வேதாச்சலம் மறைந்த சேதி கேட்டேன்: கவிஞர் தணிகை
கடவுள் , பணம் இரண்டும் மனித உயிர்க்கு மட்டுமே தேவைப்படுவதாய் இருக்கிறது.
கொண்டலாம்பட்டி வரை செல்லும் நகரப் பேருந்தில் அந்த பெரிய கறுப்பு பெரிய பேக் ஆதரவற்று கிடக்க அதை வேறு இரண்டு பேர் எடுத்துச் செல்ல முயல வேதாச்சலம் அதைப் பார்த்து எடுத்து அதைப் பிரித்துப் பார்த்தார். எல்லாம் அவரது ஊருக்கருகே உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவரது பல் வைத்தியத்துக்கு உதவும் கருவிப் பொருட்களாகவே இருந்தது.
அடுத்த நாள் கல்லூரிக்குத் தேடி வந்து பையை ஒப்படைத்தார். அந்தப் பையே ரூபாய் 500 வரை இருக்கலாம். அதில் உள்ள பொருட்கள் மதிப்பிட்டால் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதுவும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு என அந்தப் பொருட்களைப் பார்க்கும்போதே தெரிய வந்தது.
பைபை ஒப்படைத்தார் பொது உறவு அலுவலரிடம். அப்போது கல்லூரியின் முதல்வரும் வரவே அவரைப் பாராட்டினார் கை குலுக்கி.
அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என மறுபடியும் வந்து பாருங்கள் என பொது உறவு அலுவலர் கேட்டுக் கொண்டார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார், எனக்கு இந்தப் பை உரியவரிடம் போய் சேர்ந்தால் அதுவே போதும் என்றார் வேதாச்சலம் .
வேதாச்சலம் சுப்ரமணி அதுதான் அவரின் முழுப்பேர், அந்தக் கல்லூரியின் அருகே இருக்கும் ஒரு பக்கத்துக் கிராமத்தின் முக்கிய புள்ளி. அது மட்டுமல்லாமல் அந்த ஊரின் மாரியம்மன் கோவிலின் அர்ச்சகர். அவர் அம்மனுக்கு பூஜை முடித்து திருநீர் கொடுக்கும்போது கை நடுங்கும் எனப் பார்த்தவர்கள் சொல்வதுண்டு.
எல்லாம் தமிழக அரசின் நீண்டகால டாஸ்மாக் கைங்கரியம்.
அவருக்கு அந்த ஒரு பழக்கம் மட்டும் இல்லையெனில் அவர் மிகவும் நல்ல மனிதர்.
மறு நாள் பொது உறவு அலுவலர் மாணவர் தலைவரை அழைத்து வாட்ஸ் ஆப்பில் செய்தியை புகைப்படத்துடன் உலவ விட முதலாண்டு மாணவர் அந்தப் பைக்கு உரியவர் என வந்து வாங்கிச் செல்ல வந்து சேர்ந்தார். அவர் தினமும் சேலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர் விடுதியில் தங்கி வருவார் அல்ல.
அவரிடம் இந்த நல்ல மனிதருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ன மனமுவந்து கொடுக்க விருக்கிறீர் எனக் கேட்க அவரோ தம்மிடம் கொடுக்க நூறு ரூபாய் உள்ளது அதை நாம் அவருக்கு உரிய பரிசாக வழங்கலாம் என ஒப்படைத்தார் பையை பெற்றுச் சென்றார்.
அந்த நூறு ரூபாயை ஒப்படைக்க அவருக்கு மறுபடியும் செல்பேசி வழியே தகவல் தரப்பட்டது. அப்போதும் அதை அவர் ஏற்றுக் கொள்வதாயில்லை. வேண்டாம் சார் விட்டு விடுங்கள் என்றார். இல்லை இல்லை அந்த மாணவரிடம் இருந்து வாங்கி விட்டோம் அது உங்களுக்கு சேரவேண்டியது நீங்கள் வந்து கையெழுத்துச் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் அதுவே எங்களது கல்லூரி அலுவலக நடைமுறையாக உள்ளது என தெரிவிக்க பார்க்கலாம் சார் என பேச்சை முடித்துக் கொண்டார்.
அவருடைய ஊரிலிருந்து வரும் மாரியம்மாள் அலுவலக உதவியாளர் வேண்டாம் விடுங்கள் சார் அதைக் கொடுத்தாலும் அவர் உடனே அரசு மதுபானக்கடைக்கே கொடுத்துவிடுவார் என்று சொல்லி விட்டார். மேலும் அதுபற்றி அவரின் குடும்பம் அறிந்தாலும் அதை ஏற்க மாட்டார்கள். கேவலமாகப் பேசுவார்கள் என்றார். பெரியவரின் ஒரே ஊராக இருந்தாலும் தூரத்தில் இருவரின் வீடுகளும் இருப்பதாலும் அவரிடம் கொடுத்து அதை சேர்க்கச் சொல்வதில் முறையில்லை என்பதாலும் அவரிடம் கொடுத்தனுப்பவும் அலுவலக நடைமுறை இடம் கொடுக்க வில்லை.
ஒரு நாள் வழக்கம் போல பொது உறவு அலுவலர் ஒரு வழக்கமான முகாமுக்கு வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு முகாம் சென்றவந்த பின் காசாளர் கேட்டார் அந்தப் பெரியவர் அவருக்கு சுமார் 70 வயது இருக்கும். உங்களைப் பார்க்க வந்து காத்திருந்தார். என்றார்
அடடா, என்னைப் பார்க்கவில்லையே, சென்று விட்டார் போல் இருக்கிறதே..பார்த்திருந்தால் கொடுத்திருக்கலாமே..அந்த நூறு ரூபாயை என்று பொது உறவு அலுவலர் அங்கலாய்த்துக் கொண்டார்.
இரண்டு நாள் மட்டுமே சென்றது....அன்று உங்களைப் பார்க்க வந்தாரே உஙக்ளைப் பார்த்தாரா சார், அவர் இறந்து விட்டார் என்றார்கள். அவர் பார்க்க வில்லையே,,,
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
P.S: Name only changed in this real story.

No comments:
Post a Comment