Sunday, May 27, 2018

ஓர் போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

ஓர் போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை


Image result for tn police marching 18 at tuticorin

எங்கள் "பணம்" தானே
உங்கட்கு "எல்லாம்"
உங்கள் "பலம்" தானே
எங்கட்கு "எல்லாம்!"

FIRING ORDER

சுட உத்தரவு
கிடைத்தவுடன்
கற்ற வித்தையை
கருணையின்றி
காட்டி விடுகிறீர்

எங்கள் மீதே!

இழப்பது யார்?
உங்கள் குடும்பங்களேயல்லவா?
வருந்திய்ழுவது யார்?
உங்கள் தாய்களேயல்லவா?

நீங்காவலி நமக்கேயில்லையா?

தங்களை வேறு வழியின்றி
கவசத்துள் நுழைத்துக் கொண்ட‌
இளகியவரே

நீங்கள் கூட‌
சிந்திப்பதில்  தவறில்லை.

CEASFIRE
போர் நிறுத்தம்
நமக்குள் தேவை!

நாங்கள்
நியாயத்துக்காக‌
போராடுகிறோம்
Related image
நாங்கள் வைத்த  வேலைக்காரர்கள்

நியாயமென
உறுமிக் கொண்டு
எங்கள் தலை மீதே
கை வைக்க நேர்கையில்
அவ்வேலைக்காரரின்
கைக்கூலிகளா(ய்)
நீங்கள்
Image result for tn police marching 18 at tuticorin
எங்கள்
போராட்டத்தில்
வெற்றி பெற்றால்
அப்பயன் பகிர்வுகள்
உங்கள் குடும்பங்களுக்கில்லையா?

காக்கச் சொன்னால்
எவனோ ஒருவன்
தாக்கச் சொன்னானென‌
எங்களை தலையில், வாயில்
ஏன் நெஞ்சுக்கும் மேலாகவே
கழுத்து எலும்புக்கும் மேல்
எல்லாம் தானியங்கி எஸ் எல் ஆர்
துப்பாக்கியால் சுட்டு
எங்கள் உடலை மண்ணிற்காக‌
சாய்த்துவிடுகிறீர்.
Related image


இளகிய எங்கள் கசாப்புக்காரரே
காப்பு மனிதரே
நீங்களும் சிந்திப்பதில் தவறில்லை

நீங்கள்
நியமனத்தின் பக்கமா?
நியாயத்தின் பக்கமா?
நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

இதுவரை நியமனத்தின் பக்கமே
இருந்த நீங்கள்
நியாயத்தின் பக்கம் வந்தால் மட்டுமே
நீங்கள் மனிதர்.

இது ஆய்தமேந்த‌
அங்கீகாரம் பெற்ற‌
தங்கள் சகோதரர்க்கு
ஓர் போராட்டக்காரனின்
ஓலத் தூது!

‍‍‍‍‍===================================
கவிதைகள் இளகிய மனமே புகும்
ஒலி
வெற்றிடத்தில் பயணம் செய்வதில்லை
=======================================


2007 ல் போகிற போக்கில் என்ற சிறு கவிதைத்தொகுப்பில்
சு. தணிகை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍







No comments:

Post a Comment