மரங்களுக்கு மனித விசுவாசம் உண்டா நாய் போல: கவிஞர் தணிகை
மரம் செடிகொடிகள் இசை கேட்பதால் நல்ல மலர்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் வளர்கின்றன நல்ல பலனளிக்கின்றன என்பதை ஆய்வு மூலம் நிரூபணம் செய்திருப்பதாக அறிந்திருக்கிறேன்.
எங்கள் வீட்டில் ஒரு கொய்யா மரம் நரை விழுந்து சுமார் 70 ஆண்டுக்கும் மேல் இருக்கிறது இன்னும் பலனளித்தபடி இருக்கிறது. அதன் கனி அவ்வளவு சுவையாய் இருக்கிறது. கொய்யா இலைகள் காய்ச்சி கஷாயம் வைத்தால் நிலவேம்பை விட மேல் என்கின்றனர் காய்ச்சல் சளி இருமலுக்கு...
நாங்கள் சிறுவராய் ஆரம்பப் பள்ளி, துவக்கப்பள்ளி,படித்து நடுநிலைப்பள்ளி வரும் காலத்தில் ஊரின் மேட்டிலிருந்து ஊருக்குள் இறங்கும்போதே தெரியும் மஞ்சள் மஞ்சளான பூக்களுடன் பூவரசு. அதை இரண்டு டைனிங் டேபிளாக்கி விட்டார்கள் அதில் ஒன்று இன்னும் எனது வீட்டு சமையலறையில்
இராமலிங்க வள்ளலார் சொல்வார்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்று...உயரிய சிந்தனை மிக உயரிய நோக்கம். ஆனால் நீர் வேண்டும் அவற்றுக்கு எல்லாம் நீரோட வேண்டுமே...
இங்கே சாலைகள் எல்லாமே பெருமரங்கள் நேரோடி வாழ்ந்திருந்தன. பெரும்பாலும் அவை அழிக்கப்பட்டு விட்டன. ஊரின் மாபெரும் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு நிழல் தந்தபடி...அரசை அழித்து விட்டு புதிதாக சீட் போட்டு அந்த நிழலில் பிள்ளையாரை உட்கார வைத்து விட்டார்கள். பிள்ளையார்கூட வேறு பிள்ளையாராக சிறு சிலையாக இன்னும் இருக்கிறார். அந்த அரச மரம் இல்லை. அத்துடன் ஒரு வேம்பும் ஒட்டிக் கொண்டிருக்கும் .... வெட்டியதற்கும் மாறாக சிறிய அரசோ வேம்போ இல்லை.
இன்று வேப்ப இலை ஒடிக்க வேறு இடம் தேடிப்போக வந்தது...அதுவும் நிறைய இலைகள் பூச்சரித்துப் போயிருக்க... இப்படி வேண்டேமே என்கிறார்கள் எம் வீட்டில்...எங்கள் வீட்டிலெயே ஒரு வேப்ப மரம் அப்போது இருந்தது அதன் பட்டை முதல்கொண்டு இன்னும் எனக்குள் பார்வையாய் இருக்கிறது மறக்க முடியாமல் ஆனால் இப்போது அந்த மரம் இல்லை.
சாலையோரம் எல்லாமே நிறைய புளிய மரங்கள் இருக்கும் அவை அரசுடையது எங்கள் வீட்டில் இரண்டு புளிய மரங்கள் 3 கொய்யா மரங்கள், இரண்டு கறிவேப்பிலை மரங்கள், ஒரு கொடுக்காபுளி மரம், ஒரு முருங்கை மரம்,ஒரு கொழிஞ்சி மரம் , ஒரு மாமரம், ஏன் ஒரு அரப்பு மரம் கூட இருந்ததாக நினைவு. நிறைய வாழைகள் வைத்தும் பலனடைந்தோம். இந்த கெம்ப்ளாஸ்ட் சன்மார் + அரசியல் முன்னணி வியாதிகளால் மறுமுறை வாழைகளின் கன்றின் கன்று எதிர்ப்பதற்கு மாறாக அவை இரசாயன நீரால் கச கச வென நச நசவென கெட்டுப் போய் அதன் வேரும், தண்டும் , சரியாக விரியாத இலையும் மடலுமாக செத்தொழிந்து விட்டன... இப்படி எல்லா மரங்களுமே இருந்தன. இருந்தன என்றால் இப்போது இல்லை. அடையாளத்துக்கு ஒரு முருங்கை, ஒரு கறிவேப்பிலை, இப்போது ஒரு சப்போர்ட்டா என இருக்கிறது.
இந்த கறிவேப்பிலை மரம் வளர்ந்து சென்று வளைந்து சென்று டம்மியாக்கப்பட்டுள்ள மின் கம்பிகளைத் தொட்டபடி இருக்கிறது அதே போல ஒரு தானே தோன்றிய கொட்டமுத்து அல்லது ஆமணக்கு செடி மரமாகி நெடிதுயர்ந்து மின் கம்பியை தொட வேகமாக சென்றபடி இருக்கிறது... அதன் பயன்பாடு ஏதுமில்லாமல் இருந்தும் கூட அதைப் பிடுங்கி எறிய மனவலி... ஒரு முறை இரண்டு அசோகா மரம் தாமே முளைத்து வளர்ந்திருந்தது, தமது மகன் நன்றாகப் பிழைக்க தமக்கு நடக்க வேண்டிய பைபாஸ் சர்ஜரி கூட வேண்டாம் என்று அந்தப் பணத்தையும் மகன், குடும்ப நல்வாழ்வுக்காக தியாகம் செய்த தங்கமலை அர்த்தனாரி எனக்கு தாய் வழியில் மாமன் முறை ஆக வேண்டும். எனக்கு இந்த உறவு முறை எல்லாம் தெரிவதைல்லை, தெரியாது, அதுபற்றி பெரிதக அலட்டிக் கொள்வதோ அக்கறை எடுத்துக் கொள்வதோ இல்லை...ஆனால் அவர் வீட்டில் அசோகா மரம் எல்லாம் இருக்கக் கூடாது நல்லதல்ல என்றார் உரிய காரணம் விளஙக்வில்லை ஒரு வேளை திருடர்கல் சுலபமாக ஏறி தாண்டி காம்பவுண்டை தாண்டி இந்த மர வளைவுடன் எகிறி உள் குதித்து விடுவார்கள் என்று வேண்டாம் என்று சொன்னார்களோ, அல்லது இவை வீட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று சொன்னார்களோ, அல்லது இவை பலரும் புழங்கும் பூங்கா, அரண்மனை போன்றவற்றிற்குத்தான் என்று சொன்னார்களோ, மொத்தத்தில் அவரின் கருத்துக்கு மதிப்பளித்து அதை வெட்டி எடுத்தேன் ஆனாலும் எனக்கு அதை வெட்டி எடுத்தது பற்றி வருத்தமே...அப்படி அதை மறக்காமல் இருப்பதால் தான் அது பற்றி உங்களிடம் இன்று சொல்ல முடிந்திருக்கிறது.
கடந்த முறை நடைப்பயிற்சியின்போது பார்த்தேன் ஒட்டுப்பள்ளத்து சாலையில் ஒரு தென்னையின் கீற்று மின் கம்பியில் பட்டு தீப்பொறியை கொட்டிக் கொண்டே இருந்ததை...எவரிடமாவது சொல்லலாம் என்றால் தொடர்புடைய எவரையும் காணமுடியவில்லை...
இப்போது தினமும் காலை 6 மணி 20 நிமிட வாக்கில் தினமும் கல்லூரி செல்கையில் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரிய அரச மரத்துடன் உறவாடிக்கொண்டபடி இருக்கிறேன். அந்த மரம் எப்படியோ சாலையோரம் இருந்தும் இன்னும் வெட்டுப்படாமல் வெண்ணெங்கொடி முனியப்பன் சேலத்து சாலையில் தப்பிப் பிழைத்தது போல தப்பி இருக்கிறது....மிக வளர்ந்த மரம் பரவலாக கிளை பரப்பி வார்த்தையில் சொல்ல முடியாது, சொல்லில் வடிக்க முடியாமல் அணிலும் , பறவைகளும் விளையாடியபடி அங்கிருந்து குச்சுகளை , விதைகளை, எச்சத்தை, கீழ் இருக்கும் மனிதர்கள் மேல் தலையில் போட்டபடி...மாபெரும் மரம்...
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல: அந்த மரத்துடன் நாம் அப்சர்வ் செய்யும்போது யுனைட் ஆக முடியுமா கனக்ட் ஆக முடியுமா மெர்ஜ் ஆக முடியுமா இல்லை இல்லை ஒன்நஸ் ஆக வேண்டும் நீ அதுவாக ஆக வேண்டும் என்கிறார் அது முடியுமா, இல்லையே நாம் பார்க்கும்போது அது வேறு நாம் வேறாகவுமே இருக்கத்தான் முடிகிறது. அப்படித்தான் இருக்கிறோம்... ஆனால் அவர் சொல்வது நீ அதுவாகவே ஆக வேண்டும் அப்போதுதான் அப்சர்வர் அப்சர்வ்டு என்கிறார்.
அந்த நிலைக்குச் சென்றால்தான் நீங்கள் ஞானி என்கிறார். அப்படி எல்லாம் மரத்தை நம்மால் நேசிக்க முடியுமா என்ன....நாம் வளர்க்கும் நாய், பூனை எல்லாம் நம்மிடம் அப்படித்தான் வந்து ஒட்டிக் கொள்கின்றன...ஆனாலும் நாம் அதனுடன் எல்லாம் அப்படி ஒன்ற முடிவதில்லை அது அன்பாக மேல் விழுந்தாலும் அதன் நகம் பட்டாலும் விஷமாயிற்றே, கீறியது, பூறியது எரிச்சலாக இருக்கிறதே என எச்சரிக்கையாக நாமும் நேசித்தாலும் தள்ளிப் போகிறோமே ஒரு இடைவெளி இருக்கிறதே...
இப்படி இருக்கும்போது எப்படி இடைவெளி இல்லாமல் மரத்துடன் எல்லாம் ஒன்ற முடிகிறது...ஒன்ற வேண்டும் என்கின்றனர்...ஞானிகள் ஞானம் பிறக்க..
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன்
தேடியலைந்தேன் நல் நேசமிகு உயிரை காலமெலாம் பற்ற...
இறையன்றி, இயற்கையன்றி வேறெதுமிலை என்றே கண்டுற்றேன்
கால உடலில் காற்றுள் நடுவில் பற்றி எரியும் தீ சாம்பலாகும் வரை
திரிந்தபடி இருப்பேன் நானும் ஒரு காற்றாக, நீராக , நிழலாக!
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment