...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை
நாடு தேர்தலை நோக்கி மறுபடியும் அடி எடுத்து வைக்கிறது...வீட்டு வாசலுக்கு வாக்கை சரி பார்க்கும் ஆசிரியர் காலை வந்து சென்றார்.பிரதமர் மோடி சுமார் 800 ஐ.ஏ.எஸ்களை நாடு தழுவிய அளவில் சுமார் 117 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி அதுவும் ஆகஸ்ட் 15க்குள் அனுப்பி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய இருப்பதாக செய்திகள் வந்திறங்கியுள்ளன. எப்படி ஒரு மாதத்தில் இது போன்ற ஒரு பெரிய குறிக்கோளை நிறைவேற்றப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி...தேர்தல் நோக்கிய அறிகுறி...கேலிக்குறியும் கூட.
மேலும் மத்திய மாநிலத் தேர்தலை ஒரு சேர நடத்துவது பற்றியும் கருத்துகள் மாநிலம் வாரியாக முதல்வர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கப்படுகின்றன. இச்சூழலில் அவரவர்களும் அவர்களுக்கு சாதகமான பதிலை வேண்டும் வேண்டாம் எனத் தெரிவித்து வருவதாக நிலை .
சுமார் 70 வயதுக்கும் மேலான எனது நண்பர் இது போல மாநில மத்தியத் தேர்தல்கள் ஒரு சேர நடத்தப்பட்ட காலம் இருந்ததுதான் என்கிறார். மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இது நடத்த முடியாதது என்றெல்லாம் சொல்வதில் பொருள் இல்லை. அறிவியல் முன்னேற்றம் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இன்னும் வளர்ந்தபடியே உள்ளது.
தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் ஒரு சேர அப்படி மாநில மத்தியத் தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை, அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் நடத்தலாம் என்கிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரட்டும். தேர்தலை அப்படியே நடத்தவும் செய்யட்டும் அதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மோடி அரசு வாக்கு எந்திரங்களைத் தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் கறைகளை எல்லாம் கழுவி தூய்மையாக துடைத்து இந்த தேர்தலை நடத்த வேண்டும்
நாடு முழுதும் ஔரஙக சீப் ஆட்சி புரிந்தது போல ஒரே ஆட்சி மோடி ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது இந்த ஆளும் கட்சி அரசுக்கு என்ற குற்றச் சாட்டுகளும் இல்லாமல் இல்லை அவற்றிடமிருந்து எல்லாம் வெளி வந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுவே ஒரு ஜன நாயக ஆட்சிக்கு ஒர் ஜனநாயக நாட்டுக்கு அழகு.
ஆனால் கட்சிகள், வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடாது. அரசே வேட்பாளர்களின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறும் வேட்பாளர்களை கட்சிகளை தேர்தல் களத்தில் இருந்தே தூக்கி விசிறி எறிந்து விட உறுதியான நடவடிக்கை வேண்டும்.
அடுத்து ஊழல், இலஞ்சம், வருவாய்க்கு மீறிய சொத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் பதவியிலிருப்பார், அவர்கள் உறவுகள், அவர்கள் பினாமிகள் என்னும் பார்வையில் போர்வையில் எவராவது இருந்தாலும் நிரூபிக்கப்பட்டால் அவர்களை 'திரும்ப அழைக்கும் உரிமையும்" மக்களின் வாக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதெல்லாம் செய்ய முடியாததல்ல. செய்யும் அக்கறை உடையார் மட்டுமே நாடாளும் அருகதையுள்ள பதவிக்கே வர வேண்டும். இராதா கிருஷ்ணன் நகர் நடந்த தேர்தல், மற்றும் இடைத்தேர்தல் , பொதுத் தேர்தல்கள் போன்றவற்றில் செலவிடும் சட்டத்துக்கு புறம்பான தொகையை மக்களிடம் திருப்பி விடும் தொகையை தடுத்து நிறுத்துமளவு தேர்தல் ஆணையத்துக்கு வசதி வாய்ப்புகளோ சட்ட அங்கீகாரமோ இல்லை என்கிறார்கள் தேர்தல் முன்னால், இந்நாள் ஆணையர்கள் அவை அவர்களுக்கு இருக்க சட்ட வரைவுகள் கொண்டு வரப்படல் அவசியம்
ஆக ஒரு சேர தேர்தல் நடக்கட்டும், அது சாதி மதமாச்சர்யங்கள் கடந்து மக்களுக்கு சேவை செய்த செய்யும் ஆட்சியாக நல்ல வேட்பாளர்களைக் கொண்டு மலரட்டும்....
ஆனால் இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்?
பார்ப்போம் இனி வரும் எதிர்காலத்தை மேல் மேலான சுவையான செய்திகளுடன்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment