Saturday, June 3, 2017

அது ஒரு காலம்: கவிஞர் தணிகை

அது ஒரு காலம்: கவிஞர் தணிகை

Image result for there was a time

பகுதி 1.
Related image1986 தந்தை மறைந்த போது என்னிடமிருந்தது வெறும் 450 ரூ சேமிப்பு,     அவருடைய உடலை எடுத்து வர கார் வாடகைக்கு பயன்பட்டது. மாத பராமரிப்பு பயிற்சி ஊதியம் ரூ.750 மட்டுமே.

2006 தாய் இறந்தபோதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவே இல்லை. அப்போது இப்படி இருந்திருந்தால் இன்னும் என் தாய் அதிகம் நாட்கள் உயிருடன் இருந்திருக்கலாம். பௌர்ணமி கிரிவலத்துக்கு என எல்லா வாடகைக் கார்களும் சென்றிருந்தன எங்கள் ஊரில் ஒரு வாடகைக் காரைத் தேடிப்பிடிக்கவே மணிக்கணக்காயிற்று அவளைக் கொண்டு மருத்துவம் பார்க்க, மருத்துவமனையில் உள் நோயாளையாக அனுமதிக்க...அதற்குள் நிலை 24 மணி நேரக் கெடு என்று வைக்கப்பட்டது . முடிந்தும் போனது.

1992ல் ஹனீபா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக அலுவலர்  பணி சிங்கப்பூரில்  என வரச் சொன்னார்கள் ஆனால் தனியாக தாயை விட்டுப் போகவில்லை. அப்போது மின்னஞ்சலும், செல்பேசியும் , சமூக வலை தளங்களும், ஊடகங்களும் தினமும் பேசும் பார்க்கும் வசதி வாய்ப்புகள் ஏதுமில்லை.

 எனக்குவயது 36, தாய்க்கு 70 ஐ எட்டி விட்டது அது இந்தியாவின் சுதந்திரப் பொன் விழா ஆண்டு.1997. மணம் புரிந்தேன் அதன் பின் 9 ஆண்டுகள் மட்டுமே தாய் வாழ்ந்திருக்கிறாள். அந்த ஒன்பது ஆண்டுக்கானது இன்று 18ஆக விளைந்து நிற்கிறது மேலும் மேலும் வளர்ந்தபடி ...

அப்போதெல்லாம் எந்த ஊடகமும் இல்லை இவ்வளவு எளிமையாக காதலை சொல்ல அப்போதெல்லாம் கடிதங்கள் மட்டுமே, அய்யய்யோ லவ் லெட்டர் கொடுத்து விட்டான் என கடமை தவறியதாகவும் கருணை யற்றதாகவும் உலகு தீண்டத்தகாததை பார்ப்பது போலவும், செய்யக் கூடாததை செய்தது போலவும் உலகே பார்க்கும்.

என்றாலும் எங்களை இழந்தவர்க்குத்தான் இழப்பே தவிர எமக்கல்ல.எங்களை உதாசீனப்படுத்தியவர்க்கே சிறுமை தவிர எமக்கல்ல
காதலில் வெற்றி என்பது தோல்வி என்பது வாழும் வாழ்க்கையில் என்பார்கள் நாங்கள் ஒரு அலையில் விழுந்தோம் மறு அலையில் எழுந்தோம். எங்கள் அலை அனைவரையும் காப்பாற்றும் அலை. எவரையுமே கை தூக்கி விடும் அலை. அமிழ்த்து மாய வைக்கும் மாய வலை அல்ல...

வீட்டுக்கே மிகவும் தாமதமாக 8 வதாக பிறந்த பிறப்பு, எல்லாருக்கும் சாதாரணமாக சுலபமாக, எளிமையாக கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்க நமக்கு பிரம்மப் பிரயத்தனம் என்பார்களே அது போல எல்லாமே போராடிப் போராடித்தான் கிடைக்கும் கிடைப்பதற்குள் அதில் உள்ள ஆசை, விருப்பம், எண்ணம் எல்லாம் மாறி சீ என்றாகிவிடும்...அப்படிப்பட்ட பிறப்பு நம் பிறப்பு.

1978 ல் இரண்டு செட்டுகள் பள்ளி இறுதித் தேர்வை எட்டியதுவே அதில் மூத்த செட் எங்களுடையது, எங்களுடையதுதான் எஸ்.எஸ்.எல்.சி என்பதில் கடைசி செட் 11 ஆம் வகுப்பு.

கல்லூரியிலும் உதவாத ஒரு படிப்பை கல்லூரி நிர்வாகமும், எமது சீனியர் மாணவர்களும் எங்களுடன் ஒட்டி வைத்திருந்தார்கள், எங்களுக்கு எல்லாம் புரியாத எதை தேர்வு செய்வது எதிர்காலம் எப்படி என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாத முடிவு எடுக்கத் தெரியாத பிறர் சொல்லியதை அப்படியே கேட்டுக் கொள்ளும் பருவம்....பாழ் படுத்தி விட்டது. ஆனாலும் எழுந்து நிற்கிறோம்.

முடியவே முடியாது
என்ற
களங்களில்தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது

பூக்களை காலம் உதிர்த்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும் ...

என கால மாற்றத்தினால்
எழுந்து நிற்கிறோம்

Related image

பகுதி 2.

ஆனால் இப்போது காதல் ஆசிட் ஊற்றுகிறது , காதலியை மதுக் குப்பிகளால் குத்திக் கொல்கிறது சொல்லிவிட்டு தற்கொலை செய்கிறது...
இப்படி எப்படியோ எத்தனையோ? உலகெலாம் இவர்கள் இருவரும் மட்டுமே இருக்க வேறு எவருமே பேருந்தில் கூட இருக்கக் கூடாது என்கிறது முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையாடா, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? இதில அவன் எந்த பஸ்ஸா இருந்தாலும் ஒருத்தன் இருக்கான் அப்படிங்கறா அவள் காதில் கேட்டு விடப் போவது என்கிறாள், அவன் கேட்டா கேட்டு விட்டுப் போகட்டுமே என்கிறான்

அப்பன் தயிர் ஊத்தி சாப்பிடச் சொல்வானாம், இவளுக்கு பிடிக்காதாம், ஊ, கருமம் நான் திங்கவே மாட்டேன் என்கிறாள், அவன் எனக்கு அது பிடிக்காது நான் திங்கவே மாட்டேன் என்கிறான் ...முளைச்சு மூனு இலை என்னைக்கு என முளைக்கும்போதே கேட்கிறதுகள்....
எச்சரிக்கையாக இல்லை எனில் நமது பயிர்களைக் காத்து வாழ வைக்க முடியத நச்சுக் காற்று ஊடகமெங்கும், நாடெங்கும், உலகெங்கும். உற்ற எண்ண முடையார் மட்டுமே நட்பாக, உறவாக இயற்கையே எமது விழுதுகளுக்கு துணை செய்யுங்கள்.

கலையாத கல்வியும்....

துய்ய நின் பதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு காண அருள் செய்யட்டும்.  இயற்கை. இயலும் கை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment