Saturday, May 26, 2018

துயரத்தை எங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை?: கவிஞர் தணிகை

துயரத்தை எங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை?: கவிஞர் தணிகை


A general view shows Sterlite Industries Ltd's copper plant in Tuticorin, in the southern Indian state of Tamil Nadu April 5, 2013. Picture taken April 5, 2013. Sterlite Industries, a unit of London-based Vedanta Resources, which operates India's biggest copper smelter, which has been shut by authorities despite the firm denying its smelter was to blame for emissions in the area on March 23. Since opening in 1996, the plant has split the coastal city of Tuticorin between residents who say it is crucial for the local economy and farmers and fishermen who see it as a health hazard. Similar debates are playing out across India where disputes over safety, the environment and livelihoods overshadow the efforts of Asia's third-largest economy to industrialize.  To match INDIA-STERLITE/TOWN     REUTERS/Stringer (INDIA - Tags: ENVIRONMENT BUSINESS) - GM1E94912KX01


ஏப்ரல் 13 1919ல் ஜாலியன் வாலாபாக்கில் என்ன நடந்தது என சரித்திரத்தை நினைவு படுத்திக் கொள்ள தூத்துக்குடி சம்பவம் மே 22 2018 நடந்தேறி இருக்கிறது. மே 23லும் அதன் சாரலாக தூவானம் விட்ட பாடில்லை என மறுபடியும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்தக் கறுப்பு நாட்களை மக்கள் என்றுமே மறக்க முடியாது. மறக்கக் கூடாது.

ஒரு புறம் அரசின் பிரதிநிதியான புதிதாக அங்கே பணிக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் ஸ்டெரிலைட் ஆலைக்கு நீரும், மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது, இது அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் முன் நடவடிக்கை என்று சொன்ன அதே நேரத்தில் ஸ்டெரிலைட் முதலாளிகள் ஆலை எண் 1 ஏற்கெனவே பராமரிப்புக்கென மூடப்பட்டதுதான். அந்த ஆலையை கைவிடும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் சொல்லப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டி உள்ளது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி போன்றோர் அந்த ஆலையை 100 கோடி அபராதத் தொகையுடன் முன்பு நடத்திக் கொள்ள அனுமதித்தது போல மறுபடியும் நடத்திக் கொள்ள அனுமதிக்கலாம்...

ஏன் எனில் இந்தியாவின் நீதி பணக்கார நீதி.

ஒரு புறம் 10 மாணவர்களுக்கும் குறைவான 800க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படுடும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டிருக்கும் அதே நேரம் கிராமப்பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறந்து கொள்ளலாம் என்பதும் செய்தி. இதுதான் அரசின் நடவடிக்கை.

சசிபெருமாள் இறக்கும் வரை, கோவன் மதுவுக்கு எதிரான பாடல்களை இசைக்கும் வரை அதப்பற்றி எல்லாம் அரசு அவர்களை தண்டிக்கவே நினைத்தது...ஆனால் மக்கள் பொதுமக்கள், மகளிர் தங்கள் ஊரில் மதுக்கடைகளே வேண்டாம் என கடைகளை அடித்து நொறுக்கிய போதும் சட்டமும், நீதியும் அரசும் நீதிமன்றமும் மக்களுக்கு எதிரான நிர்வாகத்தை செய்ய தலைப்படுகின்றன என்னும்போது இது மக்களுக்கான அரசாக எப்படி கருத முடியும்?


மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயக முன்னணி, மார்க்ஸீய லெனினிஸ்ட்கள், அலல்து ,மாவோயிஸ்ட்கள் உள் புகுந்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி விட்டார்கள் இல்லையேல் இவ்வளவு சேதமிருக்காது என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

இன்னொரு கருத்து காவல்துறையே இப்படி இவர்கள் மேல் தாக்குதல் நடத்திட காரணம் காட்ட இது போன்ற நடவடிக்கைகளை அரங்கேற்றி காலுக்கும் மேல், நீர் பாய்ச்சி எச்சரிக்கை செய்யாமல், ரப்பர் குண்டுகளை வெடித்து எச்சரிக்கை செய்யாமல் தானியங்கி துப்பாக்கி வைத்து வேட்டையாடி இருக்கின்றன  என்றும் சொல்லப்படுகிற செய்திகள் இருக்கின்றன. முன்பெல்லாம் செய்தி என்றால் அதை நம்பலாம். உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கும். இப்போது செய்தி எல்லாக் கோணங்களிலும் மாறியபடியே இருக்கிறது எது உண்மை என்று உண்மையாகவே அறிய முடியாமல்..

எது எப்படி ஆனாலும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியும்?

100 நாளாக மக்கள் போராடி வரும்போதும் மக்கள் பிரதிநிதிகள், மந்திரிகள் அங்கு சென்று நிலையை பரிசீலித்து பிரச்சனையை முடித்து வைக்கவில்லை.

மாறாக இறந்தவர்க்கு ரூபாய் 10 இலட்சம் என்று மாநிலத் தலைநகரிலிருந்து அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த செம்பு ஆலையை மூடும் வரை இறந்தார் உடலைப் பெறுவதில்லை என்று சொன்ன அந்த இறந்தாரின் குடும்பத்துக்கு என்ன முடிவு கிடைக்கும் கிடைத்திருக்கும் என செய்திகள் இன்னும் இல்லை

உண்மைதான் இரு முறை மக்கள் மாபெரும் அணியாக இருந்து கற்களை எடுத்து வீசி காவலரை துரத்தி அடித்ததும், அவர்கள் பயந்து ஓடியதும் காட்சிப்பதிவுகளில் காணமுடிகிறது ....ஆனால்

அதற்காக சுமார் 800 மீட்டர் வரை கூட குறி தவறாமல் சுடும் தானாகவே லோடு செய்து கொள்ளும் எஸ் எல் ஆர்...செல்ப் லோடிங் ரைபிள் வைத்து நெஞ்சிலும், கழுத்திலும், விலா எலும்பின் மேம்பகுதியிலும், தலையிலும், வாயிலும் எல்லா குண்டுகளுமே மார்பு அளவுக்கும் மேலாகவே குறிவைக்கப்பட்டு சுடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் போராட்டக்காரர்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு: சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது யார் ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் மருத்துவ மனையில் பாதிப்படைந்தவரை சென்று பார்த்ததற்கு 144 தடை உத்தரவை மீறியதாக இவர் மேலும் ஸ்டாலின் மேலும் வழக்குப் பதிவு..

நடக்கும் ஆட்சி ஜனநாயக ஆட்சியாக  மக்கள் ஆட்சியாக இல்லை. ஸ்டெரிலைட் என்னும் ஒரு முதலாளிக் குடும்பத்தைக் காப்பாற்ற எண்ணிறந்த குடும்பங்களின் சோக வரலாறை படைத்திருக்கின்றன மோடியின் மத்திய அரசும்.அ.இ.அ.தி.முக பழனிசாமி , பன்னீர் அரசும்.

அருணா ஜெகதீசன் என்னும் முன்னால் நீதிபதி விசாரித்து உண்மை அறிவாராம்...


இதனிடையே பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித் ஷா தமிழகம் முதற்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வரும் எம்.பி. தேர்தலில் அந்தக் கட்சியே வெல்லும் என்று வெளியில் பேசி இருக்கிறார்.

அந்தக் கட்சியுடன் சேரும் எந்தக் கட்சியுமே இனி எந்தத் தேர்தலிலும் தமிழகத்தில் வெல்ல முடியாது. தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் மறந்து மன்னிக்கத் தயாரானாவர்கள் இல்லை.

நடந்த சம்பவத்திலிருந்து அதை ஊடகத்தில் கவனித்ததிலிருந்து நமது எண்ண அலைகள் அதைச் சுற்றியே அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு நல்லாட்சியை நல்லரசை தர வேண்டியவர்கள் ஏன் இப்படி அவர்கள் உயிரை பறிப்பவராகி இருக்கின்றனர்.

சுதந்திரப் போர் தியாகிகளுக்கு எப்படி ஒரு மரியாதை தர வேண்டும் என நாடு சொல்கிறதோ அதே போல இந்த தனியார் மயத்துக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி உயிர் நீத்த அன்னார்க்கும் ஏன் அவர்களை விட அதிகமாக நாம் மரியாதை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொன்னால் அது  தவறாகாது...

இந்த துயரம் பற்றி என்ன பேசினாலும், எங்கே சென்று அழுதாலும் தீரமறுக்கிறது...என்னங்க இது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார் துணைவியார், பேருந்தில் ஒரு இளைஞர் அதுக்கெல்லாம் நாம் என்ன சார் செய்ய முடியும்  நாம் இங்கிருக்கிறோம் அது அங்கு நடக்கிறது என்கிறார்....

இவ்வளவு நடந்து கொண்டிருந்த போதும் நான் பழநி ஒரு அவைக்கு பேச அழைக்கப்பட்டு கலந்து கொள்ள செல்லும்போது கவனித்தேன் முதல்வர் கொடைக்கானல், ஏற்காடு, உதகமண்டலம், பழநி எல்லாம் சென்று படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் நான் சென்ற ஈரோடு பழநி பேருந்து பழநி நுழைவாயிலில் 40 நிமிடம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.

முதல்வர் எங்கு சென்றாலும் நாலுவழிச் சாலை, மேம்பாலம் பணிகள் பற்றியே பெரிதும் அறிவிக்கிறார்....ஏற்கெனவே இவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர்தாம்...மேலும் இவர் அங்கு குழுமியிருந்த சிறு கூட்டத்துக்கே எவ்வளவு பெரிய கூட்டம் என்றார்...இவர் சென்ற சிறிது நேரத்தில் பழநி விடுதி தொலைக்காட்சியில் பார்க்கும்போது 200 ரூ தருவதாக சொன்னவர்கள் தரவில்லையே என ஒரு சாரர் கேட்க அங்கு பட்டுவடா நடத்தப்பட்டதை தொலைக்காட்சி ஒலி ஒளிபரப்பியது... இது தானா சேர்ந்த கூட்டமல்ல...காசு கொடுத்த சேர்ந்த கூட்டம் என்பதை அந்தக் காட்சிகள் உணர்த்தின...

ஒரு பேச்சரங்கில்  தொலைக்காட்சியில் தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் என்பார்தாம் தமிழக அரசை நடத்துகிறார், இவரின் உறவினர் எஸ்.வி. சேகரை பிடிக்க முடியாத காவல்துறை இத்தனை மனிதர்களை கொன்று இத்தனை குடும்பத்தில் தீ மூட்டி இருக்கிறது என்பதை நினைத்தால் இது காவல் துறையின் தவறாகத் தெரியவில்லை....ஆளும் நிர்வாகத்தின் திரை மறை நாடகங்களாகவே தெரிகிறது.

இவர்கள் பாடம் புகட்ட நினைக்கிறார்களாம், மக்கள் இயக்க வியாலாளர்க்கு, அரசுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தால், தனியார் முதலாளிகளுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தால் நாங்கள் இப்படி காவல் துறையினரை ஏவி விட்டு கொன்று குவிப்போ. பாடம் புகட்டுவோம். இனி இப்படி சேர்ந்து உரிமைக்காக போராத்தலைப்படுவீர்களா? சேர்ந்து கோரிக்கை எழுப்புவீர்களா? நீங்கள் அடிமை நாய்கள்தாம் நாங்கள் சுட்டுக் கொல்வோம், கேட்பார் கிடையாது உங்கள் வாக்குகளைப் பெற்று விட்டால் நாங்கள் ஆண்டார்கள் தாம், நாங்கள் அதிகார வர்க்கம்தான், நாங்கள்  அரச பரம்பரைதான் என நடந்த சம்பவங்கள் பறை சாற்றுகின்றன....

நேற்று கூட சேலம் 5 வழிச் சாலையில் சேலம் சந்திப்பு நோக்கி செல்லும் பேருந்து நிறுத்தத்தில் சாக்கடையோரம் எமது இந்தியக் குடி மகன் வாயிலும் மூக்கிலும் முகத்திலும் ஈ மொய்க்க  கற்கள் மேல் ஏகாந்தமாய் படுத்துக் கிடக்கிறான்...எதைபற்றியும் கவலை இல்லாமல்...வானை நோக்கியபடி...உண்மையிலேயே உறங்குகிறானா... நாங்கள் அவரவர் பணிக்குச் செல்ல பேருந்து வந்ததும் ஏறிச் சென்று கொண்டே இருக்கிறோம்...நாடும், காவலும், ஆட்சியும் நிர்வாகமும்,  அதைத்தான் விரும்புகிறது போலும். எமது மாவட்ட ஆட்சியர் மிகவும் பிரபலமானவர் பாவம் அவர் என்ன செய்ய முடியும் ஒரு குடிமகன் இப்படி முக்கியமான படுத்துக் கிடக்கும்போது...

வாழ்க இந்திய மக்கள்
வளர்க ஜனநாயகம்
வெல்க மக்களாட்சி....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment