Sunday, February 3, 2019

தி புக் ஆப் மிடாட்: மிக்கைல் நெய்மி: கவிஞர் தணிகை

தி புக் ஆப் மிடாட்: மிக்கைல் நெய்மி: கவிஞர் தணிகை
Image result for mikhail naimy


ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ், சிட்னி செல்டன், அலிஸ்டர் மெக்லீன், கமலாதாஸ் , கமலா மார்கண்டேயா, ஆர்.கே நாரயண் இப்படி பல ஆங்கில எழுத்தாளர்களின் பல நூல்களை நான் கடந்ததுண்டு. ஆனால் இந்த தி புக் ஆப் மிடாட் என்னும் நூல் ஓசோ சொல்லியது போல புத்தகங்களிலே ஒரு தனி இடம் வகிப்பது.

கலீல் கிப்ரான் தலைவராகவும் நெய்மி செயலாளராகவும் இருந்து மற்ற 8 எழுத்தாளர்களும் சேர்ந்து நியூயார்க் பென் லீக் என்று ஆரம்பித்து நடத்தியிருக்கிறார்கள். கலீல் கிப்ரான் மறைவுக்கும் பிறகு லெபனான் பெய்ரூட்டுக்கு திரும்பி வந்து தனது 98 ஆம் வயதில் நிமோனியா காய்ச்சலால் மறைகிறார் நெய்மி என்ற செய்திகள் ஆங்கில இலக்கியம் அறிந்த அனைவர்க்கும் தெரிந்திருக்கும்.

அன்புத் தம்பி குவெய்ட் பிரவீன்குமார் இந்த புத்தகத்தை ஒரு நாள் தருவித்து  இதைப் படித்துப் பாருங்கள்  அண்ணா, என்னால் 10 பக்கத்துக்கும் மேல் படிக்க முடியவில்லை என்றார். இதை மொழிபெயர்க்கும் நபரின் கருத்துகளைப் பார்த்துவிட்டு இதை நீங்கள் படிக்க வேண்டும் என வாங்கினேன் உங்களுக்காக என்கிறார் எனது புதல்வனைப்போன்ற எனது தியான வழி சீடர் பிரவீன்குமார் தங்கவேல்.

எளிதில் அனைவரும் படிக்க முடியா புத்தகம்தான். ஆங்கில அறிவை நன்கு வளர்த்திக் கொண்டால் மட்டுமே படிக்க முடிகிறது. உடன் இணையத்தில் வார்த்தைகளுக்கான பொருள் தேடலுடன் படித்து முடித்தேன். 191 பக்கம். சில பக்கங்களுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் தேவைப்படுமளவு வார்த்தைகளின் கனம். சாதாரணமாக லைட்டான புத்தகங்களை  சுமார் 60 லிருந்து 70 பக்கங்களுக்கும் மேல் படிக்க முடியும் என்னால் இந்தப்புத்தகத்தை படிக்க ஒரு பக்கத்துக்குக் கூட ஒரு மணி நேரம் எல்லாம் செலவளிக்க வேண்டி வந்தது.
Image result for the book of mirdad
இணையத்தில் பி.டி.எப் ஃபைல் மூலம் பதிவிறக்கம் செய்வார்க்கு 140 பக்கம் கிடைக்கிறது. நான் பதிவிறக்கமும் செய்து வைத்தேன்.யு.எஸ் டாலரில் 14. 95 , யு.கே பவுண்ட் 8. 99  724 ரூ என இந்திய ரூபாயில் கிடைக்கிறது.

ஷேக்ஸ்பியர் படிக்கும்போது எப்படி வார்த்தைகள் நம்மை அந்த பொருளுக்குள் செல்லவிடாமல் தடுக்குமோ அப்படி வார்த்தை வளம்.

ஆனால் இது ஆர்க் என்னும் மலைச் சிகரத்தில் இருக்கும் மடாலாயத்தில் வசித்துவரும் 9 அதாவது 8 சீடர்கள் அவர்களின் ஒரு குரு பற்றிய உரைவீச்சு வாழ்வின் முறை பற்றியும் அந்த குருவான மிடாட் தமது சீடர்களுக்காக பேசிய பல்வேறுபட்ட போதனைகளின் பதிவும் இடம்பெற்றிருக்கிறது.

