்கம் சென்று கடவுளை அறிந்து பட வேண்டும்.
எனவே நானும் கூட இந்துதான் பிறப்பால் ஆனால் எனக்கு கிறித்தவ நண்பர்கள் ஏராளம், முகமதிய நண்பர்களும் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு உவப்பானவனாகவே இருக்கிறேன்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல மனிதரை நாடு, மதம், மொழி, இனம், இவை போன்ற எதுவும் அடையாளப்படுத்தி விடக் கூடாது. மனிதர் எவராயிருந்தாலும் அவர் மனிதர்தாம். அவரின் உயிர் அரியதுதான். பாகிஸ்தான் மனிதர் இறப்பு இந்தியாவில் வசிப்பதால் நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அதுவும் தவறுதான்.
கியூபாவில் வாழும் ஒரு மனிதரின் துன்பம் அமெரிக்காவில் இன்பமாக மற்றொருவரால் கருதப்பட்டால் அது மனிதமல்ல...
இது போன்ற மேன்மையான கோட்பாட்டால் உலகும் மக்களும் மகிழ்வடைவார் குண்டு மழைக்குத் தேவையிருக்காது. குடிக்க நீர் கூட இல்லாமல் அரசியல் பேதங்களும், சாதி மத பேதங்களும் இங்கும் எங்கும் தலை விரித்தாட முடியாது.
இதையே மாமனிதராக வாழ்ந்தார் எல்லாம் சொன்னார்கள்... ஆனால் கீழான சிந்தை படைத்தார் தமது சுய நல மேன்மைக்காக தேவையில்லாத இவற்றை எல்லாம் உயிர்ப்பித்து உருவம் கொடுத்து மனித உயிர்களைக் கொத்துக் கொத்தாக எண்ணிக்கை அளவின்றி வாங்கி உலகை வன்முறைக் களமாக , இரத்தம் சிந்தும் அரங்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அது போன்ற நபர்கள் எல்லாம் சமுதாய பொது வாழ்வு வெளியிலிருந்தே அப்புறப்படுத்தப் பட வேண்டியவர்கள்.
சந்திரசேகர சங்கராச்சாரியார் அவர்கள் தமிழ் மொழி நீச மொழி என்று சொன்னதாக வரலாறு உண்டு. மொழி கடவுளை அடைய ஒரு ஊடகம் எனில் அதிலும் சமஸ்கிருதம் போன்ற வட மொழி மட்டுமே அதற்கு தகுதியுடையது எனில் அதுவும் எவர்க்குமே புரிபடாமல் அவற்றை மந்திர தந்திர வழிகள் என்று ஏமாற்றும் வழிகள் எனில் கடவுளும் கூட ஒரு ஏமாற்றுதான் என்றே கருத முடியும்.
புறம் கட உள் பார்க்க
புறம் கட கடவுள் பார்க்க
இராமலிங்க வள்ளலார் போன்ற மகான்கள் அவதரித்த நாட்டில் இப்படிப்பட்ட பெரு ஓலம். ஒர் மனிதர்க்கு பேசவும் , எழுதவும் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை சட்டபூர்வமாகவே உண்டு. அதற்காக அவரை நிந்திப்பதும், அவர் மேல் வழக்கு தொடுப்பதும், அவரது நாக்கை அறுப்பதாக சொல்வதும் இவை எல்லாம் மக்களை ஒரு கொந்தளிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகும்
இராமலிங்க வள்ளலாரே முதலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்துப் பெருமான் முருகனை வணங்கிப் பாடல் புனைந்திருக்கிறார்... ஆனால் இறுதியில் பக்குவத்தில் அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங்கருணை என்கிறார் மக்கள் பெரும்பசி தீர்த்தல் பெரும் கடைத்தேற வழி என்கிறார்.
இந்தியா மகாத்மா கோட்ஸே, ராஜிவ் தனு பிரபாகரன், இந்திரா பியந்த் சிங் பொற்கோவில் இப்படி ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது அதன் பின் வரும் சில பெயர்களும் இருக்கத்தான் செய்யும் அதற்காக அதைப்பற்றி பேசுவது எழுதுவது கூடாது என்பதெல்லாம் வன்முறையைக் கிளப்பும் ஆதிக்க வெறிகள். அவற்றுக்கு மக்களும் நாடும் நெறிகளும் நீதியும் இரையாகிடக் கூடாது
முதலில் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யுங்கள் அதன் பின் நீங்கள் எந்த மதம், கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று அடித்துக் கொள்ளலாம்
கமல்ஹாசன் முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்துவிட்டு மறுபடியும் அது சரித்திரப்பூர்வமான உண்மைதான் என பிரச்சாரத்தில் இறங்கி இருப்பது அவரைப்பொருத்தவரையிலும், அவர்கள் மக்கள் நீதி மையக் கட்சியைப் பொறுத்தவரையிலும் ஒரு ஆரோக்யமான முயற்சியே.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!
திருமூலம்

***முதலில் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யுங்கள் அதன் பின் நீங்கள் எந்த மதம், கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று அடித்துக் கொள்ளலாம்***
ReplyDeleteஅது சரி, குடிநீர் பிரச்சினைதான் இப்போ முக்கியம். அதைத்தீர்ப்பதுக்குத்தான் வழி வகுக்கனும். இந்த வெளக்கெண்ணை மட்டும் இப்போ என்ன மயித்துக்கு கோட்சே பொணத்தைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி பண்ணுறார்?
தீவிரவாதிக்கு மதச்சாயம் இப்போ என்னத்துக்கு பூசுகிறார் இந்த வெளக்கெண்ண?
இலங்கையில் சமீபத்தில் நடந்த தீவீரவாதத்துக்கு மதச்சாயம் பூசுவது தவறென்றால், கோட்சேக்கு என்னத்துக்கு மதச்சாயம்னு உங்களுக்கு ஏன் யோசிக்க முடியவில்லை?!!!
குடி நீர் , மருத்துவம், தனியார் கல்வி மயம், போன்ற அடிப்படைத் தேவைகளையும் மதுவிலக்கு போன்ற கொள்கைகளயும் கையில் எடுத்த எங்கள் தமிழக இலட்சியக் குடும்பங்கள் இயக்கம் பற்றி தெரியுமா அதற்கு நேர்ந்த கதி தெரியுமா... வாக்கு வாங்க தேர்தல் என்னும்போது அந்த வாக்கை வாங்க பிரச்சாரம் என்பது ஒரு முக்கியமான் உத்திதான். அதற்காக எதையுமே பேச வேண்டாம் என்பதில் பொருள் இல்லை.
Deleteஎனக்குத் தெரிய உங்க அபிமான ஹீரோ கமல்ஹாசன், மடுவிலக்குக்கு ஆதரவு எதுவும் தரவில்லை. ஏன் நீங்க அவரிடம் உங்க தமிழக இலட்சிய குடும்பங்கள் இயக்கம் பத்தி சொல்லாமல் என்னிடம் வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ஏன் பார்ப்பான் சொல்றதைத்தான் நீங்க கேப்பீங்களாக்கும். நீங்க சொல்றதை எட்டாங் கிளாஸ் படித்த பார்ப்பான் கேக்க மாட்டானா?!
DeleteThis comment has been removed by the author.
Delete"எனக்குத் தெரிய உங்க அபிமான ஹீரோ கமல்ஹாசன், மது விலக்குக்கு ஆதரவு எதுவும் தரவில்லை."னு வாசிக்கவும்
Deleteஅங்கே மட்டுமல்ல எங்கேயும் எங்களுக்கு சொல்லத் துணிவு உண்டு. சொல்லியும் வருகிறோம்.அதற்காக உயிர்த் தியாகம் செய்த இயக்கமே எங்களுடையதுதான் அண்மைக்காலத்தில். சசிபெருமாள் வரலாறு தெரியுமா? என்னிடம் வருண் பேசியதால் வருணிடமும் சொல்லி இருக்கிறேன். வருண் பேசாமலிருந்தால் நான் ஏன் சொல்லப்போகிறேன்?பார்ப்பான் மட்டுமல்ல எவன் சொல்றதையும் கேட்கற அளவுக்கு அவர்களை மூடத்தனமாக பின்பற்றுமளவு அறிவுக் குறைந்தாரிடம் சென்று உங்கள் வாதத்தை எல்லாம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எவன் சொன்னான் எந்த பார்ப்பானையும் யாம் ஆதரிக்கிறோம் என்று?
Delete***நானும் கூட இந்துதான் பிறப்பால்***
ReplyDeleteஅதாவது உங்க தாய் தந்தையர் ஹிந்துனு சொல்றீங்களா? இல்லை சிறுவயதிலே உங்களுக்கு இல்லாத இந்துக் கடவுள்கள அறிமுகம் செய்துவிட்டார்கள் என்கிறீரா.
கமலஹாசன் பிறப்பால் ஹிந்து மட்டுமல்ல! பார்ப்பனர்! அதனால் நீரும் அவரும் ஒன்றல்ல. ஜெனட்டிக்கல்லி அவர் டி என் எ உம் டி என் ஏ யை விட வேறுபட்டது. இதெல்லாம் திராவிட கைக்கூலிகளுக்குப் புரியாது!
எங்கள் டி.என்.ஏ வேறுபட்டதுதான். உனது டி.என்.ஏவும் வேறுபட்டதுதான் அருண். டி.என்.ஏ வேறுபடுவதற்கும் திராவிடக் கைக்கூலி என்பதற்கும் என்ன தொடர்பு...திராவிடர்கள் கைக்கு கூலி கொடுக்கும்போது உன்னிடம் சொல்லி விட்டு அல்லது உனக்குத் தெரிவித்துவிட்டுத் தான் கொடுத்தார்களா வெறுண்...
Deleteநானா "நானும் இந்துதான்"னு கமல்ஹாசனுக்கு வக்காலத்து வாங்கினேன்? என் டி என் எ எதுக்கு இப்போ?
Deleteஎன் செல் ல, நியூக்லியஸ்ல டி என் எ வே இல்லைங்க. ஆர் என் எ தான் என் ஜினோமில் இருக்கு. நான் ஒரு தனிப்பிறவி. அதான் நான் பார்ப்பனருக்கு அடி வருடுவதில்லை! :)
டி.என். ஏ வும் ஆர்.என்.ஏவும் இரண்டுமே முக்கியம். தன் செல்லில் டி.என்.ஏவே இல்லைங்கற பெரிய அறிவியல் அறிஞரை இப்போதுதான் பார்க்கிறேன்.பார்ப்பனருக்கு நீ அடிவருடியா இல்லையா நான் கமலுக்கு வக்காலத்து வாங்கறனா இல்லையாங்கறதெல்லாம் தேவையில்லாத விசயம்...இந்த வேண்டா விவாதத்தால் எல்லாம் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை...நல்லோரை இந்த நாடு என்று ஆதரித்திருக்கிறது?
Deleteஅப்படி என்ன வித்தியாசம்னா, பார்ப்பனர் ஹிந்து ஜல்லிக்கட்டில் கலந்துக்காமலே திராவிட கைக்கூடலிகளை பலி கொடுப்பான். திராவிட கைக்கூலிகள், பார்ப்பனரை ஜல்லிக்கட்டில் ஒருபோதும் நுழைக்க முடியாது. எட்டாங்கிளாஸ் படிச்சாலும் பார்ப்பான்னா மேதைனு சொல்லுவான் திராவிட கைக்கூலிகள்?
ReplyDeleteஆமா நீங்க பார்ப்பனரா? இல்லை பார்ப்பனரை வணங்கும் லோ கிளாஸ் இந்துவா?
அவன் சொன்னானா திராவிட கைக்கூலிகள் என்று வருணானால் சொல்லப்படுகிற நபர்களுக்கு எங்கே போயிற்று அறிவு?
Deleteபடிப்புக்கும் மேதமைக்கும் பெரிய தொடர்பு எல்லாம் ஒன்றும் இல்லை வருண். எட்டாம் கிளாஸ் என்பதும் எட்டாத கிளாஸ் என்பதும் எதையும் சாதிக்க இங்கு சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. அவன் சொல்லிட்டுப் போறான் அவனை எல்லாம் கவனிக்க உங்களைப்போல பெருத்த நேரம் செலவிட எங்களுக்கு கால நேரம் கை கொடுப்பதில்லை.
நான் பார்ப்பானா, லோ கிளாஸ் இந்துவா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி. எனக்கு தெரியவில்லை அதென்ன லோ கிளாஸ் இந்து, அப்போ மிடில் கிளாஸ் இந்து , ஹை கிளாஸ் இந்து என்றெல்லாம் உண்டா சற்று விளக்கவும்.
****அதென்ன லோ கிளாஸ் இந்து, அப்போ மிடில் கிளாஸ் இந்து , ஹை கிளாஸ் இந்து என்றெல்லாம் உண்டா சற்று விளக்கவும்.****
Deleteபார்ப்பான் ஹை க்ளாஸ் இந்துளென்றுமே பார்ப்பானை உயர்வா நினைக்கும், திராவிட கைக்கூலிகள் "லோ க்ளாஸ்" இந்துக்கள்!
வருண் அகராதியில் எப்படியும் இருக்கலாம். சமூக அங்கீகாரம் என்பது வேண்டுமே...எங்கே அந்த மிடில் கிளாஸ் இந்து பற்றிய விளக்கம்..விடுபட்டுவிட்டதா...லோ கிளாஸ், ஹை கிளாஸ் என்று எந்த மனிதரையுமே நான் கருதுவதில்லை. அய்யரை ஹை கிளாஸ் இந்து என்றும் அவரை ஆதரிப்பதில்லை என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.
Deleteசூப்பர் வருண்
ReplyDeleteஇதென்ன ஜால்ரா, வேலிக்கு ஓணான் சாட்சியாக...சூப்பரான் கீப்பரான்னு...
Deleteஅவரு பி ஜெ பி அல்லது அதிமுக வாக இருக்கலாம். எனக்கு அவரை யாருனே தெரியாது. ஏதோ சொல்லீட்டுப் போறாரு விடுங்க. நீங்க கமலஹாசனுக்கு ஒண்ணூனா ஒப்பாரி வச்சு அழலையா? அது மாதிரித்தான். :)
Deleteநீங்க பேசினா பூபாளம்...நாங்க பேசினா ஒப்பாரி. நல்ல இருக்கு நியாயம். நாங்க எவருடைய பேச்சுரிமைக்கு எதிராகவும் இப்படி அநியாயமா பேசினா, நடந்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எழுத நேரம் இருந்தா பேச நேரம் இருந்தா பேசுவோம்... உங்களுக்கு பதில் சொல்லவே நேரம் போதாது போலிருக்கு.
Deleteஇந்த மறுபடியும் பூக்கும் தளத்தில் வரம்பு மீறி கேட்கப்படும், எழுதப்படும் எழுத்துகள் தயவு தாட்சண்யமின்றி நீக்கப்படும் என்ற நியமத்தை உள் வாங்கி எவர் வேண்டுமானாலும் வந்து தங்களது கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினால் பதிவு செய்யப்பட்டு பகிரப்படும் அல்லாவிடல் நீக்கப்படும்
ReplyDeleteகருத்துனா அப்படி இப்படித்தான் வரும். நேரம் செலவழித்து எழுதும் பின்னூட்டத்தை நீக்கினால், நீங்களே உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டுக்க வேண்டியதுதான். இல்லைனா கமலஹாசனை வந்து உங்களை பாராட்டச் சொல்லுங்க! :)
Deleteஅது போன்ற நேரமும் வரும்
Delete