தெரிந்த கதை தெரியாத முகம்: கவிஞர் தணிகை
கோகுல கிருஷ்ணன் என்ற இந்த பல் மருத்துவம் படிக்கும் இளம் மருத்துவர் சினிமாத் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என ஆர்வமாய் இருக்கிறார். அவர் எடுத்துள்ள 3 நிமிடமே ஓடும் " ஒரு துளி" எ ட்ராப் என்ற குறும் படத்தைப் பார்த்தேன். மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.
அனைவருமே பார்த்து அதில் உள்ளவற்றை உணரலாம். அந்த சிறுமியும் நன்றாக செய்திருக்கிறார். மேலும் அதில் காட்டப்பட்ட மழையில் நனையும் தென்னை, நீர் இல்லாக் கிணறு, கோமியம் ...சிறு நீர் கழிக்கும் மாடு...அப்துல் கலாம் குரல் விவேக்கின் பின்னணியில் இந்தக் கதை நகர்கிறது நல்ல சேதியும் தருகிறது.
மரம் வைக்க, மரம் வளர்க்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாராலும் பேசப்படுவதுதான் அதையே வைத்து 3 நிமிடங்களில் ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.
செடியை வைக்கும் சிறுமி நீர் இல்லா நிலையில் மாட்டின் கோமியத்தை நீராக எண்ணி ஊற்றியபடி இருக்க, மழையும் பொழிய...மரம் வைத்தால் மழை பொழியும், மழை பொழிந்தால் மரம் வளரும், மரம் பிழைக்கும், உயிர்கள் யாவும் உணவு பெறும்...எனவே மரமும் மழையும் நமது வாழ்வில் என்றும் இன்றியமையாதவையே.
இதையே நல்ல அழுத்தத்துடன் நேர்த்தியாக இந்தப் படம் உணர்த்துகிறது.
இந்த இளம் இயக்குனர் கோகுல்கிருஷ்ணன் வீட்டுக்காகவே பல் மருத்துவம் படிப்பதாகவும், தமது ஈடுபாடு யாவும் சினிமா தரும் செய்திகளில் நாட்டு மக்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவதாகவும் சொல்லி இருக்கிறார்.
வாழ்த்துகள்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
நன்றிநண்பரே
ReplyDeleteஇதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்
thanks for your feedback on this post sir. vanakkam.
ReplyDelete