சமாதம் என்னும் சீடர்களில் ஒரு சீனியர் மிடாட் என்னும் குருவாகிய இவருக்கு நிறைய தொல்லைகளும் தருகிறார் என்றாலும் மிடாட் குருவாக தமது பொலிவை சீடர்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்கி இருக்கிறார். மிடாட் இந்த ஆர்க் என்னும் மலைக்கோவிலுக்கு ஒரு வேலைக்காரராகவே அந்த ஒன்பது நபருள் ஒருவராக கருதப்பட்டு பணியாளராக இருந்தவர் எப்படி குருவாக விளங்குகிறார் என்பதும், அங்குள்ள பசுவை அடிமாட்டுக்கு கொண்டு செல்வதை எப்படி குணப்படுத்துகிறார், எப்படி இருள் பள்ளத்தாக்கில் கொண்டு சமாதாம் ஆட்களால் அடைத்து வரப்பட்டவர் திரும்பி வந்து மலைப்பிரசங்கம் செய்கிறார் என்பதும், அந்த நாட்டின் மன்னர் ஆணையுடன் இவர் எப்படி கைகால்கள் இரும்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டு அந்த மலையை விட்டு கடத்திச் செல்லப்படுகிறார் என்பதும் அதிலிருந்து அந்த மன்னரே திரும்பி எப்படி இவரை அந்த மலையின் குருவாக தலைவராக ஏற்று அங்கீகரித்து சமாதமை கீழ் இறக்குகிறார்கள் என்பதெல்லாம் கதை...ஆனால் மிடாட் மூலம் உலகுக்கு என்ன என்ன சேதிகள் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாரம்.

கடவுள் மறுப்பு, கம்யூனிச சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு நின்று இந்த உலகளாவிய சித்தாந்த முறைகளை வடிவைமைத்துள்ளார்.

பைபிளில் வரும் நோவா, ஆதாம் ஏவாள், ஆதாமிலிருந்து அவன் எலும்பிலிருந்து உருவான ஏவாள் அவர்களின் மகன் கெயின் அடுத்து பிறந்த ஏபிளைக் கொலை செய்வது போன்றவையும் இருக்கிறது...ஓர் உயிரிலிருந்துதான் இந்த உலகின் அனைத்து மனிதர்களும் உண்டானதாக இருக்கிறது டார்வின்ஸ் தியரியான குரங்கிலிருந்து மனிதம் தோன்றியது என்ற அறிவியல் கருத்துக்கு முரணானதாகவே இருந்த போதிலும்

இதில் சொல்லப்பட்டிருக்கும் மனித தத்துவம் யாவும் நிகரற்ற நிலையில் சொல்லப்பட்டு விளங்குகிறது.

நேர்க்கோட்டின் சகோதரம் தாம் கோணல் கோடு என்பதும், காட்டில் உயர்ந்து நெடிய வளர்ந்த மரங்கள் மட்டுமே இல்லை காடு என்பது புதர்களும்,கொடிகளும், செடிகளும், நிரம்பியதுதான் என்பது...

எல்லா சினைமுட்டையும் விந்தணுவும் சேர்ந்துதான் யாவும் தோன்றின என்றபோதிலும் ஒவ்வொன்றிற்கும் உண்டான உணவு அதன் செரிமான அளவு அதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்றவற்றில் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டே இருக்கின்றன. எனவே உலகில் ஒரு உயிர் போல மற்றது இல்லை என்பது.
Image result for mikhail naimy
கடவுளை மேக்ரோ காட், மைக்ரோ காட் என்பது, 35 ஆவது அத்தியாயம் நூலின் மகுடமாக விளங்குகிறது. உண்மைக்கு நிரூபணம் அவசியமில்லை என்பது எல்லாவற்றுக்குமே உண்மையும் நேரமையுமே அடிப்படையாக இருக்கிறது என்று நிறுவுவது..

களைகளை நீங்கள் வெறுக்க வேண்டாம் ஏனெனில் அவை உரமாகவும் மாறும் என்பதால்

ஆக்கபூர்வமான வார்த்தையே அன்பு அந்த அன்பு என்பது புரிதல் வழியே ஆரம்பிக்கிறது

உலகில் எல்லாம் உள்ள அனைவருமே ஒருமையிலிருந்து பார்க்கப்படுதலே  சிறந்த தத்துவம். இப்படி எல்லாம் பேசுகிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment