Wednesday, May 9, 2018

உச்ச நீதி மன்றமா ஆளும் கட்சி நீதிமன்றமா? கவிஞர் தணிகை

உச்ச நீதி மன்றமா ஆளும் கட்சி நீதிமன்றமா? கவிஞர் தணிகை

Image result for supreme court of india

கடந்த காலத்தில் நிகழ்ந்து வரும் சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய ஆட்சித்தூண்களை கவனிக்காமல் மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கே தெரிந்திருக்கும் வரும் செய்தி யாவும் தற்போது ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றம் இயங்கி வருகிறது என்பதை எல்லா வழக்குகளிலுமே அவர்களுக்கு சாதகமான தீர்ப்புகளே கொடுத்திருக்கிறது என்பதையும்.

அதில் ஓரிரு நாள்  முன் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றியும் உச்சநீதி மன்றம் மே 14 அன்று வரை தள்ளி வைத்து அதன்பிறகே அது பற்றி தெரிவிக்கப்படும் என்ற ஒரு தேதி குறிப்பிட்டது கர்நாடகா தேர்தலை மையப்படுத்தி மே 12 தேர்தலுக்கும் பின் மே 15 ல் வாக்கு எண்ணிக்கை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு.

அமித் ஷா வழக்குகள் ஏதும் எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளி என நிலுவையில் இல்லை

கஃபீல் கான் என்னும் குழந்தைகள் நல மருத்துவரும் உத்தரப்பிரதேசத்தின் பிரதான மருத்துவமனையின் துணை நிலையில் இருந்தவரும், ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம் இல்லாததால் மாண்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சம்பவத்தில் நாட்டுக்கே பேருதவி புரிந்த இந்த மருத்துவரை தண்டித்து நீதி வழங்கியதும் அது பற்றி அவரது கடிதம் வெளியாகி அதன் பின் அவருக்கு பரோல் வழங்கப்பட்டதும்

கே.எம்.ஜோசப் என்னும் உத்தரகாண்ட் நீதிமன்றத்தின் தலமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கும் பதிலாக இவர் ஒரு வழக்கில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்தது தவறு எனத் தீர்ப்பளித்த காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு துணையாக செயல்பட்டார் என கருத்து கொண்டு நேரடியாக ஒரு  இந்து மல்ஹோத்ரா என்ற பெண் வழக்கறிஞரை அந்த  காலி இடத்தில் நியமித்து கொலிஜியம் என்னும் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும் அமைப்பின் கருத்தை தூக்கி எறிந்ததும்..

இந்த நாட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வழக்குகளை ஒதுக்கும் பிரச்சனையில் மற்ற 4 நீதிபதிகள் நேரடியாகவே போர்க்கொடி அதற்காக‌ தூக்கியதும்  காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக அவரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி அரசிடம் விண்ணப்பித்ததும் அதை மந்திரி நிராகரித்ததும்

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெ...எப்படி நீதிமன்றங்களை கையோள்வாரோ அதை விட மிக அதிகமாக மத்தியில் ஆளும் கட்சி அப்பட்டமாக நீதிமன்றத்தை தனது சார்பாக கையாண்டு வருகிறது இந்த நாட்டின் இழுக்கு.

சட்டம் பாராளுமன்றம், நீதி உச்ச நீதிமன்றம், நிர்வாகம் அரசு அலுவலகங்கள், இப்படி யாவுமே  ஆளும் கட்சியிடம் தஞ்சம் புகுந்ததை கண்கூடாக காணமுடிகிறது..

சிறந்த ஆளுமை இருக்கும்போது பாராளுமன்றம் புகழ் பெறும், சிறந்த நீதி இருக்கும்போது நீதிமன்றம் புகழ் பெறும், இப்போது பிரதமரின் பெரும் செல்வாக்கு யாவற்றையும் வீழ்த்தி இருக்கிறது என்பதை சமூக நோக்கர்கள் வெளிப்படையாகவே விவாதிக்கிறார்கள்...

நல்ல நிர்வாகம் இருந்தால் தேர்தல் கமிஷன் ,  CBI சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் யாவுமே சுதந்திரமாக செயல்பட்டால் அந்த நாடு நிறைய வெளிப்பாட்டுத் தன்மையுடன் நல்லாட்சிக்கு அடையாளமாய் விளங்கும். எப்போது இப்படி ஆளும் கட்சிக்கு, அரசாட்சிக்கு மண்டியிடும் அமைப்புகளாக மாறி விட்டது எதைக் காட்டுகிறது எனில் ஆட்சி முறையின் அவலத்தை அவர்களுக்கு ஒரு விதமான பயம் வந்துவிட்டதை, தம்மை யன்றி வேறு கருத்துடையார் முளை விடக்கூடாது என்பதையும்தான்

நீட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அட தேர்வு எழுதும்  முன் மாணவ மாணவியரின் காதில் எல்லாம் டார்ச் அடித்து பார்த்து இருக்கிறார்கள்... அதை ஊடகம் பார்த்துக் கொண்டு செய்தியாக்கியபடி சும்மா இருக்கிறது..

தமிழக அரசும் துணை போகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒழுக்கம் யோக்கியதை போன்றவற்றில் மிகச் சிறப்புடன் இருப்பதால், ஏதாவது சொல்லிவிட்டால், செயல்பட்டால் உடனே ரெய்ட் வந்து விடுமே அதனால் பார்த்துக் கொண்டே  ஒன்றும் செய்யாமல் காலத்தை கழித்தபடி இருக்கின்றன.

அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தை உச்சிக் குடுமி நீதிமன்ற என்றெல்லாம் சொல்வார்கள்...இந்தக் காலத்தில் அவற்றை பாவி நீதிமன்றம் என்றும் சொல்லலாம் காவி நீதி மன்றம் என்றும் சொல்லலாம்.

எண்ணிலடங்கா நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவற்றை கண்டு கொள்ளாத நீதிமன்றங்கள்...இப்போது கர்நாடகா செய்யும் அவமதிப்புக்கும் கண்டும் காணாமல் ஒத்துழைத்திருக்கின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment