வலிமை உடையவரை விடப்
பொறுமை உடையவரே மேலானவர்.
உலகை அடக்குகிறவரை விட
தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்
வழக்கில் பிரதி வாதி குறுக்கிடும் வரை
வாதி கூறுவது நியாயமாகவேத் தோன்றும்
பணக்காரர் இறையருள் பெறுவது
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது
தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்
ஆனால் என்றும் அவர்கள் அழிவுக்கு உரியவரே.
கடவுளின் சினம் வெளிப்படும் நாளில்
செல்வம் பயன்படாது
நேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்
குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும்
நேர்மையானவர் உலகில் இல்லை
பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும்
ஆணி வேர்.
கோழையாய் இருப்பதை விட
ஏழையாய் இருப்பதே மேல்.
....சில நல் மொழிகள், சில நல் வழிகள்
முன்னோரின் முன் மொழிகளும்
தணிகையின் மணி மொழிகளும்
நூலிலிருந்து இறக்குமதி....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
அருமை நண்பரே
ReplyDeleteநன்றி