Tuesday, June 20, 2017

எனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை

எனக்கு(ம்) பேராசை உலகுக்கு வழிகாட்ட: கவிஞர் தணிகை

கமல் தொலைக்காட்சிக்கு வரமாட்டேன் என்றவர் ஜூன் 25 முதல் வந்து பிக் பாஸ் நடத்துகிறார் பணத்துக்காக என்று அவரே சொல்லுமளவு மாற்றம்

பாகிஸ்தான் அணி இந்திய கிரிக்கெட் அணியை இறுதி ஆட்டங்களில் வென்றதேயில்லை என்ற வரலாற்றை பொய்ப்பித்து சாம்பியன் கப்பை வென்ற மாற்றம் சில தினம் முன்

சமூக சேவகராயிருந்த பராக் ஒபாமாவை அமெரிக்க ஐக்கிய நாடு 8 ஆண்டு குடியரசுத் தலைவராக போற்றியதை ஒரு பிஸினஸ் மேனாயிருந்த ட்ரம்ப் மாற்றி அந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது மாற்றம்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நிறுவனத்துக்குமே பணிக்கு செல்லாத நான் கடந்த ஓராண்டுக்கும் மேல் பணிக்கு சென்று வருவது எவரும் எதிர்பாராத மாற்றம்...

இப்படி மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்னும்போது ஏன் நதி நீர் இணைப்பு மட்டும் இந்தியாவில் நிகழாது? அதுவும் நிகழும்தானே?

குருவித் தலையில் பனங்காய் வைப்பதாக ஒரு பக்கமும், ஏன் எடப்பாடி, மோடி, ஓ.பி.எஸ் போன்றவர் எல்லாம் மாநிலம், நாடு ஆகியவற்றை ஆளும்போது எனக்கு அந்தத் தகுதி இல்லையா? எனக் கேட்டுப் பார்த்தேன்
நதிகள் இணைப்புக்கு ஏன் நான் தலைவனாகக் கூடாது என்றுக் கேட்டுப் பார்த்தேன் நண்பர் ஒருவர் தலைவரை வேறு எங்கும் தேடாதே, நீ தான் தலைவர் என்றார். அன்று இரவு உறக்கமில்லை. உறங்கிக் கிடந்த நெருப்பு விழித்துக் கொண்டதுநதிகள் நீர் இணைப்பு இயக்கம்
நதிகள் நீர் இணைப்பு இயக்கம் பேஜ், குரூப் என முக நூலில் ஒரு சமூகத் தளத்தை ஏற்படுத்தி உள்ளேன். இணைவார் இணையட்டும். கலைப்பார் கலைக்கட்டும், போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.

தாழ்வான இலக்கு என்பதே குற்றம் என்பார் எனக்கு முன் மாதிரியான தலைவர் டாக்டர். அ.ப.ஜெ.அப்துல் கலாம்.

இன்பினிட் ஜீல் மனிதருள் அளப்பரிய ஆற்றல் அளப்பரிய சக்தி புதைந்து கிடக்கிறது என்பார் விவேகானந்தர். அப்படி தோண்டிக் கொண்டே இருப்போம் அந்த இலக்கை நோக்கிய கிணற்றை ஊற்று என்றாவது கிளம்பட்டுமே..

வயது எப்போது இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கும் அதன் இலக்கை\
அது எனக்கு இப்போதிருந்து என்று எடுத்துக் கொள்ளலாமே...

எம்மால் முடிந்த வரை செய்து வைக்கத் தவறமாட்டோம்,அந்த நதி நீர் இணைப்பு என்பது அண்டைய நாடுகளுடன் தொடர்பு என்று இருந்தாலும் சரி, பிற மாநிலங்களுடன் தொடர்பு இருப்பதானது என்று இருந்தாலும் சரி, அரசு, கட்சிகள், நிர்வாகம், அறக்கட்டளைகள், கோவில்கள், சமஸ்தானங்கள், மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள்  ஆகியவற்றுடன் மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்ப்புகளுடன் இருந்தாலும் சரி

இந்த நாட்டின் இந்த தமிழ் நாட்டின், இந்த காவிரிக் கரையின் மேல் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததற்கு ஏதாவது நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா, யாராவது இப்படி குடிநீருக்கு இல்லாமல், பாசன நீர் இல்லாமல் இருப்பது  பற்றி அன்றாடம் பிரார்த்தனை செய்து இயற்கையிடம் இறைஞ்சியிருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவர்களுடன் நானும் இருக்கிறேன்.

கண்களில் கண்ணீர் சிந்த நெக்குருகி அழுது, இராமலிங்க வள்ளல் தம் பாடலில் சொல்லியபடி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிகவாடினேன் என்று சொல்வது போல  நான் உருகி இருக்கிறேஎன்.

இந்தத் திட்டம் மட்டும் நிறைவேற்றி விட்டால் அந்தத் தலைவர்
ரஷியாவின் லெனின் போல‌
வியட்நாமின் ‍ஹோசிமின் போல‌
கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ போல‌
சீனாவின் மாவோ போல‌
சிங்கப்பூரின் லீ குவான் யூ போல‌
இந்தியாவில் தேசத் தந்தை என இருக்கும் மகாத்மா காந்தியை பின் தள்ளி இந்த இந்திய நாட்டை கட்டமைத்த மாபெரும் தலைவராக கொண்டாடப் படுவார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

அமெரிக்காவில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது
ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திட்டம் நடந்திருக்கிறது
ஏன் நம் நாட்டிலேயே ராஜஸ்தானில் நடந்திருக்கிறது
ஆந்திரத்தில் சந்திரபாபுவால் நடத்தப்பட்டிருக்கிறது
இப்படி எல்லாம் நடத்தப்பட்டிருக்கும்போது ஏன் இந்தியா முழுதும் நடக்கக் கூடாதா? அந்த இந்தியாவின் நீர்ப்பாசனத் தந்தையான சர் ஆர்தர் காட்டன் 200 ஆண்டுக் கனவு மட்டும் நிறைவேறும் மாற்றம் வராதா என்ன? இந்த சர்தர் ஆர்தர் காட்டன் நம் நாட்டுக்கு செய்த சேவைக்காக அந்த ஆங்கிலேயெ நாட்டில் தண்டனை பெற்றதும் குடும்பத்தோடு விசாரணைக்குட்படுத்தப்பட்டு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டதும் சரித்திரம். அதன் அலை ஓயவே போவதில்லை வெற்றி என்ற இலக்கை எட்டும் வரை

நல்லவர்க்கு இறப்பே இல்லைஎனவே அவ்வப்போது அலையாக அலை அலையாக அனைவருள்ளும் எழுந்து அடங்கிக் கொண்டு போகும் இந்த மாபெரும் எழுச்சிக்கான முயற்சி அடங்காமல் சென்று  ஒரு நாள் நிறைவேறியே ஆக வேண்டும்தானே?

இந்தியாவில் உலகிலேயே மாபெரும் இளைஞர் சக்தி இருக்கிறது என்பதும், நமது நாட்டில் உள்ள இராணுவம், கப்பற்படை, விமானப்படை எல்லாம் 70 ஆண்டுமுன் இப்படியா இருந்தது இவை இன்று உலகிலேயே பெரும் சக்தியாக விளங்க வில்லையா? அவற்றை எல்லாம் பயன்படுத்தினால் சரியாக பயன்படுத்தினால் அதற்காகவே பயன்படுத்தினால் இந்த இலக்கை அடைய முடியாதா? நாங்கள் அவ்வப்போது இதைப்பற்றி எழுதினோம், பேசினோம், ஆனால் அதை ஒன்றை மட்டுமே பேசியும் எழுதியும் வந்திருந்தால் இந்த 17 ஆண்டுகளில் சில படிகள் ஏறியிருப்போம். ஆனால் ஆங்காங்கே விட்டு விட்டோம் ஆனால் இனி எமது மரணம் வரை இந்த தாகம் ஓயாது

எனக்கு ஏன் அந்தத் தகுதி இல்லையா? என உங்களுக்கு சான்றாக எனது சில குறிப்புகளை என்னப் பற்றிய குறிப்புகளைத் தருகிறேன். இந்த ஒரே கோரிக்கை மட்டும் நிறைவேற்றிவிட்டால் நிறைவேறி விட்டால் அதனுள் எல்லா கோரிக்கையும் அடங்கி விடும் நிறைவடைந்து விடும் என்பதால் இனி எங்கும் எப்போது இது பற்றியே மூச்சு விடத் தலைப்படுவோம். மூச்சும் பேச்சும் இனி அதுவாக இருக்கட்டும் .இல்லையேல் அந்த மூச்சும் பேச்சும் அதற்காகவே அடங்கிப் போகட்டும் என் கன்றின் கன்று எதிர்க்கட்டும், மறுபடியும் பூக்கட்டும்.... எனக்குள்ளும் குறை நிறை எல்லா மனிதரைப் போலவே இருக்கும் ஆனால் எடுத்திருக்கும் இந்த முயற்சி அதற்கான காரணம் அப்பழுக்கற்றது...வாருங்கள் அனைவரும் இந்தியாவை வளப்படுத்தும் ஒரு முழு முயற்சியை மேற்கொள்வோம், ஒரே எளிய முயற்சியை அடைய அடி எடுத்து வைப்போம்.

நன்றி வணக்கம்.

எனைப்பற்றிய சுய விவரம் இதோ:

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த…. 
±É ¯Õš츢 ¯ÕÅ¡¸¢...

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...

3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.6 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 2. அருமையான நம்பிக்கையுட்டும் சொற்கோப்பு வாழ்த்துக்கள் இணைகிறேன் நதி நீர் இணைப்பில் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. thanks Nagaikavin for your feedback on this post vanakkam.

   Delete
 3. அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. thanks for your feedback on this post sir. please unite your hand also.vanakkam

  ReplyDelete