Wednesday, March 6, 2019

1862ல் கட்டப்பட்ட சேலம் மத்தியச் சிறையில் பல் பரிசோதனை முகாம்:கவிஞர் தணிகை

1862ல் கட்டப்பட்ட சேலம் மத்தியச் சிறையில் பல் பரிசோதனை
முகாம்:கவிஞர் தணிகை

Image may contain: 11 people, including ArUn ViGgness, people smiling, people standing


கடந்த வருடம் இதே போல் இந்த முகாம் நடந்தது என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த முறையும் முதலில் வேண்டாமே என்றுதான் சொன்னேன் அதன் பின் அதன் முக்கியத்துவம் கருதி வந்து கலந்து கொள்வதாக டாக்டர் பரத்திடம் சம்மதம் தெரிவித்தேன்.

1862ல் கட்டிய பழமை வாய்ந்த கட்டடம் என முன் வாயிலில் ஆண்டு கணக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அங்கு உயர உயர இருந்த கட்டடங்கள் தனியறைகள் சிறைப் பிரிவுகள் தொழிற்கூடங்கள் என 25 ஏக்கருக்கு பரப்பில் இந்த சேலம் மத்திய சிறை விரிந்து கிடக்கிறது.

 நாங்கள் 12 பேர் கொண்ட பல் மருத்துவக் குழு  சிறையின் கண்காணிப்பாளர் தற்போது உயர் திரு தமிழ்செல்வன் IPS  இருக்கிறார். அவரது பேருக்காகவே அவரது பெயரை மேடையில் உச்சரித்து நன்றி பாராட்டினேன்.

எங்கள் கல்லூரிக்கும் சேலம் மத்திய சிறை அலுவலர்களுக்கும் ஊடகமாக  மாண்ட் ஃபோர்ட் தொண்டு நிறுவனம் இருந்து ஒருங்கிணைப்பு செய்தது அந்த சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் நன்றி பாராட்டினோம் மேலும் எங்களது முகாம் நிறைவடையும் வரை எந்தவித தவறுதலுமின்றி மிகவும் தெளிவாக திட்டவரைவுகள் நடந்தேற துணைபுரிந்த காவலர்களை பாராட்டியே தீரவேண்டும்.

துவக்க விழாவை மத்திய சிறையின் தலைவரும் துணைத்தலவரும் ஆரம்பித்தனர். சகோதரியும் அறிமுக உரை செய்தார். டாக்டர் பரத் பல் துலக்குவது பற்றிய மாதிரியுடன் விளக்கினார்.

சிறையின் மருத்துவரும் சில வார்த்தைகள் பேசினார்.

வழக்கம்போல நான் எனது பயனுள்ள உரையை அடையாளத்துடன், கவன ஈர்ப்புடன் கேட்பவர்க்கு பயனாகும் வண்ணம் முக்கிய செய்திகளுடன் கல்லூரி பற்றிய விவரங்களுடன் பல் மருத்துவ சேவை பற்றிய மாண்புடன் விளக்கினேன். இடையே லிங்கன் காந்தி ஸ்மேட்ஸ் துரை வாய் சுத்தம் புற்று நோய், மாரடைப்பு, எங்களது அகில இந்திய சிறுவர் பல் மருத்துவத் தலைவர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான், சமுதாயத் துறைத் தலைவர் சரவணன் ஆகியோர் பெயரையும் குறிப்பிடத் தவறவில்லை.

கல்லூரியின் சலுகைகள் பங்கு பணிகள் சேவைகள் யாவற்றையும் பற்றிக் குறிப்பிட்டேன்.

பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. பிரமிப்புடன். பிரமையை ஏற்படுத்தும்படி...அங்குள்ள மருத்துவ மனையைச் சென்று பார்த்தோம். உயர் பாதுகாப்பு எனக் கொடுத்துள்ள‌ ஒரு கைதிக்கும் சென்று பரிசோதனை செய்தனர் எமது மருத்துவர்கள்.

அந்தக் காலக்க்கட்டத்தில் வெள்ளைக்காரர்கள் கட்டிய கட்டடம் எல்லாம் எப்போதுமே இப்படித்தான் வலுவாக மிக உயரமாக எக்காலத்திலும் பேர் சொல்லும்படி அது இந்த சிறையாகட்டும், எமது மேட்டூர் அணையாகட்டும், அவர்கள் கட்டி இப்போது நடத்த முடியாமல் கால வெள்ளத்துள் கலைந்து போன எங்கள் குடும்பம் எல்லாம் மலரக் காரணமான மில் தொழிற்சாலை ஆகட்டும்... பெரு உழைப்பு அவற்றில் எல்லாம் உள்ளதை வாய் திறந்து ஆச்சரியத்துடன் மட்டுமே பார்க்க முடிகிறது.

நன்றாக தூய்மையாக பராமரித்து வருவதை நாங்கள் பார்த்தோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment