Tuesday, June 13, 2017

விடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை

விடியல் நண்பர்களின் சந்திப்பு: கவிஞர் தணிகை
Image result for vidiyal

அன்பால் இணைவோம் நட்பால் உயர்வோம்

 என்ற தாரக மந்திரம் இவர்களுக்குள் இவர்களை இணைத்து வந்தது இணைந்திருந்தது. இணைந்து கொண்டது.

கடந்த ஞாயிறு அன்று 11.06. 17ல் கரூர் அர்ச்சனா உணவகத்து வளாகத்துள் சுமார் 50 பேர் கொண்ட குழுவினரின் சந்திப்பு நிகழ்ந்தது அது காலை முதல் இரவு வரை அந்த எண்ணத்துக் குவியலிடை மிதந்து கிடந்தது. குடும்பத்தினருடன் வந்திருந்தவர் இருந்தனர், நண்பர்களுடன் கலந்து கொண்டவர் வந்திருந்தனர் அந்த சந்திப்புக் கூடமே தித்திப்பால் நிறைந்திருந்தது. நல்ல மணம் கமழ்ந்திருந்தது.

பாடினார்கள், ஆடினார்கள், பேசினார்கள், குழந்தைகள் குதூகலமாக பலூனை வெடித்து சத்தம் எழுப்பினார்கள், மேடை என்றும் கீழ் என்றும் மேல் என்றும் பார்க்க அந்தக் குழந்தைகள் என்ன நம் போன்றவர்களா பாகு பாடு எல்லாம் பார்க்க....எல்லா வயதினரும் கலந்து கொண்டிருந்தனர்.

என்னையும் பேச அழைத்தனர் நண்பர் ஏற்கெனவே எனது வரவை உறுதி செய்து கொள்ள எனது கணக்கில் ரூபாய் 5000 தொகையை வரவு செய்து விட்டார் மேலும் நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு, மேடையில் துண்டு, போக்கு வரவுக்கான ஏற்பாடுகள், மேலும் அங்கு சென்றதால் நமது 30 புத்தகங்கள் , நேசமுடன் நினைவதுவாகி, பாலியல் விழிப்புணர்வு நூலான அளவுக்கு மிஞ்சினால், மற்றும் முன்னோரின் முன் மொழிகளும் தணிகையின் மணி மொழிகளும் ஆகிய நூல்கள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.1500 இப்படி எனக்கு அன்று நல்ல சிறப்பு கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கு மெய்யாக.

எனக்குரிய இடமாக நான் நீண்ட காலத்துக்கும் பிறகு மகிழும் ஒரு விதமாக அந்த அன்றைய சம்பவங்கள் அமைந்திருந்தன. மேலும் திருச்செங்கோடு டைனர்ஸ் எல்.ஐ.சி. கிளப் மெம்பரான எமது தோழர் டி.சேகர் அவர் வீட்டுக்கு அழைத்து சென்று சிற்றுண்டி அளித்து காரில் அழைத்து சென்று கரூரை அடைந்ததும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. அவரது துணைவியார் மிக நெகிழ்வுடன் விருந்தோம்பல் அனுசரித்தது எனை தமிழர் கால பண்டைய பண்பாட்டுக்கு அழைத்து சென்று விட்டது. அதே போல திரு.மணிவண்ணன் வழக்கறிஞர் என்னை மிகப் பாங்குடன் கொண்டு வந்து சேலம் 5 வழிச் சாலையில் இறக்கி விட இரவு 8.20 மணிக்கே வந்து சேர்ந்து விட்டேன் மறு நாள் பணிக்கு செல்ல ஏதுவாக...

மொத்தத்தில் எனக்குப் பிடித்தமான நிகழ்வு ....எனக்கு கிடைத்த பொருள் வரவு யாவுமே எனது வாரிசுக்கு படிப்பு செலவுக்கு பயன்பட ஒதுக்கி விட்டேன்.

ஓர் ஏழை மாணவருக்கு அங்கே கலைக்கல்லூரியில் படிக்க நண்பர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே தேவையான ரூபாய் பத்தாயிரத்தை சேர்த்து கொடுத்து தமது அறப்பணியை ஆரம்பித்திருந்தது அந்த முதல் சந்திப்பே.

அதிலும் எழுத்தாளர் நாகசந்திரன் மகள் ஸ்ருதி 9 ஆம் வகுப்பு மாணவி தமது சேமிப்பில் இருந்து 500 ரூபாய் கொடுத்து தமது காருண்யத்தை வெளிப்படுத்தினார். இவர் தமது இந்த சிறுவயதிலேயே புகைப்படக் கலையில் மிகத் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்குகிறார் கடந்த வாரத்தில் இவர்  எடுத்த இவரது தந்தையின் புகைப்படத்தை தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டு நூலிலிருந்து நெசவு என்ற ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது

எல்லா நண்பர்களும் எனது வாழ்க்கை வட்டத்திலிருந்து மிக வெளியிலிருந்த போதும் அன்றைய பொழுதில்  பழ(ம்) நட்பை கடைசிவரை உதிர விடா அன்பன் நண்பன் என்ற எனது பழைய கால எழுத்தின் பொருளுடன் என்னுடன் ஒர் மனப்போக்கில் இணைந்திருந்தனர்   இணைக்கும் நூலாக‌ அந்த கிராமத்து நண்பன் இருக்கிறான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

6 comments: