Thursday, February 21, 2019

மேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை

மேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை



பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் இந்த ஆண்டு தேசிய மாணவர் சேவைத் திட்டத்தின் கீழ் மேச்சேரி ஒன்றியம் நரியனூர் இது மல்லி குந்தம் அருகே உள்ளது.... மேச்சேரியிலிருந்து பென்னாகரம் சாலையில் சென்று மல்லிகுந்தம் பிரிவு சாலை வழியே மல்லி குந்தத்தை அடுத்து இந்த ஊர் உள்ளது. சிறிய கிராமம்தான்.

இந்த இடைநிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரி மாணாவர் சேவைத் திட்ட முகாமை 14 பிப்ரவரி முதல் 20 பிப்ரவரி வரை நடத்தியது

அதில் 18 பிப்ரவரியின் திங்கள் அன்று எமது விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் நடத்தியது
Image may contain: 7 people, crowd
கலைக்கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில் எமது கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பேபிஜான் அனுமதியின் பேரில் பொது பல் சுகாதாரத்துறையின் தலைவர் என் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் பரத் தலைமையில் 6 மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் 150 பள்ளி மாணவ மணவியர்க்கும் சுமார் 150 கல்லூரி இரண்டாம் ஆண்டு தேசிய சேவை மாணவ மாணவியர்க்கும், திருவிழா இருந்த போதும் அதையும் பொருட்பட்டுத்தாமல் முகாமுக்கு வந்திருந்த பொது மக்களுக்கும் பல் பரிசோதனை செய்தனர்.
 முகாம் ஒருங்கிணைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்க்கும் விழிப்புணர்வு உரை வீச்சை வழங்கினேன். பல் மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை மருத்துவர்கள் வழங்கினார்கள்

பெரியார் பல்கலையின் கணிதவியல் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் ஒருவரும்  அன்று எதிர்பாராமல் வந்திருந்து முகாமை சிறப்பித்தார்.
Image may contain: 1 person, sitting and table
முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் முதலில் ஏனோதானோ என்றே இருந்தார்கள். முகாமின் உரையை துணை நிலை இராணுவ வீரர்களின் மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்த நான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அதுவும் கலாம் அவர்களின் தொடர்பில் இருந்தவன் என்று தெரிந்தவுடன் கை தட்டி ஆரவாரம் செய்து உரையை எந்தவித இடைஞ்சலும் செய்யாமல் கவனித்துக் கேட்டனர். எனக்கு நான் பேசியதில் , அதுவும் எதிர்பாராமல் பேசியதில் பெரும் திருப்தி. எனக்குத் திருப்தி வந்தது என்றாலே அன்று மிக அருமையாக எனது உரை நேர்ந்தியாக இருந்திருக்கிறது என்றே பொருள்.
Image may contain: 3 people, people standing and indoor
செல்லுமிடம் எல்லாம் எனது கருத்து விதைகளை தூவி வருவதோடு மட்டுமல்லாமல் எமது பல் மருத்துவக் கல்லூரியின் சேவையை விரித்துரைத்து அனைவரையும் பகிர்ந்து கொள்ள வேண்டிக் கொண்டேன்.அனைவர்க்கும் பயனுடைய அரிய நிகழ்வாய் அரிய நாட்களுள் ஒன்றாக அது அமைந்திருந்தது.
Image may contain: 13 people, including Panneerselvan Athiba, people sitting
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment