மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை
அப்பாடா ! இந்த நீர் நிரம்பிய காட்சியை பார்க்க எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தவம்...இயற்கை மனிதர்களின் மகத்தான கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது. மழையாகப் பொழிந்து. குமாரசாமி இனி நம்மைக் கேட்க மாட்டார்களே காவிரி நீருக்காக என அழுததாகக் கேள்வி.
உடனே காலை சுமார் 7.50க்கு நில நடுக்கம், தர்மபுரி, பென்னாகரம்,மேட்டூர், அம்மாப்பேட்டை, தாரமங்களம், நங்கவள்ளி போன்ற பகுதிகளில். வழக்கம்போல சேலம் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலநடுக்க அளவை கருவி பணி செய்யவில்லை...
இயற்கை ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் சொல்வது போல அணையின் நீர்த்தேக்கத்திற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்புள்ளதாகவே இச் செயல் தோன்றுகிறது. ஏன் எனில் பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் வறண்டு கிடந்த பூமி மேல் 93.47 டி எம் சி...அதாவது கன அடி..ஃக்யூபிக் மெட்ரிக் டன்...இரண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவுக்கு இந்த மேட்டூர் அணை இடம் இருக்குமாம் நீரைத் தேக்கி வைக்க...
நாட்டின் மிக முக்கியமான அணைகளில் பிரதானமானது.
இவ்வளவு நீரின் அழுத்தம் உருவானதால் நில நடுக்கம் தோன்றியிருக்கலாம்.
ஜெ நிரந்தரமாக கண்மூட, ஓ.பி.எஸ் பதவி விலக, சசிகலா கர்நாடகா சிறை புக, எடப்பாடி பழனிசாமி, இப்போது எடப்பாடியார் தினகரனின் மிரட்டலுக்கு சாயாமல் அவரை வெளியனுப்பி ஆட்சியை முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, ஆண்டுக்கு மேல் ஓ.பி.எஸ் உருவத்தை சிறிதாக்கி போஸ்டரில் தாம் பெரிதாக வளர்ந்து ...1934ல் கட்டிய அணையை 84 ஆண்டுகளில் ஒரு முதல்வர் அணையை திறந்து வைத்தார் என்னும் ஒரு பெயரைப் பதித்துக்க் கொண்டார்....நீர் இப்போது தேவையில்லை என்று ஒரு குரலும், இல்லை இல்லை குறுவை சம்பா பயிற்களுக்குத் தேவைதான் என்றும் கல்லணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு என்ற செய்திகளும் முரண்பட்டாலும் செய்திகளாகின்றன.
மொத்தத்தில் குடி நீர், கால்நடைபருக நீர், பாசனத்திற்கான நீர் எல்லாப் பஞ்சமும் போக இயற்கை அன்னை வழி விட்டிருக்கிறாள். காவிரி கரை புரண்டு தாயின் மடி மேட்டூர் அணையில் சேர்ந்திருக்கிறாள். யோவ் இது தமிழ் நதி அய்யா, இப்போது நிறுத்துங்களேன் பார்ப்போம்...
அட இப்போதும் கூட எங்க பஞ்சாயத்து: வீரக்கல் புதூர் எனப்படும் ஊராட்சி ஒன்றியத்தில் ஆறு அளவு நீர் இருந்தாலும் நாயால் நக்கி நக்கியே குடிக்க முடியும் என்ற பழமொழிக்கேற்ப எங்கள் வீதியில் குடிநீரை மிகவும் அளவாக போதாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் பாவிகள்...ஒரு பெண் குடிநீர் வேண்டி எங்கள் வீடு வந்து பிடித்துச் செல்லுமளவு...
இவனுங்களை திருத்தவே முடியாதய்யா...
பாலாஜி, பழனி இன்று நில நடுக்கம் வந்ததாம் இல்ல தெரியுமா?
அந்தப் பெண் சொல்கிறாள்: கேட் எல்லாம் ஆடியது என்று...
பவர் பழனி: சார் காத்து அடித்திருக்கும் ஆடியிருக்கும் சார்,
இல்ல பழனி அவங்க பக்கத்து வீட்டில் மேலே பரணில் வைத்திருந்த டம்ளர் எல்லாம் கீழே விழுந்ததாம் என்று சொல்கிறாரே...
பாலாஜி: அது பூனை உருட்டி விழுந்திருக்கும் சார்...
பழனியும் பாலாஜியும்: நாங்க கூட ஆடலான்னுதான் பார்க்கிறோம் பசங்க இன்னும் வரலை...கிரிக்கெட் பந்தை வைத்துக் கொண்டு..
கவலை இல்லாத மனிதர்கள்...எதற்கெடுத்தாலும் காமெடிதான்...
ஏன் எனில் சரியான படிப்பு கூட இன்று மின் வாரிய ஊழியராகிவிட்டார்கள் நிலம் அரசு கையகபடுத்தியதற்கு பதிலாக வாரிசு வேலை பெற்றதால்..
இப்போது மட்டுமல்ல...வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படும் முன்பே கூட இப்படித்தான் பேசுவார்கள்..நினைத்துக் கொண்டு மறுபடியும் உவந்து சிரிக்கலாம்.... அவ்வளவுதான் வாழ்க்கை...அடுத்த நொடியில் நில நடுக்கம் அதிகமாக கனமாக இருந்தால் நாம் இருக்கிறோமோ என்னவோ? எதற்கு சோகம்...
117 feet at 6. 30 pm on 21.07. 2018.
காவிரியை, அணையை சிறையிட்டு வைத்திருக்கிறார்கள்...இம்முறை மக்கள் அருகே சென்று பார்க்க முடியாது சுவர், கம்பி வேலி...பதினாறு கண்மாய் பாலம் பூட்டப்பட்டு மத்திய பாதுகாப்புப் படைக் காவலுடன்.எவரும் எப்படியும் காவிரி அருகே அணைப்பகுதியில் நீர் அருகே செல்ல முடியாத நிலை. எட்டி இருந்தே பார்க்குமளவுதான். அப்படி இருந்தபோதும் நீர் ஏற்று நிலையமருகே கடைசியில் பூட்டை தெரிந்தவர் என்றா திறந்து அந்த சிலரை மட்டும் அனுப்பினார் அந்த நபர்...தெரியவில்லை... சட்டம் இந்தையாவில் எப்போதும் அனைவர்க்கும் சமமாக இல்லை....தெரிந்தவர், சொந்தக்காரர், நணபர், அரசியல்வாதி, பணக்காரர் இவர்க்கெல்லாம் மாறுபாடும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம்..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment