Friday, March 22, 2019

பங்குனி உத்திரப் பெருவிழா: கவிஞர் தணிகை

பங்குனி உத்திரப் பெருவிழா: கவிஞர் தணிகை

https://www.facebook.com/tanigaiezhilan/videos/pcb.2328786477172712/2328776780507015/?type=3&theater


முருகன் எனைத் தேடி வந்தானோ? இயற்கை எனை வேண்டி விரும்புகிறதோ?

முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி , அவனுக்கு திருமணமாகி வள்ளி தெய்வானை என இரண்டு மனைவிகள் இருந்தும் இன்னும் குழந்தை இல்லையா என்றெல்லாம் நாத்திகம் நானும் பேசியதுண்டு.

ஆனாலும் இயற்கை எனக்குப் பல்வேறு கட்டங்களில் தனது வேடிக்கை விளையாட்டுகளாய் மாந்தரை மீறிய சக்தி இருப்பதாக புலப்படுத்தியதுண்டு. அதாவது ஸ்தூல சரீரமாய் இருக்கும் உடலும் சதையும் எலும்பும் இரத்தமுமாக இருப்பதையும் மீறிய இயக்கம் உண்டு என்பதில் எனக்கு நிறையவே அனுபவங்கள் உண்டு.

எனக்கு பெயரே மேட்டூர் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைத்ததாகச் சொல்வார்கள் எனது பெற்றோர். அந்த கோவிலில் பிரதோஷ நாளில் எனது மகன் பிறந்த அன்று வீட்டுக்கு சென்று  பார் நல்ல செய்தி காத்திருக்கிறது என்ற வாக்கு கூட வந்திருந்தது.. அங்கு சென்று ஒரு காலக் கட்டத்தில் என்னால் முடிந்த சேவையை நான் ஆற்றியதுண்டு.

அதை எல்லாம் விடுங்கள். இதை மட்டும் எடுத்துச் சொல்கிறேன். பங்குனி உத்திரம் தேர் வந்து கொண்டிருக்கிறது இருங்கள் பார்த்து விட்டுப் போகலாம் அல்லது அந்தப் பக்கம் ஒரு சுற்றி சுற்று விட்டு நடைப்பயிற்சி தொடரலாம் எனக் கூறினார் பிரபு ராஜேந்திரன். இல்லாவிட்டால் ஒரு அரைமணி நேரம் இருங்கள் வந்து விடும் என்றார். ஆனால் அதை எல்லாம் நான் ஏற்கவில்லை.

நடைப்பயிற்சிக்கு வழக்கம் போல புறப்பட்டுத் திரும்பினேன். திரும்பி வரும்போது சாலையில் சற்று தொலைவில் ஒரே வண்ண மயமாய் வேடிக்கையாய் காட்சி மிகவும் பெரியதாக தென்பட்டது.
https://www.facebook.com/tanigaiezhilan/videos/2328780667173293/
அங்கிருந்த சில அறிமுகமான நபர்கள் அது அப்படியே கீழே போகும் ஒரு எட்டு பார்த்துவிட்டு அப்படியே திரும்பலாம் என்றார்கள்...அந்த வேடிக்கையைப் பார்த்து இரசித்தபடி அது எப்படி இருக்கிறது எனப் பார்க்க சற்று அருகில் போனேன். பிரமிப்பூட்டும்படியான வண்ண விளக்குகளால் ஆன அலங்காரம்.

மேலே மடிப்பு பக்க வாட்டில் மடிப்பு என வீதிக்குத் தக்கபடி சாலைக்குத் தக்கபடி அலங்காரத் மின்விளக்குத் தட்டிகளை விரித்தும் சுருக்கியும் அலங்காரம்.

மாயா உலகாய் அந்த 8 மணி இருளில்...பிரமையை ஒரு மயக்கத்தை தோற்றுவித்தபடி இருந்தது. உண்மையிலேயே இது போன்ற மயக்கம் தருவதுதானே ஏதோ இருக்கிறது என்ற நினக்கத் தோன்றுவது நினைக்கத் தூன்டுவதுதானே பக்தி பாவனை. யாவும்.

அருகே சென்று ஈர்க்கப்பட்டு சில காட்சிகளைப் பதிவு செய்து கொண்டேன். புகைப்படம் மட்டுமே ஓரிரண்டு... காட்சி ஓட்டங்களை பதிவு செய்ய முயன்று எடுக்காமல் விட்டிருந்தேன்.

 திரும்பி வந்து விட்டேன் அதன் பின் மறுபடியும் சென்று  காட்சி ஓட்டங்களையும் பதிவு செய்து விடலாம் என எண்ணியிருக்க பழனி வந்து சோர்ந்திருந்தபோதும் எனக்காக இருசக்கர வாகனத்தில் கொஞ்சம் தூரம் கொண்டு வந்து விட....மறுபடியும் காட்சிப்பதிவுகள் செய்து கொண்டேன். ஆனால் அங்கிருந்த எனது ஆசிரியச் சகோதரியிடம் படித்த மாணவர்கள்தாம் அனைவரும் எனக்கு வாங்க சார் வாங்க சார் என ஏகப்பட்ட அழைப்புகள்...அங்கே ஒரு வீட்டில் ஊர்வலத்தில் வருவார்க்காக பாயச டம்ளர்கள் வேறு...

இரண்டு மணி நேர நடைப்பயிற்சிக்கும் பின் இந்த பாயசம் குடிக்க வற்புறுத்தப்பட்டதால் விலக்க வில்லை இனிப்பு சாப்பிட வேண்டாம் என்றிருந்த  எண்ணத்தை அப்புறம் தள்ளி விட்டு வாங்கிக் குடித்தேன்.

எல்லாமே அந்தக் காட்சிகள், அந்த இரவு, அந்த ஜோடனை, அந்த பாயசம் எல்லாமே நான் கேட்காமல் திட்டமிடாமல் அதுவாக அமைந்திருந்தது. மறக்க முடியாததாகிவிட்டது.

பொதுவாகவே உற்சவ ஊர்வலம் என்பது முடியாதவர்களுக்காக அதாவது கோவில் சென்று பார்க்க கடவுளைப் பார்க்க முடியாதவர்களுக்காக என்று சொல்வார்கள் ஆனால் அனைவரும் கடவுளை நாடி கோவில் செல்ல சரியான நல்ல தொண்டர்களை சேவையாளர்களை நோக்கி கடவுளே வருவார் என்பதற்கேற்ப அன்றைய தினத்தில் எனது திட்டமிடலுக்கும் அப்பாற்பட்டு வழியில் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்திருந்தது அந்த பங்குனி உத்திரப் பெருவிழாவின் செந்தில் முருகன் உற்சவ ஊர்வலம் எனக்கு.

அது மலைக்கோயிலில் இருந்து மக்களை நோக்கி புறப்பட்ட ஊர்வலம்.
தேர் அலங்காரம் பவானி ஈரோடு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதை ஏற்பாடு செய்த எமத் புதுரெட்டியூர் இளைஞர் குழுவினர் தெரிவித்தனர். எல்லாம் நமது அப்துல்கலாம் மக்கள் இயக்கத்தின் போது நமக்கு உறுதுணையாக இருந்த இளையோர் குழுவினர்தாம்... நமது அடுத்த வாரிசுகள் குறிப்பிடத்தக்க மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இந்த பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டத்தை நடத்தி இருந்தனர்.

முருகன் என்பான் மால் மருகன்...அவனது குடும்பம் சொந்தம் பந்தம் இது போன்ற  கருத்து எல்லாம் பக்தி மார்க்கத்தில் உண்டு...அதை எல்லாம் நம்பத் தயாரில்லாத எனக்கும் ஒரு இயறகையின் கை காட்டல் அடிக்கடி நடந்ததுண்டு... அது கபாலீஸ்வரர் கோவில் கட்டும் பணிகளின் போதாகட்டும், இப்போது இருக்கும் கல்லூரிப் பணியில் சென்றமர்ந்ததாகட்டும் எல்லாமே ஒரு சொல்லி வைத்த இயக்கமாகவே இருக்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment