வீரக்கல் புதூர் பி.என்.பட்டி பேரூராட்சிகளின் குடி நீர்க் கட்டண அநியாய உயர்வு: கவிஞர் தணிகை
வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சிகள் ஊராட்சி மன்றங்களில் மிகவும் பெரிய மற்றும் வசூலில் பெரும் தொகை வசூலிக்க வாய்ப்புள்ளவை. இங்கு கெம்ப்ளாஸ்ட் சன்மார், மால்கோ எனர்ஜி (ஸ்டெரிலைட்) போன்ற பெரு நிறுவனங்களும் உள்ளன தங்கள் விருப்பப் படி காவிரியிலிருந்து பெருவாரியான நீரை உறிஞ்சியபடி. அதே நேரத்தில் தனியார் குடிநீர் பாட்டிலிங் கம்பெனிகளும் இருக்கின்றன.
வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டியின் விளைநிலங்கள் நிலத்தடி நீர் காற்று, யாவும் இந்த இரசாயனக் கம்பெனிகளின் கழிவால் கெட்டுப்போய் சுமார் 59 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதற்காக இழப்பீடாக இந்தக் கம்பெனிகளிடமிருந்துஒரு குறிப்பிட்ட காலன் கொள்ளளவில் குடி நீரை வாங்கி குடி மக்களுக்கு விநியோகிப்பதாக சொல்லி வந்த காலம் மலையேறிவிட
பராமரிப்புச் செலவுக்கென குடி நீர்க் கட்டணம் மிகவும் குறைவாக எனச் சொல்லி வாங்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2018 வரை மாதக் குடி நீர்க் கட்டணாமாக ரூபாய் 50 வசூலிக்கப்பட்டது.
இடையே கட்சி, உறவு, வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபடுத்தி குடிநீர் விநியோகமும் தெரிந்தும் தெரியாமலும் தவறுகளுடன் நடந்து வந்தன ஏன் சொல்ல்ப்போனால் அலுவலக முறைப்படி இல்லாமல் திருட்டு இணைப்புகளிலும் குடி நீர் திருடப்பட்டன.
அனைவர் வீடுகளிலும் நிலத்தடி தொட்டி கிணறுகள் போலவும், வீடுகள் மேல் பெரிய தொட்டிகளும் இடம் பெற ஆரம்பித்து அதற்கு வேறு ஒரு ஆதாரமும் இல்லாமல் காவிரி நீர் மட்டுமே குடிக்க, துவைக்க, தூய்மை செய்து கொள்ள, குளிக்க போன்ற அனைத்து அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வர வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் இங்கு மாதமொன்றுக்கு பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு குடி நீர் வீட்டு இணைப்பு மற்றும் தெரு பொதுக் குழாய்கள் மூலமும் விநியோகிக்கப்பட்டு வந்தன
இந்நிலையில் திடீரென கடந்த அக்டோபர் முதல் குடி நீர் கட்டணம் 220 ரூபாய் வீரக்கல் புதூர் ஊராட்சி மன்றத்திலும் ரூபாய் 200 பி.என்.பட்டி பேரூராட்சியிலும் வசூலிக்கப்படுவதுடன் முன் எப்போதும் கண்டிராத வகையில் தாமதக் கட்டணமும் ரூ. 20 முதல் 150 வரை வசூலிக்கப்பட்டும் வருகின்றன.
சரியாக குடி நீர் வாராத குடி நீர் இணைப்புகளுக்கு சீராக்கும் பந்து வால்வுகள் பொருத்தப்பட்டு குடி நீர் சமமாக சீராக வரும் என்றும் பஞ்சாயத்தாரல் சொல்லி ஆறுதல் படுத்தப்பட்டன.
இத்தனைக்கும் காரணம் பெரும்பாலான வீடுகளில் மின்சார மோட்டாரை வைத்து அவரவர் வீட்டுக்கு தேவைக்கதிகமான நீரை இழுத்து வைத்து அவரவருடைய வீட்டின் நீர்த் தொட்டிகளில் எவர் வாழ்ந்தால் என்ன இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற மக்களின் மனப் பாங்கே காரணமாய் விளங்க மின்சார இணைப்பு இல்லா காலக்கட்டத்தில் குடிநீர் சுமாராக அனைவர்க்குமே வராத இணைப்புகளுக்கும் சிறிது அளவு எட்டிப் பார்க்கவே செய்தது.
யாவற்றையும் அறிந்த அரசு நிர்வாகம் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மீட்டர் வைத்து நீர் எடுக்கும் அளவை கணக்கெடுத்து பில் அல்லது கட்டணம் வசூலிப்பதற்கும் மாறாக இந்த பால் வால்வுகளை வைத்த்ப் பார்த்தது. அதிலும் குடி நீர் வராத இடங்களுக்கு மட்டுமே வைத்துள்ளது. சிலர் மறுபடியும் பேருராட்சிக்கும் தெரியாமல் அந்த பந்தை எடுத்து விட்டு மறுபடியும் குழாய்களை இணைத்து குடிநீர் எடுத்து வருகின்றனர் என்பதும் செய்தி
இந்நிலையில் அலுவலக நிர்வாகம் இப்படி ஒரேயடியாக ஏழை எளியார்க்கும் இருப்பார்க்கும் இல்லார்க்கும் ஒரே கட்டணமான 220 மற்றும் 200 என மாதமொன்றுக்கு வசூலிப்பதை நூற்றுக்கு 90 சதம் பேர் விரும்பா நிலையில் அதை எதிர்த்து போராட்டங்களும் நடைபெறுவதாக கம்ப்ய்யூனிஸ்ட் கட்சி சார்பாக விளக்க துண்டறிக்கைகள் விழிப்புணர்வூட்டி போராடி வெல்ல அழைப்பு விடுத்தன. ஆனால் வசூல் செய்வது தொடர்ந்தே வருகிறது மேலும் கட்டணத்தை மாதா மாதம் தவறாமல் அலுவலகம் வந்து கட்டியே தீரவேண்டும் என நிர்பந்திக்கின்றன. இல்லையேல் இணைப்பைத் துண்டிப்போம் எனவும் பயமுறுத்தி வருகின்றன.
கோடை வந்து விட்டது. அணையில் சுமார் 65 அடி நீரே இருப்பு உள்ளது எப்படி கோடையை சமாளிக்குமோ குடி நீரை இல்லாமல் வறட்சியில் நா வறண்டு போகுமோ என்ற நிலையில் உள்ளது மேட்டூர் காவிரிக்கரையில் இருக்கும் ஊர்கள்...
அதன் ஏழை எளிய மக்கள்
இதற்காக முதல்வர், ஆட்சியர், நுகர்வோர் நீதிமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றில் கோரிக்கை விடுக்க மக்கள் தயாராகி வருகிறார்கள். நூறு ரூபாய் என்றாலும் நியாயமாக இருக்கும் ஒரேயடியாக 220 ரூபாய் என்பது ஏற்க முடியாததுதானே ஏழை எளியார்க்கு. இதன் அருகாமை ஊர்களில் குடி நீர் வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும் கட்டணம் 70 ரூ என்றிருக்கும்போது நீரை கையாள் அள்ளியும், துணி துவைத்தும் ஆறுகளில் குளித்து முடித்தும் வந்து கொண்டிருந்த உரிமையுடைய மக்களுக்கு இன்று இந்தநிலை இனி எந்த நிலையோ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment