Thursday, June 22, 2017

டென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவிஞர் தணிகை

டென்மார்க் கோபன்‍ஹேகனில் சில சிந்தனைத் துளிகள்: கவிஞர் தணிகை



டென்மார்க்கில்  வருமான வரி 46% அதில் குழந்தை வளர்ப்பு, கல்வி, மருத்துவம், வேலையில்லாதார்க்கு வாழ்க்கை பராமரிப்பு செலவு ஆகியவை அரசை சார்ந்தது.



திருடன் திருட்டு பயமில்லாததால் எவரும் வீடுகளை பூட்டி செல்ல வேண்டிய அவசியமில்லை அந்தக் கால தமிழர் பரம்பரையில் சொல்வது போல. எந்த நிறுவனத்துக்கும் பாதுகாவலர் இல்லை. அவரவர் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் செல்கின்றனர். வாரம் 5 நாள் வேலை. கடுமையான உழைப்பு. மீதம் 2 நாளை அவர்களை பிடிக்கவே முடியாது.

டேனிஷ் மொழி தெரியாமல் அங்கு வாழ்வது மிகவும் கடினம். தொடர்பு மொழி என்று ஆங்கிலம் எல்லாம் இல்லவே இல்லை. மிகவும் முன்னேறிய நாடுகளில் இந்த ஐரோப்பிய நாடும் இருக்கிறது.

இந்த நாட்டுக்கு குடியேறும் தென் ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்த சிலர் மட்டுமே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள். அதிகபட்சம் அனைவரும் மிதிவண்டியில் பயணம் செய்ய தனிப்பாதை இருக்கிறது. ஒரு மிதி வண்டியின் விலை இந்தியப் பணத்தின் படி 16 ஆயிரம் ரூபாய். சில மிதிவண்டிகளில் எந்த பாகமும் இருக்காது நாமாக வாங்கி பொருத்திக் கொள்ள வேண்டும் மிதிக்கும் பெடல் உட்பட.

அரசியல் கட்சிகள் உண்டு என்ற போதிலும் மற்ற கட்சிகள் ஆளும்போது கொண்டு வந்த நல்ல திட்டங்கள் பொறாமையால் நீக்கப்படுவதில்லை. மக்களுக்கு பயன்படும் என்றால் அது எல்லாத் திட்டங்களையும் அமல்படுத்தும்.

குடியுரிமை பெறுவதற்கு வழக்கம்போல மற்ற நாடுகளைப் போலவே முறைகள் உண்டு.

2013ல் செல்லும்போது வாங்கிய தயிர் ஒரு கப் விலை 10.95 என்றது இந்த ஆண்டும் 2017லிலும் அப்படியே மாறாமல் உள்ளது. கொஞ்சம் கூட பணவீக்கம் எல்லாம் இல்லை அப்படிப்பட்ட ஆட்சி முறைகள்.

மேலும் தகவல் தெரிந்து சொல்வேன்

எனது தங்கை மகள் காருண்யாவும் அவரது கணவர் ஜனார்த்தனன் மற்றும் அவர்களது குழந்தை கார்ணீஷ் அங்கு இப்போது வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பேசும்போது தெரிந்து கொண்டதே மேற் சொன்ன தகவல்கள்.
Image result for denmark copenhagen


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: