Thursday, March 14, 2019

அரச இலை ஆட்டம்: கவிஞர் தணிகை

அரச இலை ஆட்டம்: கவிஞர் தணிகை


Related image

இரட்டை இலை எம்.ஜி.ஆர். ஜெ இல்லாமல் முதல் முறையாக தேர்தல்களை சந்திக்க வருகிறது. ஆனால் அவர்கள் இருவரின் பேரை வைத்தே..

தேர்தலே இல்லாமல் எடப்பாடி ஜெ இறக்கவும், சசி சிறை செல்லவும், ஓ.பி.எஸ் வழி காட்டி தற்காலிக முதல்வர் பதவியிலிருந்து இறங்கவும் பதவி, பணம், பேரம்  நீதிமன்ற உதவி போன்றவற்றின் மேல் ஆதாரம் கட்டி பதவியைத் தக்க வைத்துக் கொண்டது தேர்தலே இன்றி...

அப்படிப் பார்த்தாலும்  தினகரன் தனியே பிரிந்து இராதாகிருஷ்ணன் நகரில் கட்சியாவது தலைமையாவது என பணத்தாலேயே அணுகுமுறை தெரிந்து எல்லாப் பெரிய கட்சிகளையும் ஈட்டுத் தொகையே இழக்க வைத்து வெற்றி வாகை சூடினார். ஆனாலும் அவையும் தேர்தல் ஆணையத்தின் விதி மீறலே.

அது ஒரு தொகுதி...அனால் 40 பாராளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டமன்றத் தொகுதியையும் அப்படி கைப்பற்றி விட முடியாது எனவே கூட்டணிகள் பாமக தேமுதிக எலலாம் வளைத்து போட்டபடி..

அப்படி இந்த அணி வெற்றி பெறுமானால் பாரதிய ஜனதா கட்சி  தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கே சாதகமாக இருக்கும்.

இந்த அளவு கட்சியை நெல்லிக்காய் மூட்டையாக சிதற விடாமல் கட்டிக் காத்ததே இ.பி.எஸ் அரசியல் உத்தி மூலம் பெற்ற வெற்றியாக இருக்கும் மற்றபடி இலவசம் ஆயிரம் ரூபாய் பொங்கலுக்கும் அதன் பின் இந்த இரண்டாயிரம் எல்லாம் பயனளிக்கும் திட்டம் என அவர்கள் போட்டிருக்கும் கணக்கு அம்பலத்தில் ஏறுமா என்பது தெரிய இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியிருக்கிறது

அதற்குள் மரத்தின் இலைகள் எல்லாம் கொட்டி மழையும் இல்லாமல் இருக்கும் கொஞ்சம் இலைகளும் காற்றில் அசைந்தாடி கலகலத்து வருவது  பொள்ளாச்சி மினிஸ்டர் ஆட்சி ஆச்சி பேச்சி போச்சு என்பதாக எல்லாம் தெரியவருகிறது...
எப்படியும் வாக்கு வங்கிகள் இருக்கின்றன அவை மாறாமல் நமக்கே விழும் என்னும் கணக்கை போட்டுக் கொண்டே இந்தக் கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டு களம் காண வருகிறது ஆளும் கட்சி...மேலும் அடுத்து சட்டசபை பலம், ஊராட்சி தேர்தல் இப்படி பலவிதமான பரீட்சைகள் இருக்கின்றன ...தாங்குமா தாக்குப் பிடிக்குமா  முழு காலமும் நிறைவேறி நிறைவேற்றுமா என்பதெல்லாம் அடுத்து அடுத்து நாம் காணப்போகும் காட்சிகள்...

எதிர்க்கட்சி கூட்டணி பெரிய வலுவான அளவில் இல்லை என்றும் இவர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள். மக்கள் போடும் கணக்கு எப்படியோ அதைப் பார்ப்போம்



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment