Thursday, March 7, 2019

D.M. ராஜாவுக்கு என் அன்பார்ந்த நினைவாஞ்சலி: கவிஞர் தணிகை

 டி எம் ராஜாவுக்கு என் அன்பார்ந்த நினைவாஞ்சலி: கவிஞர் தணிகை


Image may contain: 1 person, standing and sunglasses

34 வயது, நல்ல இளைஞர் மிகவும் கவர்ச்சிகரமான இளைஞராக விளங்கியவர் மதுவுடன் சகவாசம் வைத்ததால் இன்று மீளாத் துயில் கொள்ள போய்விட்டார்.

சம்பள உயர்வு பற்றி பேசலாம் அய்யா உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது நீங்கள் சொன்னால் கேட்பார்கள் அய்யா என்பார்.

என்னை அய்யா என்றுதான் கூப்பிடுவார். இப்போது சம்பள உயர்வு வந்த சூழலில் அதைப் பார்க்காமல் கூட உலக பல் மருத்துவர்கள் தினமான மார்ச். 6ல் மறைந்து விட்டார்.

மிகவும் திறமையான தொழில் வல்லமை உள்ள இளைஞர். டென்டல் மெக்கானிக். நன்றாக பல் செட்கள் செய்வதில் கை தேர்ந்தவர்.

மிகவும் ஸ்டைலாக இருப்பார்.பழக்கத்தின் கொடுமை அவருக்கு மஞ்சள்காமாலை கல்லீரல் தொற்று எல்லாம் ஏற்பட்டிருப்பதை அவர் கண்கள் வெணிவிழிபடலம் காட்டிக் கொடுத்த வண்ணம் இருந்தன.

எனது வரவேற்பறை மேசையின் அருகே வந்து பையை வைத்து சென்றது பசுமரத்தாணியாக பதிந்து போய்விட்டது.

நாம் எல்லாமே காரணம்.  போய்க் கொண்டிருக்கும் இவர் போன்ற உயிரை நம்மால ஏதாவது செய்து காப்பாற்ற முடிகிறதா? எனவேதான் சொன்னேன் நாம் எல்லாமேதான் காரணம் இந்த இளையவரைப் போன்றோர் இந்த மண்ணை விட்டுப் பிரிவதற்கு.

அரசின் மதுக்கடைகள் இது போல் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொள்ளப் போகிறது?

ஒரு நாள் மதியம் உணவு இடைவேளைக்குச் சென்றவர் சாக்லெட்களை வாயில் போட்டபடி மென்று கொண்டு வந்தார் , என்ன அது என்று கேட்டேன் உடனே கால்சட்டைப் பாக்கெட்டிலிருந்து கையை விட்டு சாக்லெட்களை எடுத்து நீட்டினார். எப்போதும் நான் மதியம் சாக்லெட்களை நிறைய வாங்கி வைத்து சாப்பிடுவேன் என்றார். நான் இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டு அதையே வீட்டிற்கும் கொண்டு வந்து கொடுத்தேன்.

மறுபடியும் இன்னொரு நாளும் அதே போலச் செய்தார்...நான் இனி எனக்காக நீஙக்ள் செலவு செய்ய வேண்டாம் இதுவே போதும் இனி வாங்காதீர்கள் எனக்கு கொடுக்காதீர்கள் எனக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

மற்றொரு நாள் வந்தவர் ஒரு மல்லிகை மணமுடைய ஒரு வாசனை தைலத்தை கொடுத்தார் இதை ஒரு மாணவரின் பெற்றோர் அரேபிய நாடுகளில் இருந்து வாங்கிக் கொடுத்தார்கள் நான் பயன்படுத்தப் போவதில்லை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் அய்யா என்றார். என்னிடம் கொடுக்க காசு ஏதும் இல்லை என்றேன். மாறாக எனது தயாரிப்பான புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.

 அவர் கல்லூரியில் ஒரு பிரச்சனையில் இருந்தார் ஆனால் அப்போதும் கையில் தொழில் இருக்கிறது வேறு கல்லூரி நிறுவனம் கூட செல்ல முடியும், அல்லது கிளினிக் போன்றவற்றிற்கு செய்து கொடுத்து சம்பாதித்தி விடலாம் என்றார் மிக‌வும் தைரியமாக.
Image may contain: 4 people
இவர் சுமார் 10 வருடங்களுக்கும் முன் மிகவும் அருமையாக இருப்பார் அப்போதே மணம் செய்திருந்திருந்தால் மிகவும் நல்ல பெண்கள் கிடைத்திருப்பார்க்ள் என்று அவரை அப்போது பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்.

இவர் போன்ற நபர் எல்லாம் பாஸ்போர்ட் எடுத்து விசாவுடன் வெளிநாட்டில் குடியேறி இருந்தால் குறைந்த பட்சம் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ஊதியம் ஈட்டி இருக்க முடியும். அப்படி ஈட்டி வருவார்கள் இருக்கின்றனர்.

ஆனால் இவரின் குடிப்பழக்கம் இவரைத் தின்று முடித்துவிட்டது...அவரின் நினைவு மட்டும் மிச்சம் விட்டு...

கல்லூரி பேருந்தில் என்னருகே முதல் இருக்கையில் பயணம் செய்து வரும்போது நான் வேடிக்கையாக அவரைக் கழுத்தை எல்லாம் பிடித்து நெரிப்பது போல பாசாங்கு செய்து விளையாடி இருக்கிறேன் வயது வித்தியாசமின்றி...

நான் பேருந்து ஏறும்போதே வணக்கம் அய்யா என்பார்...நான் பதில் வணக்கம் செய்தபடியே ஏறுவேன்....ஒரு மகிழ்வான தருணமாக அது அவர் இருக்கும்போதெல்லாம் இருக்கும்....இருந்தது... இனி...? முன்னால் ஓட்டுனரிடம் பாட்டிலில் இருந்து குடி நீரை வாங்கிக் குடிப்பார் என்ன காலையிலேயே தண்ணியா எனக் கேட்பேன்...அந்த ஓட்டுனரும் இவருடைய நெருங்கிய உறவினர் என்பதை இன்றுதான் அறிந்தேன் அந்த ஓட்டுனர்  வாயிலாகவே...
Image may contain: 1 person, text
அந்த இளைஞரை மறக்க முடியாது...மறக்கவே முடியாது... நான் இன்னும்கூட அவரிடம் நன்கு பழகி இருக்கலாமோ, கொஞ்சம் கட்டுப்பட்டுடன் நடந்து கொண்டதும் சரியோ என இப்போது தோன்றுகிறது

தனக்கென எவருமே அன்பு பாராட்ட இல்லையோ என ஏங்கி இருப்பாரோ

விடைபெற்றவருக்கு நான் எப்போது விடை கொடுக்கப்போவதில்லை..

எப்போதும் என் நினைவில் வாழ்வார் வாழ்கிறார்... மதியம் அவரின் தாய் செய்து கொடுக்கும் உணவை மதிய உணவாக எடுத்து வருவார் அந்த பெற்றவர்க்கு யாரால் என்ன கைம்மாறு செய்து விட முடியும்...

இயற்கையின் நியதியில் எல்லா உயிர்களும் அதில் ஒன்று ராஜாவுடையதுமாக‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment