Tuesday, July 31, 2018

ஒழுக்காமிலார் நாட்டில் சுதந்திரம்: கவிஞர் தணிகை

ஒழுக்காமிலார் நாட்டில் சுதந்திரம்: கவிஞர் தணிகை

Image result for there is no independence with out discipline


ஒரு கல்லூரி மாணவன் தனது விடுமுறை நாட்களில், மண் கல் சுமந்து, கம்பி கட்டும் வேலை எல்லாம் செய்து பத்தாயிரத்துக்கும் மேல் சேர்த்து வைத்து நண்பர்கள் வைத்திருப்பது போல தாமும் வைத்துக் கொள்ள ரூபாய் பதினோராயிரம் போட்டு செல்பேசி டச் ஸ்க்ரீன் தான் வாங்கிக் கொண்டான். அவன் செல்போன் வாங்கியது தவறுதான். அது வேறு.

அதை வாங்கிய புதிதிலேயே பேருந்தில் கால்சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தது காணாமல் போக விழித்தபடி இருக்கிறான்.

7 மாதக் குழந்தையை  என்னவோ செய்கிறார்கள் என்று செய்தி, ஆடு மாடுகளையும் விட்டு விடாமல்....

இன்று இன்னொரு நாட்டில் முகமதிய இனத்து ஒரு தந்தை தனது மகளின் தோழியை 11 வயது சிறு பெண்ணை மணந்து கொண்டதாகவும், பூப்படையும் வரை பொறுத்து காத்திருக்கப்போவதாகவும்...அந்தப் பெண்ணும் தமக்கு தமது சினேகிதியின் தந்தைக்கு ஏற்கெனவே இரு மனைவிகள் இருப்பது தெரியும் என்றும் இவரையே மணக்க எனக்குப் பிடிக்கிறாது என்றும் சொல்கிறாள். இவளது தோழியின் வயது 14.  அதுபற்றி அந்த மலேசிய நாட்டின் மந்திரி சொல்கிறார்: ஓரினப்புணர்ச்சியும், ஒரு பெற்றோர் என்பதுமே இங்குள்ள பிரச்சனைகள். மற்றபடி நாட்டின் சட்ட திட்டங்களிலேயே இப்படி கைக்குழந்தையைக் கூட மணம் செய்து கொள்ளும் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறார். அது மட்டுமல்ல அவர்கள் மதத்தில் இதெல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
Image result for there is no independence with out discipline
பால்ய விவாகத்தையே வேர் கெல்லி வீசி எறிந்த தேசம் இது. இப்போது இந்த தேசத்தில் சிறுமியர் பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலும் உச்சி எல்லாம் சூடு பறக்கிறது...

ஒரு முதியவர் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கிறார் என்ற உடன் உடனே போக்குவரத்து இலக்காக்கப்படுகிறது. நாலைந்து பேருந்துகள் சேர்ந்து ஒரு எஸ்கார்ட் போலீஸ் உடன் வர சென்று ஒரிடத்திலிருந்து மற்றொரு இடம் சேர்க்கிறது
Related image

இடையில் ஒரு மனிதன் பேருந்தை நிறுத்தச் சொல்லிக் கேட்கிறார். சூழ்நிலை மற்றும் பல காரணம் கருதி பேருந்தை ஓட்டுனர் நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல கையைக் காட்டி நிறுத்தக் கேட்ட அந்த மனிதன் உடனே கீழ் இருந்து  கடிக்க வரும் நாயை நாம் அடிப்பது போல பாசாங்கு செய்து கல் எடுப்பது போல அந்த மனிதனும் கல்லை கீழே குனிந்து எடுத்து அடித்து விடுவதாக செய்கிறான்.. தனி மனிதராக இருந்ததால் இத்தோடு போயிற்று. இதுவே சிலர் அல்லது பலர் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிறைய நடைமுறைச் சிக்கல் தோன்றியிருக்கும் அல்லது இந்த ஓட்டுனரே கூட நிறுத்தி இருக்கவும் வாய்ப்புண்டு.

தமக்குப் பின் யார் என்று சுட்டிக்காட்டாத தலைமை, இந்த நாட்டில் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் பரவலாகி விட்டது... எவர் பார்த்தாலும் ரோட்டில் எச்சில் உமிழ்கிறார், அதிகாலை வேளையில்கூட பொது இடங்களில் ஊதித் தள்ளுகிறார். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டு விட்டு விலங்குகளை விட கேவலமாக நடந்து செல்கிறார்

இது அனைவரும் அனத்து உயிரும் வாழும் பூமி என்பதையே மறந்து செல்கிறார். சாலையில் பகலானாலும் சாலை விளக்கு எரிந்தபடியே இருக்கிறது..அனைவரும் போகிறார் வருகிறார் அதை எவருக்குமே நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் வர மறுக்கிறது...ஏன் அது நம் வேலையல்ல என்பதாலும், அதற்கென்று ஒரு ஆள் இருக்கிறார் என்பதாலும், அது நம் வீடல்லவே, நமதல்லவே என்பதாலும்...

குடிநீர் பாசன நீர் பயன்பாடும் விரயங்களும் சொல்லி மாளாது நீர் கொட்றி என கர்நாடகாவை மத்திய அரசை நோண்டி நோண்டிக் கொண்டிருந்த அதே மாநில தமிழக அரசு வீணாக கடலில் சென்று கலந்த பல கோடி கன அடி நீரை வீணாவதிலிருந்து தடுத்து நிறுத்த சேமித்து வைக்க எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய வெட்கப்பட வேண்டிய உண்மை.
Related image


எங்கு பார்த்தாலும் பொய், திருட்டு, வஞ்சகம், வஞ்சம், சூது, கொள்ளை என மனிதம் தறிகெட்டுப் போன நாட்டில் மதம், சாதி இன்னபிற பிரிவினைகள்...

எவரோ செய்யும் தவறுகள், புரிதல் இல்லா தவறுகள், அறிவுட் தெளிவுக்கு வழிகாட்டா அரசுகள்...உயிர்ப்பலிகள்...

ஒழுக்கமிலா(ர்) நாட்டில் மற்றுமொரு சுதந்தர நாள். ஒழுக்கமிலார் நாட்டில் சுதந்திரம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: