றாப்பு: கவிஞர் தணிகை
ரமேஷ் ஒரு நெருக்கடியான கட்டத்தில் துணைவி வாரிசை கர்ப்பம் தரிக்கும் காலக்கட்டத்தில் பங்காளிகள் ஏற்படுத்திய ஒரு இக்கட்டான கட்டத்தில் ஒரு வீடு வாங்கலாம் என முயற்சித்தான். அலையோ அலை என்று அலைந்து அவனிடம் அப்போதிருந்த தொகையை விதைத்து ஒரு நொடிந்து போன இடிந்து போன ஒரு ஓட்டை வில்லை வீட்டை வாங்கினான்.
என்னதான் இருந்தாலும் ஒரு வீடு விலாசம் என்றெல்லாம் இருக்க வேண்டுமல்லவா அப்போதுதானே சமுதாயத்தில் மதிப்பு.
அவன் வாங்கிய வீடு எப்படியும் வருடத்தில் ஓரிரு முறை அவன் அங்கே குடி வைத்திருக்கும் வீட்டு வாடகைதாரரின் பணத்தை ரிப்பேர் என்ற செலவுக் களத்தில் விழுங்கிவிடும்.
அது கறையான் ஓட்டுக்கூரையை மென்று தின்று கொட்டிய மண்ணுக்கு பதிலாக அந்த ரீப்பர், வாரைக் கட்டைகளை மாற்றி, சுவரை சரி செய்து ஓடுகளை திரும்ப மாட்டியதாக இருக்கலாம் அல்லது
கூடுவாய் தகரம் கீழே விழுந்துவிட்டது மழை நீர் செல்ல மீண்டும் தகரத்தை ஒழுங்காக புதிதாக போட வேண்டுவதாக இருக்கலாம்.
தண்ணீர் தொட்டி சரி செய்வதாக இருக்கலாம்
அல்லது குளியலறை, கழிவறை சரி செய்த் கதவை போட வேண்டியதாக இருக்கலாம். அல்லது மின்சார ஒயரை மாற்றியே ஆக வேண்டும் மிகவும் பழையதாக இருக்கிறது என்பதாக இருக்கலாம்...
அப்படித்தான் அந்த மழைக்காலத்தில் கழிவறைகளின் மேல் மூடப்பட்டிருந்த கருங்கல் மூடிகள் அதன் அடிச் சுவர் விழுந்து அந்தமூடிகள் கழிவறை உள் விழுந்து ஒரு பிரச்சனை மழை தூவானமாக நிற்காமல் தூவிக் கொண்டே இருந்த காலம்.
நல்ல வேளை அந்த நேரத்தில் ஓய்வறையை பயன்படுத்தச் சென்ற அந்தக் குடி இருந்த பெண் உள் விழாமல் தப்பிப் பிழைத்துக் கொண்டார். இப்படி இருக்கும்போது அந்த ஓய்வறையை/ கழிப்பறையை சுத்தம் செய்து விட்டு அந்த கழிப்பறையின் சுற்றுச் சுவர்களைக் கட்டி அந்த தொட்டியை சரி செய்து மறுபடியும் பயன்படுத்த சீர் செய்து தர வேண்டிய நிர்பந்தம்.
தேடினான்...சாலை ஓரம் ஒரு வாகனம் டேங்கருடன் நர்மதா செப்டி டேங்க் கிளீனர் என இருந்தது...கூப்பிட்டான்...வந்தார்கள் ரேட் பேசவில்லை. அட எவ்வளவுப்பு சொல்லுங்கப்பா என்றால்... பார்த்துக் கொள்ளலாம் சார் விடுங்கள் என்று கூலியை நிர்ணயம் செய்யாமலே... சார் இது பம்ப் வைத்து இழுக்க முடியாது, ஆட்கள் கீழ் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி கீழ் இறங்கி வேலை செய்து அள்ளிக் கொட்டினார்கள் சமயத்தில் காம்பவுண்டுக்கு வெளியே கூட அவசியத்தின் பாற்பட்டு கொட்டி விட்டார்கள், வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல், அது அக்கம் பக்கம் வீட்டாரிடம் எப்போதும் விழிப்புணர்வுடன் அந்த வீட்டில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என கண்குத்திப் பாம்பாக பார்த்து வருவோர்க்கு வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தாற்போல ஆக சண்டைக்கு மும்முரம் செய்தார்கள்.
ரமேஷ் சண்டை செய்யும் மன நிலையில் இல்லாததால், நான் பொறுப்பு நான் அப்புறப்படுத்தி விடுகிறேன் எனச் சொல்லி அப்புறப்படுத்த உள்ளூர் நபர்களையும் வரச்சொல்லி அவர்களுக்கும் உரிய கூலியைக் கொடுத்து நகர சுத்திகரிப்பு பணியாளர்களையும் கவுன்சிலர் வழியே சொல்லி ஏற்பாடு செய்து அந்தப் பிரச்சனை பெரும் பிரச்சனையாகாதவாறு சரி செய்து விட்டான்.
இந்த உள் இறங்கி அள்ளி எடுத்த கோஷ்டி, றாப்பு, என என்னன்னவோ புரியாத மொழியில் பேசிக் கொண்டு அது வெகு அசுத்தம் என்றெல்லாம் பாசாங்கு காட்டி,,, கடைசியில் ரமேஷால் கொடுக்க முடியாத ஒரு பெரும் தொகைக்கு வேட்டு வைத்தார்கள்...
வீராப்பு அல்ல...அந்த றாப்பு என்ற வார்த்தையையும், ஒரு கூலிக்கு எவ்வளவு எனப் பேசாமலேயே நல்ல நபர்கள் மாதிரி அப்புறாம் பார்த்துக் கொள்ளலாம் சார் என வேலையை செய்வதாக சொல்லி விட்டு கடைசியில் ஒரு மிகவும் சுமக்க முடியாத தொகையை கறந்து சென்று விட்டார்கள்...
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவர்களுக்கு வேண்டுமானதை எல்லாம் செய்து கொடுத்தும் அவர்களின் நக்கல் பேச்சு, கேலியைப் பொறுத்தும், நமக்கு வேலை ஆக வேண்டுமே என்று பொறுத்த்ப் போய் அந்த சுவர்களை அவனுக்குத் தெரிந்த மேஷன் ஒருவரை நியமித்து எடுத்துக் கட்டி மிக நல்ல முறையில் அந்தப் பணியை செய்து முடித்த ரமேஷ்... அந்த றாப்பு என்ற சொல்லை மட்டும் அவனது வாழ் நாள் முடியும் வரை மறக்கவே இல்லை.
அதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக் கொண்டது என்ன வென்றால் அந்தக் காலத்தில் செப்டிக் டேங்க்களில் தேவையான பக்கங்களில் சுவரை மட்டும் பூசிவிட்டு அடியில் சிமென்ட் பூச்சு பூசாமல் அப்படியே விட்டிருந்தார்கள். அது உள் செல்லும் நீரை உறிஞ்சி விட்டு அசுத்தத்தை மக்க வைத்து அப்படியே கரு கரு என ஆக்கி விட்டு துர் நாற்றம் எழுப்பாத எருவாகி இருந்ததுதான்...
அன்றுமுதல் ஒரு வேலை செய்யுமுன் அதை முடிக்க எவ்வளவு ஆகும் எனக் கேட்காமல் எந்த வேலையை செய்யவும் எவரையும் அனுமதிப்பதுமில்லை
நாணயம், மனித நா நயம்... இழி பிறவிகளும் ஈனத்துப் பிறவிகளும் எல்லா தரப்பிலும் உண்டு...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment