Saturday, June 3, 2017

கவிக்கோ அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை

அப்துல் ரகுமான்: கவிஞர் தணிகை

கவிக்கோ
Image result for kaviko abdul rahman



தன்னை தனது சுய கௌரவத்திலிருந்து தாழ்த்திக் கொள்ளாத ஒரு கவிஞன். நான் நிறைய பிரபலங்களுடன் உறவாடுமளவு பழக வில்லையெனிலும் ஓரிரண்டு முறை சந்தித்திருக்கிறேன் அதன் பின் அவரவர் வழி வாழ்வுக்கு வந்து விடுவோம். அதன்படி அப்துல் ரகுமானையும் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன்.

சாகுல் அமீது என்னும் இன்குலாப் என்ற கவிஞரை மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகம் சேலத்தில் நடத்தும்போது அழைத்து வந்து ஒரு கவியரங்கம் செய்தோம். அதில் அவர்தான் தலைமைக் கவிஞர் . அவர் தலைமையில் நான்  செய்த கவிதையின் தலைப்பு நீதி...இன்னும் நினைவிலிருக்கக் காரணம் அவர் நீதி என்றாலே சற்று அதிகமாகவே இருக்கும் என எனது கவிதையை பாராட்டுவது போல பாராட்டியும் நீதி யின் பண்பை உரித்துக் காட்டியதும் அத்துடன் அவர் ஒரு கருத்தை சொன்னார்: கவிஞர் என்றால் எப்போதும் கவிதை பாடல் என்று எழுதிக் கொண்டிருப்பவன் அல்ல வாழ்வில் வாழ்ந்து காட்டுவானே. என்பார். அதன் படி இந்த அப்துல் ரகுமான் ஒரு தனக்கென்ற தகுதியை ஒரு மேன்மையை ஒருகவிச் செருக்குடன் நடந்து கொண்டு மிளிர்ந்தபடியே மறைந்து விட்டார்.

இவரை சேலத்து தமிழ் சங்கத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன் அந்த விழாவிற்கு மு.மேத்தா , மற்றும் அன்றைய காலத்தின் உச்சியில் இருந்த கவிப் பெருமக்கள், நா.காமராசன், வைரமுத்து தவிர பெரும்பான்மையானவர் வந்திருந்தனர். சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் அந்த விழா நடந்தது.

ஈரோடு தமிழன்பன், மீரா, இப்படி பலரும் வந்திருந்தனர். அனைவர்க்கும் எனது முதல் நூலை பரிசளித்தேன் மறுபடியும் பூக்கும் என்ற நூல்தான். அப்போது அந்த அவையிலேயே அந்த நூலை வெளியிட்டு ஒரு பெருமை தேடிக்கொள்ளலாம் என இருந்ததை ஒரு நூலை விமர்சனம் செய்த காரணத்தால் வங்கியில் பணிபுரிந்தவரும், அந்த தமிழ் சங்கத்தின் நிறுவனர்களின் உறவினரான கா.வை பழனிசாமி என்பார் தடுத்து விட்டார்.

அப்போது எனக்கு ஒரு வேதனை, இந்த ஜாம்பவான்களுடன் எனது நூலை வெளியிட்டிருக்க வேண்டிய வாய்ப்பு பறிபோயிற்றே என்று. ஆனால் அப்போதே மிக கம்பீரமாய் இருந்த அப்துல் ரகுமான் போன்றோரை சந்தித்தோமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

சிலர் நேரில் பார்க்கும்போது அந்த கவர்ச்சியை இழந்து சாதாரணமாக காட்சி அளிப்பர் ஆனால் அப்படி அல்ல இந்தக் கவிஞர் தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருந்தார். சுருக்கமாக சொல்லி வியக்க வைக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அது ஒரு கூட்டல் என்றால் நேரில் பார்க்கும் போதும் அந்த ஜிப்பா வேட்டி வெண்மையிலும் அந்த குறுந்தாடியிலும் ஒரு மெஜஸ்டிக் லுக்குடன் திகழ்வார்.

வைரமுத்துவின் பேராசிரியராக இருந்த பெரியார் தாசன் கூட தம் கடைசிக் காலத்தில் முகமதியம், புத்தம் என்றெல்லாம் தடுமாறி கிடைக்கும் வாய்ப்பு அது தகுதி இல்லாத இடமாக இருந்தாலும் கூட சிறு சிறு வாய்ப்புகளை எல்லாம் பயன் படுத்தி பேர் அழித்து மாய்ந்த போது...

இந்த அப்துல் ரகுமான் தமது கம்பீரம் கீழ் இறங்காமல் வாழ்ந்து முடிந்து விட்டார் இதுதான் கவிஞர் என்ற பேருக்குகந்த வாழ்வு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: