Monday, March 25, 2019

கரு பழனியப்பன் தமிழா தமிழா விசு பழைய பேச்சரங்கம் சன் ஜெயா கோபிநாத் விஜய் டிவி, பாண்டே....கவிஞர் தணிகை

கரு பழனியப்பன் தமிழா தமிழா விசு பழைய பேச்சரங்கம் சன் ஜெயா கோபிநாத் விஜய் டிவி, பாண்டே....கவிஞர் தணிகை
Image result for talk shows in tamil t tvshows
கடந்த ஞாயிற்றுக் கிழமை உடல் நிலை சரியில்லாததால் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் துணைவியாரோடு சேர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படி நேர்ந்தது... ஆனால் அதற்கு முன் எஸ். ராமகிருஷ்ணனின் கார்ல் மார்க்ஸ் பற்றிய‌ 1.54 மணி நேர உரையையும் வலைதளத்தின் இணைய‌த்தில் யூ டியூப் வழி கேட்டேன். இன்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ள உடல் நிலை இடம் கொடுக்கவில்லை, எனவே சொல்லத் தகுந்த சில பகிர்வுகளை உங்களுக்காக பதிகிறேன்.

பொதுவாகவே எல்லாத் தொலைக்காட்சி தொடர்களும் ஒரே கருவில் ஒரே நடுத்தண்டில் பலரும் சேர்ந்து ஒரு சில நபர்களை சித்ரவதைப்படுத்தி வேதனை செய்து அத்திப் பூத்தாற்போல் ஒரு காட்சியில் அந்த சித்ரவதைப்பட்டவர்கள் ஒரு முறை அந்த சித்ரவதைப்படுத்தியவர்களை ஏறி ஏற்றம் கொண்டு வெல்வார்கள்...அதற்காக வருடக்கணக்காக நமது தாய்மார்கள் இந்த தொலைக்காட்சி தொடர்களுக்குள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

இவைதான் இப்படி என்றால் கோபி நாத், விசு இப்போது விட்டுவிட்டார், பாண்டே, இப்போது கரு.பழனியப்பன் போன்றோர் அவர்களின் தொடர்புடைய ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் பேச்சரங்கம் நடத்தி வருகிற நட்சத்திரங்கள்....மேலும் சனி ஞாயிறுகளில் எதை எடுத்தாலும் சிரிக்கவும் பாடவுமாக சில காட்சிகள்...அதற்கு கெக்க பிக்க என சிரித்து வாழும் தரம் கெட்ட இரசிகர் கூட்டம் தங்களது மேல் இந்த தொலைக்காட்சியின் ஒளி விழுந்தால் போதுமென  தறிகெட்டு ஆடுவதும் வித்தியாசமாக சேட்டைகள் செய்வதுமாக...எங்கய்யா தமிழ் நாடும் இந்திய தொலைக்காட்சிகளும் சென்று கொண்டுள்ளன.... மதுவை ஏன் நிறுத்தவில்லை எனில் அவர்கள் செத்துவிடுவர் என்கிறார் மந்திரி...சசிபெருமாளும், சின்னபையனும் கோவனும் செய்ததெல்லாம் என்ன ....செத்துப் போறவங்கெல்லாம் போங்கடா நாங்க வசதியாக வாழ்கிறோம் என்ற எண்ண முதல் வாதத்தை முதலில் விலக்கி வைத்து தொலைக்காட்சி நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்  இல்லையேல் அவற்றை தடைப்படுத்தியே தீரவேண்டும். மேலும் சீனா நம்மை விடப் பெரிய நாட்டில் வெல்வெட் சில்க் பாதை போட்டு உலகையே வளைக்க நினைக்கையில் இந்தியா தேர்தல் விளையாட்டில் கேவலப்பட்டு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுவுக்கு காசு கொடுக்கப்படுகிறதா என தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியரை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

சினிமாவே பார்க்காதவர்கள் நல்ல நிர்வாகிகளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும் இருப்பாரை நண்பர்களாகக் கொண்டிருப்பவன் அடியேன். ஆனால் அவர்கள் கவிஞர்களோ அல்லது கலைஞர்களோ அல்ல.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன் ஸ்டார் குழுமத்தின் வழியே இதுபோன்ற ஆங்கிலத்தின் மொழியில் பேச்சரங்கங்கள் நடைபெற்றன. அதில் ஓப்ரா வின்வ்ரேவும் அவருக்கும் முன் இருந்த ஒரு ஆண்நபரும் முக்கியமானவர்களாக இருந்து அந்த அமெரிக்க நாட்டுக்கே பிரபலமாகி இருந்தார்கள் .மேலும் போல்ட் அன்ட் பியூட்டிவுல், பே வாட்ச் போன்ற தொடர்களில் தாராளமாக தசைப் பரிமாற்றங்களும் அதில் நடிப்பார்கள் ஒவ்வொர்வருமே அடுத்த நபர்களின் மனைவியோடு உறவு வைத்திருப்பார்கள். மேலும் எல்லாருமே ஒவ்வொருவரையும் விவாகரத்து செய்து கொண்டு அடுத்தவருடன் சேர்ந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள்..
Related image
இவர்கள் இந்த அளவு செல்லவில்லையே தவிர மகாக் கேவலாமாக தொலைக்காட்சி பார்ப்போரை முட்டாள்காளாக்கி வருகிறார்கள்.

நான் சில பல தொலைக்காட்சி பேச்சரங்கம் மற்றும் சில பேட்டிகளில் என்னை ஆரம்ப நிலையில் உட்படுத்திக் கொண்டவன் தான். விசுவின் அரட்டை அரங்கம், பாஸ்கரராஜின் அகடவிகடம், பொதிகையின் பேட்டி, விஜய் தொலைக்காட்சியின் த்ரிசா எனை செய்த தொலைக்காட்சி வழிப்பேட்டி, பல பரிசுகள், இப்படியே போகும்...ஆனால் வாய்ப்பு கிடைத்தால் போதும் என ஏங்கிக் கொண்டிருப்பவன் அல்ல.

இப்போது நான் சொல்ல வந்தது: கரு பழனியப்பன் தமிழா தமிழா பேச்சரங்கத்தில் ஒரு புறம் செலவு செய்வாரும் மறுபுறம் சிக்கனமாக இருப்பாரும் என்ற காட்சி. .. ஒரு நபரைக் கேட்கிறார். அவர் சொல்கிறார் 9 ஆண்டுகளாக இதே மிதியடியை செருப்பை நான் உபயோகித்து வருகிறேன் என்றவுடன் கரு பழனியப்பன் கமென்ட்: என்ன நீங்க செருப்பை கையிலதான் எடுத்துக் கொண்டு போவீர்களா என நக்கல் அடித்து அந்தக் காட்சியில் அந்தக் கருத்தைப் பேசியவரை மட்டம் தட்டுகிறார். உடனே காட்சி மாறுகிறது..

அப்படி எல்லாம் இருந்தால் தாம் விசுகூட ஒத்துக் கொள்வார் அவரது பேச்சரங்கில் கலந்து கொள்ள அனுமதிப்பார். எனவே அவருக்கும் எனக்கும் பல நிலைகளில் முரண்  ஏற்பட்டு  2000 ஆண்டில் தாரமங்கலத்தில் நடைபெற்ற சன் டிவியின் பேச்சரங்கோடு எனது தேர்வு விட்டுப் போனது மட்டுமல்லாமல் கடிதத் தொடர்பு மட்டுமே இருந்தது.. 3 கடிதம் எனக்கு எழுதியிருக்கிறார்.

அகடவிகடத்தில் அப்துல் காதிர் எனது உ ரையை வெகுவாக பாராட்டினார்.அப்போது நாஞ்சில் சம்பத், வி.ஜி. சந்தோசம் போன்றோரும் உடன் இருந்தனர். பவானியில்.

அடுத்து தொலைவான ஊர்களுக்கு என்னால் வந்து கலந்து கொள்வதை எனது உடல் இடம் கொடுக்காது என சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.

கரு பழனியப்பனுக்கு வருகிறேன்: ஒரு பெண் மாதத்திற்கு 3 செருப்பு கணவர் அல்லது அத்தை ஆகியோரின் பணத்தை எடுத்து வாங்கிக் கொள்வேன் என்றார் அது எதற்கு என்ற தொக்கி நின்ற தொனி அதில் எதிர்மறை பொருளைத் தருவதாக இருந்தது.

மேலும் ஒரு கனடாவில் மேல் படிப்பு படித்த  பணியில் இருக்கும்ஒரு இளைஞர் சுமார். 3. 5 இலட்சத்திற்கு கேஜட்ஸ் வைத்திருப்பதாகவும் அவரது நண்பர் ஒருவருக்காக ஸ்போர்ட்ஸ் காரின் டயரை 8 டயரை தேய்த்ததாகவும் அதன் விலை சுமார் 8  பெருக்கல் 30 ஆயிரம் ஆக சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்றும் அவரைப்பற்றியே அதிகம் ஸ்பேஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். திரு வள்ளியப்பன் அழகாக தமது கருத்தை நிலைநாட்டினார் வாரன் பவ்வட்  பற்றி இன்போஸிஸ் நாராயண சாமி ஆகியோரின் எளிமை பற்றி... இந்த பட்டியலில் ஜாம்செட்ஜி டாட்டா, சுந்தர் பிச்சை, ஏன்  பில்கேட்ஸ் உட்பட பலரும் தாம் சம்பாதிப்பதில் பெரும்பாலும் உலக மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.
Image result for talk shows in tamil t tvshows
ஒரு பெண் 600 காதணி வைத்திருப்பதாக பெருமையுடன் சொல்ல அதை கரு.பழனியப்பன் அதை அணிய இரண்டாண்டுகளுக்கும் மேலாகுமே...

இப்படியேதான் பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துகளுக்கு அதிகம் வாய்ப்பும், நேர்மறை கருத்துகளுக்கு மூக்கறுப்புகளும் மட்டம் தட்டுவதுமாகவே இந்த கரு பழனியப்பன், விசு, கோபிநாத், பாண்டே போன்றோர் காட்சிப்படுத்தி வருவது கண்கூடு. இவர்களின் நோக்கம் என்ன இவர்கள் எதற்காக் இயங்குகிறார்கள் என்பதை கொஞ்சம் ஆய்வு மனப்பான்மையில் பார்த்தால் விளங்கி விடும்...ஜீ தமிழ் விஜய் டீவி  சன் டீவ் ஆயிரக்கணக்கான டிவிக்களை எல்லாம் தடை செய்தால் நாடு உருப்படும்.

 மதுரை வரும்போதுதான் தமிழ்பெண்ணைப் பார்த்த பின் தான் மகாத்மா மேலாடையை கைவிட்டார். வின்ஸ்டன் சர்ச்சில் கேலி செய்தபோதும் அதற்கு பதிலடி கொடுத்தபடியும் இயங்கினார்

ஒரு பக்கம் மது கொண்டு அரசு மக்களை பந்தாடிக் கொண்டிருக்கும்போது இந்த ஊடகத்தினர் போதையில் பாதை மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பார்ப்போரை...

என்னிடம் இருக்கும் ஒரு ரே பேன் கண்ணாடி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக‌

ஒரு டி சர்ட் ஹைதராபாத் சர்மாவில் எடுத்தது இன்னும் 30 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் எனது பயன்பாட்டில்

1997 டிசம்பர் 4ல் எடுத்த ஒரு திருமணத்திற்கான சட்டை இன்னும் பேர் சொல்ல கிழிந்தாலும் இருக்கிறது.

ஒரு கைக்கடிகாரம் 1996ல் இருந்து  பயன்பாட்டில்

1079ல் இருந்து எங்களது வீட்டில் ஒரு பிம் bim bam பாம் சுவர்க்கடிகாரம்  40 ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வந்தது இப்போதுதான் ஓய்வெடுத்துள்ளது..

இவை எல்லாம் என்ன கேவலமா? மேலும் இந்தக் காட்சிகளின் வழியே நகர்புறக் கலாச்சாரம் பற்றியே இந்த காட்சிகள் நகர்ந்தவண்ணம் இருக்கின்றன அவை பெரும் கவலைக்குரியது... பழமை என்றால் பெருமையுடையது... பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருட்களால் இந்த பூமி பந்தே புழுங்கிப் போய் வருகிறது. ஒரு நபருக்கு எதற்கு பல செல்பேசிகள் வகைக்கொன்றாக... அதிலும் பிராண்ட் நியூவாக...

சொந்த பெற்றோரை பேணாத சமுதாய அமைப்புதானே இது.. மேலும் இவர்கள் காட்சிகளை பார்க்க ஆரம்பித்த உடனே இவர்கள் எல்லாம் பெரிய ஹீரோக்களாகிவிடுகிறார்கள்...


எல்லாரையுமே சொல்கிறேன் அது விசு முதல் கரு பழனியப்பன் வரை...கரு பழனியப்பன் சதுரங்கம் பார்த்திபன் கனவு போன்ற நல்ல படங்களைத் தந்தவர் இப்போது இப்படி ஆகிவிட்டார்.

எல்லாம் பிழைப்புக்காகவா...இல்லை உண்மையிலேயே தட்டி எழுப்பும் எழுச்சிக்கான குரலை பதிவு செய்கிறார்களா? பார்க்க வருவாரை முதலில் அவமானப்படுத்தும் செயல்பாடுகளை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நானா இருந்திருந்தால் அந்த காட்சி எப்படி இருந்திருக்கும் என யோசனை செய்யும்போதே எனக்கு .....

சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை மறந்தாரடி  கிளியே
செம்மை மறந்தாரடி...

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...



எனது 20 வயதுக்கான மகன் குழந்தையாக வெயில் காலத்தில் போட்ட ஒரு மெல்லிய சிறிய சட்டை இன்னும் எங்கள் நினைவுக்கு., பழைய பொருட்களை சேகரிப்போர் கண்டால் பாராட்டாதார் வரலாறும் சரித்திரமும் படித்து என்ன...தாஜ்மஹால் பழுப்படைந்து விட்டது ... இந்த புதிய கேஜட்ஸ் பார்ட்டிகளால்...

இந்த கேஜட்ச் gadgets  டயர் தேய்த்த காசை எல்லாம் ஒரு கிராமத்துக்கு சென்று குடிநீருக்கு ஏற்பாடு செய் இளைஞரே உனை அந்த மக்கள் கடவுளாக்கி போற்றுவார்கள்...பதர்களாகி விடாதீர். தானிய மணிகளாகி களம் காணுங்கள் புதையுண்டாலும் சிதையுண்டாலும் புதுச் செடியாகி பூப்பூப்பீர்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.









No comments:

Post a Comment